Jio SIM கார்டு வைத்து இருப்பவர்களுக்கு அடுத்த 1 வருடத்துக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ், 5G டேட்டா!
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தனது வாடிக்கையாளர்களுக்காக 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் 2 வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. ரூ.3,599 மற்றும் ரூ.3,999 விலையிலான இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் வருட முழுவதும் வேலிடிட்டி கொடுப்பது மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகளை கொண்டுள்ளது.
தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி, ஜியோஹாட்ஸ்டார் சந்தா, ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் கூகுள் ஜெமினி ப்ரோ போன்ற பல்வேறு பிரீமியம் சலுகைகளையும் வழங்குவதால் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விரும்பாதவர்கள் இந்த வருடாந்திர திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.3,599 திட்டத்தில் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 912.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினமும் 2.5 ஜிபி அதிவேக டேட்டாவை பயன்படுத்த முடியும். இந்த லிமிட் முடிந்த பிறகு இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். இந்தியா முழுவதும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) வசதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஜியோ ரூ.3,999 திட்டத்தில் ரூ.3,599 திட்டத்தில் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக விளையாட்டு ரசிகர்களுக்காக ஃபேன்கோட் (FanCode) சந்தா மட்டும் கிடைக்கிறது.
இந்த 2 வருடாந்திர திட்டங்களின் மிகப்பெரிய சிறப்பம்சமாக ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோவின் (Google Gemini Pro) 18 மாத சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் 5 டிபி கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) மற்றும் நானோ பனானா (Nano Banana) உள்ளிட்ட பல்வேறு ஏஐ அணுகல்களை பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் (JioHotstar Mobile + Hollywood) சந்தாவும் இலவசமாக வழங்கப்படுவதால், லைவ் கிரிக்கெட் போட்டிகள், ஹாலிவுட் திரைப்படங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு கன்டென்ட்களை கண்டு கொள்ள முடியும். அதனுடன் 50 ஜிபிக்கு ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) ஸ்டோரேஜ் கிடைக்கும்.
ஜியோ டிவி (JioTV) சந்தாவையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இந்த கூடுதல் சலுகைகளை முழுமையாக பெற சில விதிமுறைகளும் உள்ளன. 18 மாத கூகுள் ஜெமினி ப்ரோ பலனை தொடர்ந்து பெற, வாடிக்கையாளர்கள் ஆஃபர் காலம் முழுவதும் குறைந்தபட்சம் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட அன்லிமிடெட் 5ஜி திட்டத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்க வேண்டும்.
அதேபோல் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகளை பயன்படுத்த ரீசார்ஜ் செய்யப்பட்ட அதே ஜியோ எண்ணைக் கொண்டு லாகின் செய்ய வேண்டும். மாதாந்திர திட்டங்களில் இருப்பவர்கள் தங்களது முந்தைய ரீசார்ஜ் காலாவதியான 48 மணி நேரத்திற்குள் அடுத்த ரீசார்ஜை மேற்கொண்டால் மட்டுமே 2ஆவது மற்றும் 3ஆவது மாத ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பெற முடியும்.
அதிக டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி, அன்லிமிடெட் 5ஜி மற்றும் பிரீமியம் ஏஐ சேவைகளை ஒரே ரீசார்ஜில் பெற விரும்பும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 வருடாந்திர திட்டங்கள் சரியான தேர்வாக இருக்கும். தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் வருடாந்திர திட்டங்களில் இந்த 2 ஆப்ஷன்கள் மட்டுமே ஜியோ கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications