ஜியோ பாதிப்பு : இதுவரை வழங்கப்பட்டிருக்கும் மொத்த சலுகைகள்!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சந்தையில் ஏற்படுத்திய குழப்பம் இன்னும் ஓயவில்லை. பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலை குறைப்பு மற்றும் புதிய சேவைத் திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களும் பல்வேறு புதிய திட்டங்களையும் டேட்டா பேக்களையும் வழங்கி வருகின்றன.

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ 4ஜி சேவைகளை செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கியது. அறிமுக சலுகையாக இந்த ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி வரை அனைத்துச் சேவைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சலுகை

சலுகை

பிஎஸ்என்எல் ஜியோவுடனான போட்டியைச் சமாளிக்க சரி சமம் வாய்ந்த சலுகைகளை வழங்குவதாகத் தெரிவித்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு அதிவேக 4ஜி சேவைகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போட்டி

போட்டி

வோடபோன் நிறுவனம் புதிய 4ஜி கருவிகளுக்கு 10ஜிபி டேட்டா சலுகைகளை 1 ஜிபி டேட்டா கட்டணத்தில் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஒவ்வொரு நிறுவனங்களும் இதுவரை அறிவித்திருக்கும் சலுகைகளை விரிவாக இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல் அன்லிமிட்டெட் டேட்டா

ஏர்டெல் அன்லிமிட்டெட் டேட்டா

ஏர்டெல் தனது 4ஜி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495 ரீசார்ஜ் செய்தால் அன்லிமிட்டெட் 4ஜி டேட்டாவினை சுமார் 90 நாட்களுக்கு வழங்குகின்றது. பழைய பயனர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படும் நிலையில் புதிய பயனர்களுக்கு இந்தச் சலுகை ரூ.1494க்கு வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டேட்டா அளவு

டேட்டா அளவு

என்ன தான் அன்லிமிட்டெட் என்றாலும் 30 ஜிபி வரை மட்டுமே 4ஜி வேகத்தில் பயன்படுத்த முடியும். பின் டேட்டா வேகம் நொடிக்கு 64 கேபி வீதம் மட்டுமே வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் அன்லிமிட்டெட் வையர்லைன் பிராட்பேன்ட் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு ரூ.1க்கு 1 ஜிபி வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டத்தினை முழுமையாகப் பெற பயனர்கள் மாதம் ஒன்றிற்கு 300 ஜிபி வரை பயன்படுத்த வேண்டும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சேவை

சேவை

பயனர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.249 செலுத்தி 300 ஜிபி வரை டவுன்லோடு செய்ய முடியும் என பிஎஸ்என்எல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவை எதிர்த்து விலை குறைவாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரே திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழைப்புகள்

அழைப்புகள்

பிஎஸ்என்எல் நிறுவனம் அன்லிமிட்டெட் அழைப்புகளை அனைத்து மொபைல் மற்றும் லேண்ட்லைன் நம்பர்களுக்கு வழங்கி வருகின்றது. இத்திட்டம் ஆகஸ்டு 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வோடபோன்

வோடபோன்

வோடபோன் நிறுவனத்தின் புதிய டேட்டா பேக் திட்டங்களில் பயனர்கள் புதிய 4ஜி கருவியுடன் இணைந்து 10ஜிபி வரையிலான டேட்டா சேவைகளை 1ஜிபிக்கு செலவில் பெற முடியும். இந்தச் சேவையினை பயனர்கள் மூன்று மாதங்களுக்குப் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருவி

கருவி

வோடபோன் தெரிவித்திருக்கும் புதிய 4ஜி கருவி என்பது கடந்த ஆறு மாதங்களில் வோடபோன் நெட்வர்க் பயன்படுத்தாத கருவி ஆகும். இந்தச் சலுகையானது இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஐடியா

ஐடியா

ஜியோவுடனான போட்டியை சமாளிக்க ஐடியா நிறுவனம் தனது டேட்டா கட்டணங்களை 67 சதவீதம் வரை குறைத்திருக்கின்றது. புதிய ஐடியா திட்டங்களின் மூலம் 10 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டாவிற்கு ரூ.990, 2ஜிபி ரூ.349 மற்றும் 3ஜிபி ரூ.649 எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபிரீடம் பேக்

ஃபிரீடம் பேக்

ஐடியா பிரீபெயிட் பயனர்களுக்கு ஃபிரீடம் பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்களின் டேட்டா பேக் திட்டங்கள் மாதத்திற்கு ரூ.100 வீதம் துவங்குகின்றது. இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதில் பயனர்கள் 300 எம்பி 2ஜி டேட்டாவும், 500 எம்பி ரூ.175க்கு பெற முடியும். இத்திட்டமானது அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Jio 4G Effect Airtel, Idea, Vodafaone, BSNL line up unlimited data offers Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்