Jio 5G Mobile: ஏழைக்கு ஏற்ற 5G ஸ்மார்ட்போன்.. அமெரிக்காவில் தயாரிக்க அம்பானி பேச்சு.. யார் உருவாக்க போறது?
முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்தியாவில் சுமார் 490 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ (Jio) திகழ்கிறது. இதுவரை எந்தவொரு டெலிகாம் (Telecom) நிறுவனமும் செய்யாத வேலையை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. அது தான் நிறுவனத்தின் சொந்த ஜியோ ஸ்மார்ட்போன் (Jio smartphone) சாதனங்கள் மற்றும் ஜியோ பியூச்சர் போன் (Jio feature phone) சாதனங்கள். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இதுவரை பல மலிவான 4ஜி மொபைல் (4G mobile) சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
அந்த வரிசையில், நிறுவனம் அடுத்தகட்டமாக இந்திய மக்களுக்காக மிகவும் மலிவான விலையில் ஒரு புதிய ஜியோ 5ஜி போனை (Jio 5G phone) அறிமுகம் செய்யவுள்ளது. பட்ஜெட் விலையில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதென்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை (Jio 5G smartphone) ஒரு தரமான மலிவு விலை சாதனமாக தயார் செய்யவுள்ளது.

புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை அமெரிக்காவில் உருவாக்க அம்பானி தரப்பில் பேச்சு:
இதற்காக, ரிலையன்ஸ் நிறுவனம் பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறிப்பாக அமெரிக்காவை தளமாக கொண்ட ஒரு மொபைல் ஜாம்பவான் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டு சேரவுள்ளதாக கூறப்படுகிறது. யாரும் எதிர்பார்த்திடாத வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குவால்காம் (Qualcomm) நிறுவனத்துடன் கூட்டு சேரவுள்ளதாக கூறப்படுகிறது.
மலிவு விலையில் புதிய 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்க விரும்பும் ரிலையன்ஸ் நிறுவனம், நேரடியாக செமிகண்டெக்டர் தொழில்நுட்பத்தை (semiconductor technology) உருவாக்கும் குவால்காம் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சக்தி வாய்ந்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் (5G smartphone) சாதனத்தை நிறுவனம் உருவாக்க முடியும் என்று நம்புவதாக கூறப்படுகிறது. இது தவிர இன்னும் பல நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜியோ 5ஜி போன் (Jio 5G Phone) எப்போது வெளிவரும்?
புதிய ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கும் முயற்சியில் பல முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் ஜியோ குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது உண்மை தான் என்பதை ஜியோவின் துணைத் தலைவர், சுனில் தத் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால், ஜியோ 5ஜி போன் உருவாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்த சாதனம் வெளிவரும் என்று கருதப்படுகிறது.
ஜியோ நிறுவனத்தின் முயற்சிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றி அடைந்தால், இந்திய மக்கள் வரும் 2025 ஆம் ஆண்டில் மிகவும் குறைந்த விலையில் ஒரு புதிய மலிவு விலை 5ஜி மொபைலை வாங்கி பயன்பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மலிவு விலை போன் மூலம் 4ஜி நெட்வொர்க்கில் உள்ள பல கோடி மக்கள் 5ஜி அனுபவத்திற்கு முன்னேறி செல்வார்கள் என்று நம்பப்படுகிறது.
Jiophone 5G விலை என்னவாக இருக்கும்?
உண்மையை சொல்ல போனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டின் பல பகுதிகளில் வலுவான 5G நெட்வொர்க்கை (Jio 5G network) நிறுவியுள்ளது. மேலும் அதன் பெரும்பாலான ரீசார்ஜ் திட்டங்களுடன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற 5G டேட்டாவை (Jio unlimited 5G data) இலவசமாக வழங்குகிறது. இப்போது, நிறுவனம் இந்தியாவின் மிகவும் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. ஏழைக்கு ஏற்ற போனாக இந்த Jio 5G மொபைல் ரூ.9,000 விலையில் (Jio 5G mobile price) எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








