Jio நோ-டென்சன் ரீசார்ஜ் பிளான்.. 198GB டேட்டா.. 3 மாசத்துக்கு எல்லாமே யூஸ் பண்ணிக்கோங்க.. புது Jio பிளான் விலை
ஜியோ (Jio) நிறுவனம் தற்போது பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை (New Jio prepaid plans) அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விருப்பமில்லாத அதன் நீண்ட நாள் வேலிடிட்டி திட்டங்களை விரும்பும் வடிக்கையாளர்களுக்காக நிறுவனம் 3 மாதங்களுக்கு மேல் செல்லுபடியாகும் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (3 months validity plan) 198GB டேட்டா (data) நன்மையுடன் ஒட்டுமொத்த நன்மைகளையும் சேர்த்து வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஜியோ தொலைத்தொடர்பு சேவையிலிருந்து விலகி சென்ற பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் ஜியோவை நோக்கி படை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3 மாத காலம் என்று சொல்லும் பொழுது, 90 நாட்கள் என்பது நமக்கு தெளிவாக புரிகிறது. ஆனால், ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த திட்டம் 90 நாட்களுடன் கூடுதலாக 8 எக்ஸ்ட்ரா நாட்களை சேர்த்து, மொத்தமாக 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு வித்தியாசமான ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ. 999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆம், நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது ஜியோ ரூ. 999 திட்டம் என்ற பெயருடன் 98 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது.

Jio நோ-டென்சன் ரீசார்ஜ் பிளான்.. 198GB டேட்டா:
ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan) வழக்கமான 3 மாத திட்டமாக இல்லாமல், கூடுதலாக 8 நாள் செல்லுபடியை சேர்த்து மொத்தமாக 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இதில் அணைத்து நெட்வொர்க்கிற்குமான லோக்கல் (local) அழைப்புகள், எஸ்டிடி (STD) அழைப்புகள் மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் (international roaming) அழைப்பு நன்மை போன்ற நன்மைகளை Jio அடக்கியுள்ளது.
இந்த புதிய ஜியோ 999 பிளான் (Jio 999 Plan) வழங்கும் டேட்டா நன்மை பற்றி பேசுகையில், இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் இந்த திட்டம் மொத்தமாக 196GB டேட்டா (total 196GB data) நன்மையை 98 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தில் வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளையும் வழங்குகிறது.
ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan):
மொத்தமாக 98 நாட்களுக்கு நீங்கள் 9800 எஸ்எம்எஸ் மெசேஜ் நன்மையை பெறுகிறீர்கள். இந்த திட்டம் ஜியோவின் ட்ரூ 5ஜி டேட்டா (Jio True 5G) நன்மையுடன் வருகிறது. Jio 5G நெட்வொர்க் கிடைக்கும் வட்டங்களில் இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையையும் வழங்குகிறது. இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை அனுபவிக்க உங்களிடம் 5ஜி இணக்கமான ஸ்மார்ட்போன் டிவைஸ் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
இந்த திட்டத்துடன் கிடைக்கும் இலவச நன்மைகளாக ஜியோ டிவி (Jio Tv) சந்தா, ஜியோ சினிமா (Jio Cinema) சந்தா மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சந்தா போன்ற சேவைகள் பயன்படுத்த கிடைக்கிறது. 3 இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற டென்ஷன் ஃப்ரீ சூழ்நிலை உருவாக்குகிறது. இதனால், ஜியோ வாடிக்கையாளர்கள் சிலர் இந்த திட்டத்தை பட்ஜெட்டில் நோ-டென்சன் பிளான் என்று கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications








