Home
News

மறுபடியும் ரூ.200-க்கு அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB தினசரி டேட்டா.. 5G-க்கு கட்டுப்பட்ட Jio கஸ்டமர்கள்!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 1 ஜிபி, 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டாவை தினமும் கொடுக்கும்படியான ப்ரீபெய்ட் திட்டங்கள் (Prepaid Plan) கிடைக்கின்றன. இதில் 5ஜி டேட்டாவை பெறுவதற்கு 2 ஜிபி திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது. ரூ.300-க்கும் மேல் இந்த திட்டங்கள் கிடைத்து வந்தது. ஆனால், ஒட்டுமொத்த கஸ்டமர்களையும் 5ஜிக்கு மாற்றும்படி வெறும் ரூ.198-க்கு 2 ஜிபி திட்டத்தை ஜியோ களமிறக்கி இருக்கிறது. இப்படி மலிவு விலைக்கு கிடைக்கும் 2 ஜிபி திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஜியோவில் 2 ஜிபி டேட்டாவை மலிவு விலை திட்டத்தில் பெற வேண்டுமானால், முதலில் ரூ.198 விலைக்கு கிடைக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை, வாய்ஸ் கால்கள் (Voice Calls) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

மறுபடியும் ரூ.200-க்கு அம்பானி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா!

ஜியோ ரூ.198 திட்டம் (Jio Rs.198 Plan): ஜியோவின் ஆரம்ப விலை 2 ஜிபி டேட்டா திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, நாள்தோறும் 2 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டா போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் பயன்படுத்த முடியும். போஸ்ட் டேட்டாானது 2 ஜிபிக்கு பிறகு உங்களுக்கு கொடுக்கப்படும்.

இப்படி டேட்டா சலுகையிலேயே மிரளவிடும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதலாக பல்வேறு சலுகைகள் இருக்கின்றன. ஆகவே, 4ஜி டேட்டா மற்றும் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களின் (Roaming Calls) சலுகையை பெற்று கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ் சலுகையும் நாள்தோறும் செய்து கொள்ள கிடைக்கிறது.

மேலும், ஜியோ சினிமா (Jio Cinema) சந்தாவும், ஜியோ டிவி (Jio TV) சந்தாவும் கிடைக்கிறது. மேற்கண்ட ஒட்டுமொத்த சலுகைகளுக்கும் 14 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. இது விலைக்கு ஏற்பவே இருக்கிறது. இதற்கு அடுத்து கம்மியான விலை கொண்ட 2 ஜிபி டேட்டா திட்டம் கேட்கும் கஸ்டமர்களுக்கு ரூ.300-க்கும் கொஞ்சம் அதிகமான விலை கொண்ட மற்றொரு திட்டம் இருக்கிறது.

ஜியோ ரூ.349 திட்டம் (Jio Rs.349 Plan): அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை மாத வேலிடிட்டியில் பெற்று கொள்ள விரும்பினால், இந்த 2 ஜிபி டேட்டா திட்டத்தை கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஏனென்றால், 28 நாட்கள் வேலிடிட்டியில் தொடங்கும் முதல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் இதுவாகும். இதில் நாள்தோறும் 2 ஜிபிக்கான 4ஜி வேக டேட்டா கிடைக்கிறது.

ஆகவே, 56 ஜிபி டேட்டாவும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் வருகிறது. இந்த டேட்டா சலுகைகள் போகவே, அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டத்தில் பார்த்ததை போலவே இந்த திட்டத்திலும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா கிடைக்கிறது.

மேலும், 100 எஸ்எம்எஸ் சலுகையை தினந்தோறும் பயன்படுத்தி கொள்ள முடியும். வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட் சலுகையில் கிடைப்பதால், லோக்கல் மற்றும் எஸ்டிடி அல்லது ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 2 ஜிபி டேட்டா கண்டிப்பாக தினமும் வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இதைவிட மலிவான விலைக்கு திட்டங்கள் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio 2GB Daily Data Plan Rs 198 With 14 Days Validity Rs 349 With 28 Days Validity Affordable Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X