மாதம் ரூ.299 க்கு 2026 முழுக்க வேலிடிட்டி.. டெய்லி 2.5GB, SMS, வாய்ஸ்.. மார்க்கெட்டை திணறவிடும் Jio பிளான்!
உங்களுடைய ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) சிம் கார்ட்டை 1 ஆண்டு முழுவதுமாக, அதாவது 365 நாட்களுக்கும்.. மிகவும் மலிவான விலையில் ஆக்டிவ் ஆக வைத்து கொள்ள விரும்புகிறீர்களா? ஆம் என்றால் மாதாந்திரம் ரூ.299 செலவில் ஒரு அட்டகாசமாக பிளான் இருக்கிறது.
அது ரூ.3599 ரீசார்ஜ் (Jio Rs.3599 Recharge Plan) ஆகும். இதை 12 மாதங்களுக்கு பிரித்தால் மாதாந்திர ரூ.299 என்கிற செலவின் கீழ் உங்களுக்கு 1 ஆண்டு / 365 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். அதாவது நீங்கள் இப்போது ரீசார்ஜ் செய்தால் 2026 ஆம் ஆண்டு முழுவதுமாக உங்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும்.

நன்மைகளை பொறுத்தவரை ரூ.3599 திட்டம் ஆனது தினமும் 2.5 ஜிபி டேட்டா (Daily 2.5G Data) என மொத்தம் 912.5 அளவிலான டேட்டா (Total of 912.5GB Data), டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Daily 100 SMS) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice calls) ஆகிய நன்மைகளை 365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவர, ஜியோ ஸ்பெஷல் ஆபரின் (Jio Special Offer) கீழ், புதிய கனெக்ஷனுக்கு 2 மாத இலவச ஜியோ ஹோம் சோதனை (2 Months Free Jio Home Test) கிடைக்கும், மேலும் ஜியோ ஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (Jio Hotstar Mobile / TV Subscription) 3 மாதங்களுக்கு கிடைக்கும்.
இதோடு ஜியோ ஏஐ கிளவுட் (இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ்) நன்மையும் கிடைக்கும். எல்லாவற்றை விட முக்கியமாக 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனர்களுக்கு ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினியின் 18 மாத இலவச ப்ரோ திட்டமும் (Google Gemini Pro Plan)கிடைக்கும்.
ரூ.3599-ஐ போலவே, ஜியோ நிறுவனத்தின் கீழ் நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் மேலும் சில பெஸ்ட் பிளான்களும் உள்ளன. 1 முழு ஆண்டும் ரீசார்ஜ் செய்ய விரும்பும் பயனர்களுக்கு ரூ.3,999 திட்டம் - தனித்து நிற்கும் ஒரு ஆப்ஷன் ஆக இருக்கிறது. இது டெய்லி 2.5 ஜிபி டேட்டாவுடன் 365 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது.
இன்னும் குறைந்த செலவில் நீட்டிக்கப்பட்ட செல்லுபடியை விரும்பும் பயனர்களுக்கு ரூ.2,025 திட்டம் உள்ளது. ரூ.2,025 ஆனது ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா உடன் 200 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. இதோடு ரூ.1,799 திட்டம் உள்ளது. இது அதிக டேட்டா மற்றும் 3 மாத கால வேலிடிட்டி என்கிற காம்பினேஷனை தேடும் பயனர்களை இலக்காக கொண்டுள்ளது, இது தொகுக்கப்பட்ட ஓடிடி அணுகலுடன் 3 ஜிபி தினசரி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது.
அடுத்தபடியாக ரூ.999 திட்டம் உள்ளது. இது 2ஜிபி டெய்லி டேட்டாவுடன் 98 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது, பெரும்பாலான மிட்-ரேன்ஜ் பிளான்களுடன் ஒப்பிடும்போது இதன் நீண்ட செல்லுபடியாகும் காலத்திற்காக, ரூ.999 தனித்து நிற்கிறது. இன்னும் குறுகிய கால வேலிடிட்டியை விரும்பும் பயனர்களுக்கு, ரூ.449 திட்டம் உள்ளது.
ரூ.449 ஆனது 3ஜிபி டெய்லி டேட்டாவுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இது ஒரு மாதத்திற்கான அதிக டேட்டா நுகர்வை வழங்கும் திட்டமாக உள்ளது. கடைசியாக ரூ.399 திட்டம் உள்ளது. இது 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது விலை மற்றும் தினசரி டேட்டா சலுகைகளுக்கு இடையில் சமநிலையை வழங்கும் ஜியோவின் பெஸ்ட் பிளான்களில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications








