அம்பானினா ஒரு படி மேலே தானே.. Jio 5.5G சேவை அறிமுகம்.. இனி சூப்பர் பாஸ்ட் மின்னல் வேகம்.. Jio மக்கள் குஷி..
முகேஷ் அம்பானியா (Mukesh Ambani) கொக்கா? என்று கேட்கும் அளவிற்கு, அம்பானிக்கு (Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் (Telecommunication sector) புதிய புரட்சியை உருவாக்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் வழங்கிடாத 5.5G சேவையை ஜியோ (Jio) நிறுவனம் தற்போது அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. 5ஜி (5G) தெரியும், அது என்னங்க புதுசா 5.5ஜி (5.5G) என்று கேட்கிறீர்களா? வாருங்கள் முழுமையான தகவலை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக திகழும் ஜியோ தனது 5ஜி (Jio 5G) சேவையை மேம்படுத்தி, புதிதாக சூப்பர் பாஸ்ட் மின்னல் வேகத்தில் (super fast speed internet service) இணைய சேவையை வழங்கும் 5.5ஜி நெட்வொர்க் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 5.5ஜி சேவையை அறிமுகம் செய்யும் முதல் தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை (India's first 5.5G network) ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது பெற்றுள்ளது.

அம்பானினா ஒரு படி மேலே தானே.. Jio 5.5G நெட்வொர்க் சேவை அறிமுகம்:
அம்பானியின் ஐடியாக்கள் எல்லாமே மற்றவர்களை விட ஒரு படி மேலே தான் இருக்கும் என்ற வாக்கியத்தை நிஜமாக்கியது போல் இருக்கிறது இந்த 5.5ஜி சேவையின் (5.5G service) அறிமுகம். யாருமே எதிர்பார்த்திடாத நேரத்தில், ஜியோ நிறுவனம் அதன் ஜியோ 5.5ஜி நெட்வொர்க் சேவையை (Jio 5.5G network service) அறிமுகம் செய்து ஜியோ வாடிக்கையாளர்களை குஷி (Jio customers happy) அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ 5.5G நெட்வொர்க் சேவை என்றால் என்ன? (What is Jio 5.5G network) இதன் வேகம் எத்தகையது? ஜியோ 5.5ஜி பற்றிய முழு விபரம் இதோ. ஜியோவின் 5.5ஜி நெட்வொர்க் சேவை என்பது, ஜியோ இத்தனை நாட்களாக சேவையில் வழங்கி வந்த ஜியோ 5ஜி நெட்வொர்க் சேவையின் மேம்படுத்தப்பட்ட நெட்வொர்க் சேவையாகும். தற்போது பயன்பாட்டில் உள்ள ஜியோ 5ஜி வேகத்தை (Jio 5G speed) விட Jio 5.5G சுமார் 10 மடங்கு அதிக வேகத்தை (Jio 5.5G speed) கொண்டதாக கூறப்படுகிறது.
ஜியோ 5.5ஜி சேவையின் வேகம் எத்தகையது? அடேங்கப்பா 10Gbps சூப்பர் பாஸ்ட் மின்னல் வேகமா:
அதிக வேகத்துடன் குறைந்த லோ-லேடன்சி உடன் சிறந்த நெட்வொர்க் அமைப்பை வழங்கும் அதிவேகமான சூப்பர் பாஸ்ட் நெட்வொர்க்காக ஜியோ 5.5ஜி சேவை செயல்படுகிறது. ஜியோ 5.5ஜி சேவை ஒரே நேரத்தில் மூன்று வெவ்வேறு நெட்வொர்க் டவர்களில் (network towers) இருந்து வரும் சிக்னலை இணைத்து, ஒரே நேரத்தில் அதிக வேகத்தை வழங்கும்படி சிறப்பாக செயல்படுகிறது. ஜியோ 5ஜி சேவை அதிகபட்சமாக 1Gbps வேகம் வரை வழங்கி வந்தது கவனிக்கத்தக்கது.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ 5.5ஜி சேவையானது, ஜியோ பயனர்களுக்கு 10Gbps வேகத்தை வழங்கக்கூடியதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால், Jio 5.5G சேவை 10Gbps டவுன்லோட் வேகம் (Jio 5.5G with 10Gbps download speed) மற்றும் 1Gbps அப்லாட் வேகத்தை (Jio 5.5G upload speed) வழங்குகிறது என்று ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. இந்த புதிய அதிவேக நெட்வொர்க்கை ஜியோ புதிய ஒன்பிளஸ் 13 (OnePlus 13) சாதனத்தில் சோதனை செய்து வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவுடன் இணைந்து ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13 சீரிஸ் (OnePlus 13 series) சாதனங்கள் Jio 5.5G சேவையை ஆதரிக்கும் படி, உருவாக்கியுள்ளது. OnePlus 13 சீரிஸ் சாதனங்கள் தான் ஜியோவின் 5.5G நெட்வொர்க் சேவையை ஆதரிக்கும் முதல் ஸ்மார்ட்போன் சாதனங்களாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








