பஞ்சமில்லாத டேட்டா.. டெய்லி 3ஜிபி.. ப்ரீ 5G சேவை.. அன்லிமிடெட் வாய்ஸ்.. மூன்று Jio ரீசார்ஜ்.. விட்டா வேற இல்ல!
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கஸ்டமர்களுக்கு டேட்டா குறையில்லாத திட்டங்கள் வேண்டுமானால், தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவை கொடுக்கும் மூன்று திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், இதைவிட அதிக டேட்டா கொண்ட திட்டங்கள் ஜியோவிடம் கிடையாது. ரூ.449 முதல் ரூ.1799 வரையில் இந்த திட்டங்களின் விலை இருக்கிறது. வாய்ஸ் கால்கள் முதல் ஓடிடி வரையில் ஒட்டுமொத்த சலுகைகளையும் கொடுக்கிறது. மூன்று திட்டங்களில் உங்களுக்கான திட்டங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களிலும் தினசரிக்கு 3 ஜிபி டேட்டா (Daily 3GB Data), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவை பொதுவாக கிடைக்கும் சலுகைகளாகும். ஆனால், வேலிடிட்டி, ஓடிடி சலுகைகளில் மாற்றங்கள் இருக்கின்றன. 28 நாட்கள், 84 நாட்கள் என்று சலுகைகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 449 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs Rs 449 Prepaid Plan): இந்த ஜியோ திட்டத்தில் குறைந்தபட்ச வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 28 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா உங்களுக்கு கிடைக்கிறது. வாய்ஸ் கால்கள் வழக்கம்போலவே கிடைக்கிறது.
ஆகவே, அன்லிமிடெட் சலுகையாக லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) பெற்று கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ்கள் தினசரி லிமிட்டில் செய்து கொள்ள கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கு பிரீமியம் ஓடிடி கிடையாது, இருப்பினும், ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ டிவி (Jio TV) ஆப்களை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும்.
ஜியோ ரூ 1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs Rs 1199 Prepaid Plan): இந்த ஜியோ திட்டத்துக்கு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 84 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் தினசரிக்கு 3 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.
5ஜி டேட்டா இல்லாமலேயே 252 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. ஆகவே, ஆன்லைன் கேமிங் அல்லது ஓடிடி ஆப்களுக்கு ஏற்ற டேட்டா பயன்பாட்டை இந்த ஜியோ திட்டம் கொடுக்கிறது. மேலும், அன்லிமிடெட் கால்களும், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆப்களும் இதில் பயன்படுத்த கிடைக்கின்றன. இப்போது, அதிகப்படியான டேட்டாவை கொண்ட திட்டத்தை பார்ப்போம்.
ஜியோ ரூ 1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs Rs 1799 Prepaid Plan): ஜியோ நிறுவனத்தில் 3 ஜிபி டேட்டா சலுகையில் அதிக விலை கொண்ட திட்டம் இதுவாகும். முந்தைய திட்டத்தில் கிடைத்த அதே வேலிடிட்டி கிடைத்தாலும், பிரீமியம் ஓடிடி சலுகைகளை பேக் செய்து கொடுத்துள்ளது. ஆகவே, டேட்டாவுக்கும், ஓடிடிக்கும் பக்காவான ரீசார்ஜ் திட்டமாக இது இருக்கிறது.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா வருகிறது. முன்பு பார்த்த திட்டத்தை போலவே அன்லிமிடெட் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஓடிடிகளின் சந்தா கொடுக்கப்படுகிறது. மேலும், நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடியின் பேசிக் சந்தாவும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








