இப்படி வாரி கொடுத்தா யாரு வெளிய போவா.. Jio-வின் 30 நாள் பிளான்.. 25GB டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ்.. என்ன விலை?
உண்மைதான், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது தனது மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்திய பின்னர், பல கஸ்டமர்கள் பிஎஸ்என்எல்-ன் பக்கம் ஜம்ப் அடித்தனர். அவர்களில் - தத்தம் சிம் கார்டுகளை மலிவான விலையில் ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள விரும்பிய பட்ஜெட் வாசிகள் தான் அதிகம்.
4ஜி அல்லது 5ஜி நெட்வொர்க், ஹைஸ்பீட் டேட்டா, தொந்தரவு இல்லாத வாய்ஸ் கால்கள், டெய்லி எஸ்எம்எஸ், கூடுதல் ஓடிடி அல்லது இலவச நன்மைகளை விரும்பும் எவருமே பிஎஸ்என்எல் பக்கம் சாயவில்லை. இன்னமும் ஜியோவின் கீழ் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் மேற்கண்ட நன்மைகளை.. வெவ்வேறு வகையான விலைகளில் வழங்குவதில் ஜியோ தான் கில்லாடி என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

அதிலொரு பிளான் தான் - ஜியோவின் 30 நாள் பிளான், இதை ஜியோ ப்ரீடம் பிளான் என்றும் கூறலாம். பெரும்பாலான 1 மாத கால திட்டங்கள் 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் தான் வருகின்றன. ஆனால் ஜியோவின் ப்ரீடம் பிளான் ஆனது முழுதாக 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. கூடவே டெய்லி டேட்டாவை வழங்காமல் 25ஜிபி பல்க் டேட்டாவை வழங்குகிறது.
இதனால் தான் இந்த திட்டம் - ப்ரீடம் பிளான் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ.355 ஆகும். மொத்தம் 25ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளை வழங்கும் இந்த திட்டம் 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.
கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை இது ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய ஜியோ ஆப்களின் இலவச சந்தாக்களையும் வழங்குகிறது. இதன் கீழ் கிடைக்கும் ஜியோ சினிமா சந்தாவானது ஜியோ சினிமா பிரீமியம் சந்தா அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜியோ சினிமா சேவையானது ஜியோஹாட்ஸ்டார் உடன் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டாலும் கூட ஜியோ சினிமா ஆப் ஆனது இன்னும் தனியாக டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.
ஒருவேளை நீங்கள் ஜியோபாரத் 4ஜி போன் பயனராக இருந்தால் இன்னும் சூப்பர்! ஜியோபாரத் 4ஜி மொபைல் ரீசார்ஜ் தொகுப்பின் கீழ் மொத்தம் 3 திட்டங்கள் உள்ளன. அவைகள் 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 11 மாதங்கள் என்கிற வெவ்வேறு வகையான வேலிடிட்டி உடன் வருகின்றன. இதில் 11 மாத கால வேலிடிட்டி உடன் வரும் ஜியோபாரத் திட்டம் தான் ஹைலைட்!
ஏனென்றால் இது மாதாந்திரம் வெறும் ரூ.112 செலவின் கீழ் டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகின்றன. இந்த ஜியோபாரத் திட்டத்தின் விலை ரூ.1234 ஆகும். இதுதான் ஜியோபாரத் ப்ரீபெய்ட் பேக்குகளிலேயே மிகவும் விலையுயர்ந்த ஜியோபாரத் ஃபோன் திட்டமாகும். இது 336 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.
நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 0.5ஜிபி டேட்டா கிடைக்கும்; அதாவது செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.
ரூ.123 திட்டம் தான் இருப்பதிலேயே மிகவும் மலிவான ஜியோபாரத் போன் திட்டமாகும். இது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின்கீழ் டெய்லி 0.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதலாக தேர்ந்தெடுக்க்கப்பட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்களும் கிடைக்கும்.
கடைசியாக உள்ளது ரூ.234 திட்டமாகும். இது 56 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது. நன்மைகளை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் டெய்லி 0.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதுவும் தேர்ந்தெடுக்க்கப்பட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகல்களை வழங்கும்.


Click it and Unblock the Notifications








