5ஜி போனாவே இருந்தாலும் Jio 5G அதில் எடுக்காது! லிஸ்ட் இல் உள்ள போன்களுக்கு மட்டுமே ஜியோ 5ஜி..

|

ஜியோ 5ஜி சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகங்களில் கிடைக்கிறது. இந்த பகுதியில் 5ஜி போன் வைத்திருக்கும் அனைவரும் ஜியோ 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்த முடியுமா என்றால் அது முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 5ஜி போன்களுக்கு மட்டுமே 5ஜி அணுகல் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட பேண்ட்கள் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஜியோ 5ஜி சேவைகள் கிடைக்கும்.

ஜியோ 5ஜி சேவை குறித்த முக்கிய தகவல்

ஜியோ 5ஜி சேவை குறித்த முக்கிய தகவல்

ஜியோ 5ஜி சேவை எந்தெந்த நகரங்களில் எப்போது தொடங்கும் என்ற தேதியும் அது கிடைக்கத்தொடங்கும் போதும் அறிவிக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

MyJio செயலி மற்றும் இணையதளத்தின் மூலம் இந்த தகவலை அறிந்துக் கொள்ளலாம். 2023க்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோ அறிவித்துள்ளது. நீ

ங்கள் தற்போது 5ஜி சேவை கிடைக்கும் பகுதியில் இருக்கிறீர்கள், கையிலும் 5ஜி போன் இருக்கிறது ஆனாலும் 5ஜி நெட்வொர்க் கிடைக்கவில்லை என்றால் உங்கல் மொபைலின் இணக்கத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.

எந்தெந்த போனில் 5ஜி ஆதரவு கிடைக்கும்

எந்தெந்த போனில் 5ஜி ஆதரவு கிடைக்கும்

இந்த மூன்று பேண்டுகள் இருக்கும் 5ஜி போன்களில் மட்டுமே ஜியோ 5ஜி ஆதரவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

நீங்கள் புது போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இந்த மூன்று பேண்டுகள் இருக்கும் 5ஜி போன்களை வாங்கவும். என்ன பேண்ட் என்று பார்க்கையில் அது n28, n78, n258 ஆகும்.

உங்கள் போனில் 5ஜி ஆதரவு கிடைக்கவில்லை என்றால் ஓஇஎம் அப்டேட்டுக்கு காத்திருக்கவும், அந்தந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் 5ஜி புதுப்பிப்புகளை வழங்கி வருகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

எந்தெந்த போன்களில் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் என இந்தியா டுடே தளத்தில் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி 8எஸ் 5ஜி, ரியல்மி எக்ஸ்7 மேக்ஸ் 5ஜி, ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி, ரியல்மி எக்ஸ்7, எக்ஸ் 7 ப்ரோ 5ஜி, ரியல்மி 8 5ஜி, ரியல்மி எக்ஸ் 50 ப்ரோ, ரியல்மி ஜிடி 5ஜி, ரியல்மி ஜிடி எம்இ, ரியல்மி ஜிடி நியோ2, ரியல்மி 9 5ஜி, 9 ப்ரோ, 9 ப்ரோ ப்ளஸ், நார்சோ 30 5ஜி, ரியல்மி 9 எஸ்இ, ரியல்மி ஜிடி2, ரியல்மி ஜிடி நியோ3, ரியல்மி நார்சோ 50 5ஜி, ரியல்மி நார்சோ 50 ப்ரோ

சியோமி ஸ்மார்ட்போன்

சியோமி ஸ்மார்ட்போன்

எம்ஐ 10, எம்ஐ 10ஐ, எம்ஐ 10டி, எம்ஐ 10டி ப்ரோ, எம்ஐ 11 அல்ட்ரா, எம்ஐ 11எக்ஸ் ப்ரோ, எம்ஐ 11எக்ஸ், போக்கோ எம்3 ப்ரோ 5ஜி, போக்கோ எஃப்3 ஜிடி, எம்ஐ 11 லைட் என்இ, எம்ஐ 11ஐ ஹைப்பர் சார்ஜ், ரெட்மி நோட் 10டி, ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ், போக்கோ எம்4 5ஜி, போக்கோ எம்4 ப்ரோ 5ஜி, எம்ஐ 12 ப்ரோ, எம்ஐ 11ஐ, ரெட்மி 11 பிரைம், போக்கோ எஃப்4 5ஜி, போக்கோ எக்ஸ்4 ப்ரோ, ரெட்மி கே50ஐ

ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ ரெனோ 5ஜி ப்ரோ, ஒப்போ ரெனோ 6, ஒப்போ ரெனோ 6 ப்ரோ, ஒப்போ எஃப்19 ப்ரோ ப்ளஸ், ஒப்போ ஏ53, ஒப்போ ஏ74, ஒப்போ ரெனோ 7 ப்ரோ 5ஜி, ஒப்போ எஃப்21 ப்ரோ 5ஜி. ஒப்போ ரெனோ7, ஒப்போ ரெனோ 8, ஒப்போ ரெனோ 8 ப்ரோ, ஒப்போ கே10 5ஜி, ஒப்போ எஃப்12எஸ் ப்ரோ 5ஜி

ஐக்யூ ஸ்மார்ட்போன்

ஐக்யூ ஸ்மார்ட்போன்

ஐக்யூ 7, ஐக்யூ 3 5ஜி, ஐக்யூ7 லெஜண்ட், ஐக்யூ இசட் 3, ஐக்யூ 9 ப்ரோ, ஐக்யூ 9, ஐக்யூ 9 எஸ்இ, ஐக்யூ இசட்6, ஐக்யூ 9டி

விவோ ஸ்மார்ட்போன்

விவோ ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ்50 ப்ரோ, விவோ வி20 ப்ரோ, விவோ எக்ஸ்60 ப்ரோ+, விவோ எக்ஸ்60, விவோ வி21 5ஜி, விவோ வி21இ, விவோ எக்ஸ்70 ப்ரோ, விவோ எக்ஸ்70 ப்ரோ +, விவோ ஐக்யூ இசட்5 5ஜி, விவோ ஒய்72 5ஜி, விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி, விவோ வி23இ 5ஜி, விவோ டி1 ப்ரோ, விவோ எக்ஸ்80, விவோ எக்ஸ்80 ப்ரோ, விவோ வி25, விவோ வி25 ப்ரோ, விவோ ஒய்55 5ஜி, விவோ ஒய்55எஸ் 5ஜி

சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ33 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ, சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா, சாம்சங் கேலக்ஸி எம்3, சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்4, சாம்சங் கேலக்ஸி எஸ்22, சாம்சங் கேலக்ஸி எஸ்22+, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 4, சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா, சாம்சங் கேலக்ஸி எஸ்21, சாம்சங் கேலக்ஸி எஸ்21 ப்ளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா, சாம்சங் கேலக்ஸி இச்ட் ஃபோல்ட் 2, சாம்சங் கேலக்ஸி எஃப்42, சாம்சங் கேலக்ஸி ஏ52எஸ், சாம்சங் கேலக்ஸி எம்52, சாம்சங் கேலக்ஸி இசட் ஃப்ளிப்3, சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்3, சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ 5ஜி, சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி, சாம்சங் கேலக்ஸி எஃப்23, சாம்சங் கேலக்ஸி ஏ73, சாம்சங் கேலக்ஸி எம்42, சாம்சங் கேலக்ஸி எம்53, சாம்சங் கேலக்ஸி எம்13

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நார்ட், ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9ப்ரோ, ஒன்பிளஸ் நார்ட் சிஇ, ஒன்பிளஸ் நார்ட் சிஇ2, ஒன்பிளஸ் 10 ப்ரோ 5ஜி, ஒன்பிளஸ் நார்ச் சிஇ லைட் 2, ஒன்பிளஸ் 10ஆர், ஒன்பிளஸ் நார்ட் 2டி, ஒன்பிளஸ் 10டி, ஒன்பிளஸ் 8, ஒன்பிளஸ் 8டி, ஒன்பிளஸ் 8 ப்ரோ, ஒன்பிளஸ் 9ஆர்டி, ஒன்பிளஸ் நாரட் 2, ஒன்பிளஸ் 9ஆர்

ஆப்பிள் ஐபோன்கள்

ஆப்பிள் ஐபோன்கள்

ஆப்பிள் ஐபோன்களின் பட்டியல் குறித்து பார்க்கையில், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் ஜியோ 5ஜி நெட்வொர்க் இணைப்புகள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio 5G only Working on these Bands Smartphones: Check the List Before Buying New 5G Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X