Home
News

56 நாட்களுக்கு டென்ஷன் இல்லை.. ஒரே ரீசார்ஜ்.. 56 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?

ஜியோ நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது இந்நிறுவனம். எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

56 நாட்களுக்கு டென்ஷன் இல்லை.. ஒரே ரீசார்ஜ்.. 56 நாட்கள் வேலிடிட்டி..

ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய சலுகைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா இந்த ஜியோ ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் கிடைக்கும். இதுதவிர ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் உள்ளன.

ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 579 prepaid plan) தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.579 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 1.5GB டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

56 நாட்களுக்கு டென்ஷன் இல்லை.. ஒரே ரீசார்ஜ்.. 56 நாட்கள் வேலிடிட்டி..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் இதில் வழங்கப்படும்.

குறிப்பாக கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் ரூ.579 மற்றும் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். சமீபத்தில் ஜியோ நிறுவனம் ஓடிடி சந்த மற்றும் லைவ் டிவி சேனல்கள் தரும் பல ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. அதேபோல் விரைவில் இந்நிறுவனம் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio 56 Day Recharge Plans: 2 Options With OTT Benefits and Unlimited Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X