Jio 5G Phone அறிமுகத்தை உறுதி செய்தது ரிலையன்ஸ்.! என்ன விலையில் எப்போது வாங்கலாம்?
இருக்கு ஆனா இல்லை, இல்லை ஆனா உறுதியா இருக்கு என்று நீண்ட காலமாக ஒரு புதிராக இருந்து வந்த ஜியோவின் புதிய Jio 5G Phone குறித்த விபரங்கள் இப்போது ஒரு வழியாக வெளியாகியுள்ளன. ஆம், நீண்ட காலமாக ஜியோவின் ஸ்மார்ட்போன் வரிசையில், இந்த ஆண்டு ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடல் 5G சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், இதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்காமல் ரசிகர்கள் குழப்பத்துடனேஇருந்து வந்தனர்.

RIL AGM 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன்
ஆனால், இறுதியாக, நேற்று நடைபெற்ற RIL AGM 2022 நிகழ்வில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த விபரங்களைப் பகிர்ந்துகொண்டது. ஜியோவின் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக 5ஜி இணக்கத்துடன் இயங்கும் ஒரு புதிய டிவைஸை நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவிருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. எதிர்பார்த்துக் காத்திருந்த ஜியோ ரசிகர்களுக்கு இந்த செய்தி உண்மையிலேயே மகிழ்ச்சியை வழங்கியுள்ளது.

Jio 5G Phone டிவைஸை இந்தியர்கள் எப்போது வாங்க முடியும்?
உறுதியாக ரிலையன்ஸ் ஜியோ ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை 5ஜி இணைப்புடன் அறிமுகம் செய்யப் போகிறது என்பது நமக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஆனால், இந்த புதிய ஜியோ 5ஜி போன் (Jio 5G Phone) சாதனத்தை நாம் இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்க முடியாது என்பது தான் வேதனை. ஆம், முகேஷ் அம்பானி வெளியிட்ட தகவலின் படி, இந்த ஜியோ 5ஜி போன் சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ 5ஜி போன் மிகவும் மலிவு விலையில் வெளிவருமா?
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை உருவாக்குவதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைத்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ 5ஜி போன் மிகவும் மலிவு விலையில் இருக்கும் என்றும் அம்பானி தெரிவித்திருக்கிறார். தற்போது, சந்தையில் ரூ.20,000 விலை பிரிவில் கிடைக்கும் 5G போன்கள் நிறைய உள்ளன.

புதிய Jio 5G Phone சாதனத்தை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
ஆனால், அறிமுகம் செய்யவிருக்கும் புதிய Jio 5G போன் இந்தியாவில் ரூ. 15,000 என்ற விலைக்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜியோ இந்த ஸ்மார்ட்போனை தரமான சாதனமாக உருவாக்க, Qualcomm நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மை ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Jio 5G Phone சக்தி வாய்த்த குவால்காம் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படுமா?
இதன் மூலம் வரவிருக்கும் ஜியோ 5ஜி போன் சாதனம் ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளிவரும் என்பதை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படும் என்பதனால், இதில் நாம் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 400 சீரிஸ் சிப்செட்டை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது 5ஜி இணக்கத்துடன் செயல்படக்கூடிய சக்தி வாய்ந்த சிப்செட் மாடலாகும்.

பலே..பலே.! ஜியோவின் 5ஜி சேவை இந்த நாளில் பயன்பாட்டிற்கு கிடைக்குமா?
இதற்கிடையில், ரிலையன்ஸ் ஜியோ இந்த ஆண்டு தீபாவளியின் போது மக்களின் பண்டிகையை மேலும் சிறப்பிக்கும் விதமாக புதிய 5G சேவைகளை நாட்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. இது உண்மையிலேயே ஒரு நல்ல செய்தி. இதே நேரத்தில் தான் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் முதலில் ஜியோ 5ஜி சேவை எங்கு அறிமுகம் செய்யப்படுகிறது?
டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் முதலில் 5ஜி சேவை வழங்கப்படும் என்று ஜியோ அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த அடுத்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களில் 5ஜி சேவையை ஜியோ அறிமுகம் செய்யுமென்றும் அறிவித்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவின் 5ஜி கட்டணம் மிகவும் மலிவானதாக இருக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications