Home
News

ஆரம்பிச்சிட்டாரு.. புது கஸ்டமர்கள்.. 50 நாட்கள் இலவசம்.. ரூ.599 திட்டம்.. 6 மாதம் வேலிடிட்டி.. ஓடிடி சந்தா!

ஐபிஎல் ரசிகர்கள் மட்டுமல்லாமல், பிராட்பேண்ட் கஸ்டமர்களும் அறக்க பறக்கும் விதமாக ஜியோ ஏர்ஃபைபர் (Jio AirFiber) திட்டங்களில் 50 நாட்கள் இலவச சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகையை எப்படி பெறுவது? பழைய கஸ்டமர்களுக்கு இந்த சலுகை பொருந்துமா? முழு விவரம் இதோ.

தமிழ்நாடு முழுவதும் பெரும்பான நகரங்களில் ஜியோ ஏர்ஃபைபர் சேவைகள் கிடைக்க தொடங்கிவிட்டன. மாதாந்திரம் ரூ.599 முதல் 550+ டிவி சேனல்கள், அன்லிமிடெட் வை-பை டேட்டா, 15+ ஓடிடி ஆப்களின் சந்தா மற்றும் ப்ரீ ரூட்டர், 4K செட்-டாப் பாக்ஸ் போன்றவை கொடுக்கப்படுகின்றன. இப்போது, ஐபிஎல் 2024 சீசனை முன்னிட்டு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பிச்சிட்டாரு.. புது கஸ்டமர்.. 50 நாட்கள் இலவசம்.. ரூ.599 திட்டம்!

அதாவது, புதிதாக ஜியோ ஏர்ஃபைபர் சேவையை பெறும் கஸ்டமர்களுக்கு 50 நாட்களுக்கு இலவசமாக இன்டர்நெட் சேவை வழங்கப்படுகிறது. இதுவொரு குறுகிய கால சலுகையாகும். ஆகவே, வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த சலுகையை பெற்று கொள்ள முடியும். அதன்பிறகு இலவச இன்டர்நெட் சலுகை கிடைக்காது.

இந்த திட்டத்தை பெறுவதற்கான தகுதிகள் என்ன? புதிய ஏர்ஃபைபர் திட்டத்தை பெற விரும்பும் கஸ்டமர்கள் கட்டாயம், ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்தும் மொபைல் எண்ணை கொடுத்து திட்டங்களை பதிவு செய்ய வேண்டும். ரூ.599 அல்லது அதற்கும் மேல் விலை கொண்ட திட்டங்களை பெற்றால் மட்டுமே இந்த சலுகை பயன்படுத்த முடியும்.

அதுமட்டுமல்லாமல், ரூ.599 திட்டத்தை தேர்வு செய்கிறீர்கள் என்றால், அந்த திட்டத்துக்கான தொகையை 6 அல்லது 12 மாதங்களுக்கும் சேர்த்து செலுத்தினால் மட்டுமே இந்த சேவை வழக்கப்படும். ஆகவே, மேற்கூறியபடி ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை பெற்ற பிறகு 24 மணி நேரத்தில் 50 நாட்கள் இலவச இன்டர்நெட்டுக்கான டிஸ்கவுண்ட் வவுச்சர் (Discount voucher) வழங்கப்படும்.

ஆரம்பிச்சிட்டாரு.. புது கஸ்டமர்.. 50 நாட்கள் இலவசம்.. ரூ.599 திட்டம்!

இதை ஜியோ ஆப் மூலம் ஆக்டிவேட் செய்துவிட்டால், இலவச இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். இந்த வவுச்சருக்கு 2 ஆண்டுகளுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ஆகவே, எப்போது ஆக்டிவேட் செய்கிறீர்களோ அதில் இருந்து 50 நாட்கள் இலவச இன்டர்நெட் சலுகையை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் திட்டத்தை எப்படி பெறுவது? ஜியோ வெப்சைட் (Jio Website), ஜியோ ஆப் (Jio App) அல்லது அருகில் இருக்கும் ஜியோ ஸ்டோர் (Jio Store) ஆகியவற்றின் மூலம் இந்த திட்டங்களை புக்கிங் செய்து பெற்று கொள்ளலாம். புக்கிங் செய்யும்போது, பெயர், முகவரி, இமெயில் மற்றும் மொபைல் நம்பர் கேட்கப்படும்.

அதை கொடுத்தவிட்ட பின்பு, உங்களது வீட்டின் முகவரிக்கு 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் (4K Smart Set-Top Box), வை-பை ரூட்டர் (Wi-Fi Router) மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) ஆகியவை அனுப்பி வைக்கப்படும். அதோடு இன்டாலேஷன் செய்து கொடுக்கப்பட்டுவிடும். இப்போது, ஆரம்ப திட்டம் எப்படி என்பதை பார்க்கலாம்.

ஜியோ ஏர்ஃபைபர் ரூ 599 திட்ட விவரங்கள் (Jio AirFiber Rs 599 Plan Details): இந்த திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இருப்பினும், புதிய கஸ்டமர்கள் 6 அல்லது 12 மாதங்களுக்கான தொகையை முழுவதும் கட்டினால் மட்டுமே சேவை வழங்கப்படும். 30 எம்பிபிஎஸ் வேகத்தில் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தலாம்.

இதற்கான ரூட்டர் வழங்கப்படும். அதில் மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்ட டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளலாம். 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் மூலம் 550+ டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம். அதேபோல டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, ஜியோ சினிமா போன்ற 11 ஓடிடி ஆப்களின் சந்தா கொடுக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio 50 Days Free Offer With Jio AirFiber Rs 599 Plan 30Mbps Data TV Channels OTT Subscriptions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X