ஆரம்பிச்சுடீங்களே அம்பானி.. 1 ரூபாய் குறைவாக செலவு.. 56 நாள் அதிக வேலிடிட்டி.. Jio-வின் அதிரடி திட்டம்..
ஜியோ (Jio) நிறுவனம் இப்போது வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் எப்படி வெவ்வேரு எதிர்பார்ப்புடைய வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யலாம் என்பதை கண்டறிந்துள்ளது. வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் (1 rupee difference Jio prepaid plans) நிறுவனம் இப்போது இரண்டு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி அசத்தியுள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் பெரியளவு மாற்றத்தை வழங்குகிறது. இது எந்த திட்டம்? இந்த திட்டத்தின் விலை என்ன? எப்படி 1 ரூபாய் குறைவான செலவில் Jio 56 நாள் கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது என்று பார்க்கலாம்.
ஜியோ நிறுவனம் கடந்த மாதம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் சில மாற்றங்களை திடீரென அறிமுகம் செய்தது. இதற்கு முக்கிய காரணமாக, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை (Telecom Regulatory Authority of India) ஆணையமான, டிராய் (TRAI) இன் புதிய உத்தரவுகள் பார்க்கப்பட்டது. TRAI இன் புதிய உத்தரவுகள் படி, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை ஜியோ (Jio voice and SMS only plans) நடைமுறைக்கு கொண்டுவந்தது.

ஆரம்பிச்சுடீங்களே அம்பானி.. 1 ரூபாய் குறைவாக செலவு.. 56 நாள் அதிக வேலிடிட்டி:
டேட்டா நன்மை தேவைப்படாத வாடிக்கையாளர்கள் மீது, டெலிகாம் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக டேட்டா நன்மை திணிக்கப்படுவதை தடுக்க TRAI இத்தகைய வாய்ஸ் ஒன்லி பிளான்களை (Jio voice only plans) கட்டாயமாக்கியது. கட்டாயமாக்கப்பட விதிமுறைக்கு இணங்கி ஜியோ அறிமுகம் செய்த புதிய திட்டம் தான் ஜியோ ரூ. 448 வாய்ஸ் ஒன்லி பிளான் (Jio Rs 448 Voice Only Plan) மக்களே.
இதேபோல், டேட்டா நன்மையோடு ரூ. 500 பட்ஜெட் விலைக்குள் (Jio plans under Rs 500) டேட்டா, வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் என்று அணைந்து நன்மைகளையும் வழங்கும் திட்டமாக ஜியோ அறிமுகம் செய்த திட்டம் தான் ஜியோ ரூ. 449 திட்டம். இந்த Jio 448 Plan மற்றும் Jio 449 Plan ஆகிய இரண்டு திட்டங்களுக்கும் இடையில் வெறும் 1 ரூபாய் மட்டுமே வித்தியாசமாக இருக்கிறது.
ஜியோ ரூ. 448 வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டம் (Jio Rs 448 Voice and SMS Only Plan):
இந்த திட்டம் டேட்டா நன்மையை வழங்காத திட்டமாகும். இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (84 days validity voice only plan) உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் 1000 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை தினசரி வரம்பில்லாமல் வழங்குகிறது. டேட்டா நன்மையை விரும்பாத, நீண்ட நாட்களுக்கு வாய்ஸ் கால்ஸ் சேவையை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கான திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ. 449 திட்டம் (Jio Rs 449 Plan):
இந்த திட்டம் 28 நாள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் (daily 100 SMS), மற்றும் தினசரி 3GB டேட்டா (3GB data per day) நன்மையை வழங்குகிறது. தினசரி 3GB டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் குறைந்த விலை திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் Jio TV, Jio Cinema மற்றும் Jio Cloud இலவச நன்மைகளும் கிடைக்கிறது.
வெறும் 1 ரூபாய் குறைவான விலையில் ஜியோ ரூ.448 திட்டத்திற்கு 84 நாள் வேலிடிட்டியை வழங்கியுள்ளது. 1 ரூபாய் குறைந்த செலவில் இரண்டு திட்டங்களுக்கும் இடையில் 56 நாள் வேலிடிட்டி வித்தியாசம் இருப்பது நம்மை ஆச்சரியப்படுத்திக்கிறது.


Click it and Unblock the Notifications








