Home
News

ஏழைக்கு ஏத்த பரிசு.. மாதம் ரூ.102 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 168 ஜிபி 4ஜி டேட்டா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் 4ஜி பீச்சர் போன் (4G Feature Phone) கஸ்டமர்களுக்கு டெலிகாம் மார்கெட்டில் மிகவும் மலிவான விலைக்கு வருடாந்திர திட்டம் கிடைக்கிறது. எவ்வளவு மலிவான திட்டம் என்றால், மாதத்துக்கு ரூ.102 செலவு செய்ய தயாராக இருந்தால் போதும், 336 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம்.

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களில் பீச்சர் போன்களுக்கு பிரத்யேக திட்டங்கள் கிடையாது. ஆனால், ஜியோவில் ஸ்மார்ட்போன்களுக்கும், பீச்சர் போன்களுக்கும் தனித்தனியாக திட்டங்கள் இருக்கின்றன. இதில் ஜியோ 4ஜி பீச்சர்களுக்கு மற்ற நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு திட்டங்கள் கிடைக்கின்றன.

ஏழைக்கு ஏத்த பரிசு.. மாதம் ரூ.102 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி!

அதாவது, 336 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமே வெறும் ரூ.1234 விலைக்கு கிடைக்கிறது. 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு இந்த திட்டம் வேலிடிட்டி கொடுக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு செலவாகும் தொகையை கணக்கிட்டால், வெறும் ரூ.102 மட்டுமே தேவைப்படுகிறது. இந்த விலைக்கு மற்ற நிறுவனங்களில் வருடாந்திர திட்டங்கள் கிடைக்காது.

இந்த விலையில் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஜியோ ஆப்களும் கொடுக்கப்பட்டுகின்றன. இதில் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிற, ஜியோ 4ஜி பீச்சர் போன் திட்டம் ரூ.1234 குறித்த விவரங்களையே தெரிந்து கொள்ளப் போகிறோம். சொல்லப்போனால், மலிவான விலைக்கு கிடைக்கும் வருடாந்திர 4ஜி திட்டமாக இது இருக்கிறது.

ஜியோ ரூ.1234 4ஜி பீச்சர் போன் திட்டம் (Jio Rs.1234 4G Feature Phone Plan): இந்த பீச்சர் போன் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை 336 நாட்கள் முழுவதும் செய்து கொள்ளலாம். பீச்சர் போன் திட்டமாக இருப்பதால், நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

ஆனால், 64 கேபிபிஎஸ் வேகத்தில் மட்டுமே கிடைக்கும். ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் திட்டங்களை போலவே 4ஜி பீச்சர் போன்களுக்கும் டேட்டா வவுச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, டேட்டா போதவில்லை என்றால், டேட்டா வவுச்சர்களுக்கு செல்லலாம். 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைப்பதால், 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும்.

எஸ்எம்எஸ் சலுகைகளில் வரம்பு இருக்கிறது. அதாவது, 28 நாட்கள் வீதம் 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது என்றால், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஒருவேளை 28 நாட்களுக்குள் 300 எஸ்எம்எஸ்களை அனுப்பி முடித்துவிட்டால், அடுத்த 28 நாட்கள் தொடங்கும் வரை கட்டணம் செலுத்தியே எஸ்எம்எஸ்கள் அனுப்ப முடியும்.

ஆகவே, 29ஆவது நாளில் இருந்து அடுத்த 28 நாட்களுக்கான 300 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்பட்டுவிடும். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஜியோ சாவன் (JioSaavn) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆகிய ஆப்களின் சலுகைகள் கிடைக்கும். ரூ.102 செலவில் கிடைக்கும் என்றால், வெறும் ரூ.102 செலுத்தினால் திட்டம் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம்.

மாதத்துக்கு ரூ.102 செலவில் கிடைக்கும் வருடாந்திர திட்டம் என்று கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஆகவே, 12 மாதங்களுக்கு மொத்தமாக ரூ.1234 செலுத்த வேண்டும். எப்போதும், வேலிடிட்டி அதிகமாக இருக்கும் திட்டங்களின் மாத செலவு கம்மியாகவே இருக்கும். ஆகவே, இதுபோன்ற திட்டங்களை ரீசார்ஜ் செய்யும்போது, லாபத்தை பெற்று கொள்ளலாம்.

வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே திட்டம் போதுமானால், ஜியோ 4ஜி பீச்சர் போன் திட்டம் ரூ.123 க்கு செல்லலாம். இதில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். நாளொன்றுக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் கிடைக்கும். 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோ டிவி, ஜியோ சாவன் ஆப்களை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Jio 4G Feature Phone Plan With 168 GB Data Voice Calls 336 Days Validity Check Cheapest Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X