Jio 5G உங்களுக்கு கிடைக்குதா? இந்த தவறை சரி செய்யலனா 5ஜி யூஸ் பண்ணவே முடியாது..

|

ஏர்டெல் அக்டோபர் 1 முதலே குறிப்பிட்ட 8 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. ஜியோ சைலண்டாக 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஜியோ 5ஜி 4 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. விரைவில் படிப்படியாக நாடு முழுவதும் அறிமுகமாக இருக்கிறது. ஜியோ 5ஜி பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பார்க்கலாம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பு..

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவிப்பு..

பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5G சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது அளப்பரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி 5ஜி சேவையை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் அறிமுகம் செய்தார்.

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவைகள் கிடைக்கும் காலகட்டம், செயலாக்கங்கள் உள்ளிட்ட பல தகவலை உறுதிப்படுத்தின.

4 நகரங்களில் மட்டுமே அறிமுகம்

4 நகரங்களில் மட்டுமே அறிமுகம்

படிப்படியாக 2023க்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோ அறிவித்துள்ளது. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே 5ஜி சேவை கிடைத்து வருகிறது.

ஜியோ 5ஜி 4 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள சில நபர்களாலேயே 5ஜி சேவையை பயன்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தவறுகளை சரி செய்து ஜியோ 5ஜி சேவை கிடைப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

Jio 5G சேவை..

Jio 5G சேவை..

ஜியோ, ஏர்டெல் என எந்த சிம் கார்ட் வைத்திருந்தாலும் சரி, 5ஜி போன்கள் இருந்தால் மட்டுமே 5ஜி அணுகலை பெற முடியும் என்பது அறிந்ததே.

5G ஃபோன்களில் Jio 5Gயை வெற்றிகரமாக இயக்க OTA புதுப்பிப்புகளை பெற வேண்டும். தங்கள் செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று நெட்வொர் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து 5ஜி ஆதரவு உங்களுக்கு கிடைக்கிறதா என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

உங்கள் பகுதியில் 5ஜி நெட்வொர்க் இருந்தால் 5ஜி தேர்வு உங்களுக்கு காட்டப்படும்.

சரியான ஜியோ திட்டம் தேர்ந்தெடுத்துள்ளீர்களா?

சரியான ஜியோ திட்டம் தேர்ந்தெடுத்துள்ளீர்களா?

ஜியோ 5ஜி சேவை அறிமுகமாகியுள்ள 4 நகரங்களில் இருந்தும் உங்களால் 5ஜி சேவை பயன்படுத்த முடியவில்லை என்றால் நீங்கள் சரியான திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஜியோ 5ஜி சேவை ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என டெலிகாம் டாக் இணையதளம் தெரிவித்துள்ளது.

நீங்கள் இருக்கும் பகுதி எது?

நீங்கள் இருக்கும் பகுதி எது?

ஜியோ 5ஜி சேவை தற்போது 4 நகரங்களில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அதாவது டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் மட்டுமே 5ஜி சேவை கிடைக்கிறது.

நீங்கள் வேறு எந்த பகுதியில் இருந்தாலும் ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது.

2023க்குள் நாடு முழுவதும் 5ஜி..

2023க்குள் நாடு முழுவதும் 5ஜி..

வரும் மாதங்களில் படிப்படியாக நாடு முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும். உங்கள் பகுதியில் எப்போது முதல் 5ஜி கிடைக்கிற்கு என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், 2023க்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என்பதை மட்டுமே ஜியோ தற்போது வரை உறுதிப்படுத்தியுள்ளது.

உங்கள் போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா?

உங்கள் போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா?

5ஜி ஆதரவு கொண்ட புதிய 5ஜி போன் வாங்குவதற்கு முன் உங்கள் போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை செக் செய்து கொள்வது மிக அவசியம்.

கடந்த 2 ஆண்டுகளில் அறிமுகமான பெரும்பாலான ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி ஆதரவு இருக்கிறது.

தற்போது ரூ.15000 விலைக்கு கூட சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இருப்பினும் உங்கள் போனில் 5ஜி ஆதரவு இருக்கிறதா என்பதை சோதித்து பார்ப்பது மிக அவசியம்.

செக் செய்வது எப்படி?

செக் செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போனில் செட்டிங்ஸ் பயன்பாட்டை ஓபன் செய்யவும். இதில் Connection என்ற விருப்பத்தை கிளிக் செய்து கொள்ளவும். அதில் மொபைல் நெட்வொர்க் என்ற விருப்பம் காட்டப்படும் அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். இதில் நெட்வொர்க் மோட் என்பதை கிளிக் செய்து கொள்ளவும். இதில் 2G/3G/4G/5G (ஆட்டோ கனெக்ட் என்ற விருப்பம் காட்டப்படும். இப்படி காட்டும்பட்சத்தில் உங்கள் மொபைல் 5ஜி ஆதரவு இருக்கிறது என்பது உறுதி. 2G/3G/4G என்ற விருப்பம் காண்பித்தால் உங்கள் மொபைலில் 5ஜி ஆதரவு இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
Jio 5G not working on your phone? If you do this mistake Will Not Get 5G Connection

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X