Home
News

Airtel, Vi-ஐ முடித்த Jio.. மாசம் ரூ.146-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. 3600 எஸ்எம்எஸ்கள்!

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் வருடம் முழுவதும் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், டேட்டா சலுகைகளை கொடுக்காமல் கிடைக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு (Voice Only Plan) செல்லலாம். இதில் ஜியோ (Jio) நிறுவனம் 336 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது.

மொத்தம் 2 திட்டங்களில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் சலுகைகளை மட்டுமே கொடுக்கிறது. ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) ஆக்டிவாக இருந்தால் போதும், அதே நேரத்தில் வாய்ஸ் கால்களை செய்தால் போதும் என்ற தேவை இருக்கும் கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. வேல்யூ பிரிவின் கீழ் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Airtel, Vi-ஐ முடித்த Jio.. மாசம் ரூ.146-க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ.1748 திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Plan Details): இந்த திட்டம் வேல்யூ பிரிவில் கிடைக்கும் வருடாந்திர திட்டமாக இருக்கிறது. வருடம் முழுவதும் வேலிடிட்டி கிடைக்கும் என்று நினைக்க வேண்டும். டெலிகாம் நிறுவனங்களின் கணக்கின்படி மாதத்துக்கு 28 நாட்கள் வீதம் 12 மாதங்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 336 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே கொடுக்கும்.

இதுவும் கிட்டத்தட்ட வருடாந்திர வேலிடிட்டி போலவே இருக்கும். ஆகவே, ஒரு 28 நாட்களுக்கு செலவாகும் தொகையை கணக்கிடும்பட்சத்தில் ரூ.146 மட்டுமே கஸ்டமர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 336 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls) கொடுக்கப்படும்.

அன்லிமிடெட் எஸ்டிடி & ரோமிங் கால்களும் (Unlimited STD & Roaming Calls) கொடுக்கப்படும். இந்த வாய்ஸ் கால்களுக்கு அடுத்து 3600 எஸ்எம்எஸ்களை இந்த வாய்ஸ் ஒன்லி திட்டம் கொடுக்கும். இந்த 2 சலுகைகளுக்கு பிறகு வழக்கமாக எல்லா ஜியோ திட்டங்களுக்கும் கிடைக்கிற ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கொடுக்கப்படும்.

இந்த சந்தாக்கள் பிரீமியமான சலுகைகளை கொடுக்காது. இலவமாக கிடைக்கும் அணுகல்களை மட்டுமே கொடுக்கும். இந்த திட்டம் வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் கொடுக்கும். ஒருவேளை ஜியோ கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கு சிம் ஆக்டிவ் போதுமானால், மற்றொரு வாய்ஸ் ஒன்லி திட்டம் இருக்கிறது. இதில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஒரே மாதிரியான சலுகைகளை கொடுக்கிறது

ஜியோ ரூ.448 திட்ட விவரங்கள் (Jio Rs 448 Plan Details): இந்த வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும். 1000 எஸ்எம்எஸ்களை கொடுக்கும். மேலும், ஜியோ டிவி சந்தாவும், ஜியோ ஏஐ கிளவுட் சந்தாவும் கொடுக்கப்படும். இந்த திட்டங்களை வேல்யூ பிரிவுக்கு சென்றே பெற முடியும்.

எப்படி ரீசார்ஜ் செய்வது? மைஜியோ ஆப் அல்லது ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்துக்கு சென்று கொள்ளுங்கள். ப்ரீபெய்ட் திட்டங்களின் விருப்பத்துக்கு செல்லுங்கள். இதில் பாப்புலர் திட்டங்கள், ட்ரூ 5ஜி அன்லிமிடெட் திட்டங்கள் என்று பல்வேறு விருப்பங்கள் இருக்கும். இதில் கடைசியாக வேல்யூ (Value) விருப்பம் இருக்கும்.

இதை கிளிக் செய்தால், வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice only plans) இருக்கும். இதில் முதலாவதாக ஜியோ ரூ.1748 திட்டம் மற்றும் இரண்டாவதாக ஜியோ ரூ.448 திட்டம் இருக்கும். ஆகவே, உங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கும் விலையை முடிவு செய்துவிட்டு, அதையே கிளிக் செய்து கொள்ளுங்கள். கீழே பை (Buy) விருப்பம் இருக்கும். இது பேமெண்ட் பக்கத்துக்கு கொண்டு செல்லும்.

Best Mobiles in India

English summary
Jio 336 Days Voice Only Plan With 3600 SMS Unlimited Voice Calls Jio TV Jio AI Cloud At Rs 1748
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X