Home
News

Jio-வின் சிக்ஸர்.. IPL ரசிகர்களுக்கு 20GB இலவச டேட்டாவை அள்ளித் தரும் Jio.. இந்த 2 பிளானை கவனியுங்க..

ஜியோ (Jio) நிறுவனம் அதன் 46 கோடி வாடிக்கையாளர்கள் அனைவரும் 20GB டேட்டாவை இலவசமாக (20GB free data) பெற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பதாக ஒரு இன்ப அதிர்ச்சி செய்தியை இப்போது வெளியிட்டுள்ளது. ஆம், மக்களே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் (IPL cricket season) மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் IPL ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அதன் 2 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 20GB எக்ஸ்ட்ரா டேட்டாவை (20GB extra data) இலவசமாக இப்போது வழங்குகிறது. இது எந்த திட்டம்? இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மை விபரங்களை பற்றி பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான (Telecom company) ரிலையன்ஸ் ஜியோ, அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்பர் அதிர்ச்சியை வழங்கும் விதமாக, இப்போது அதன் இரண்டு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களுடன் 20GB எக்ஸ்டா ஹை ஸ்பீட் டேட்டாவை இலவசமாக (20GB extra free high speed data) வழங்குவதாக அறிவித்திள்ளது. IPL கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் கிடைக்கும் இந்த இலவச 20GB டேட்டாவை யார் தான் வேண்டாமென்று சொல்வார்கள். சரி, எந்த 2 திட்டங்களுடன் இந்த இலவச டேட்டா (Jio free data) கிடைக்கிறதென்று பார்க்கலாம் வாங்க.

Jio-வின் சிக்ஸர்.. IPL ரசிகர்களுக்கு 20GB இலவச டேட்டாவை தரும் Jio..

1. ஜியோ ரூ. 749 திட்டம் (Jio Rs 749 Plan):
ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் பட்ஜெட் பிரியர்களிடையே மிகவும் பிரபலமான திட்டமாக இருக்கிறது. ஜியோ ரூ. 749 திட்டம் (Jio Rs 749 Plan) 72 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 72 days validity plan) உடன் வருகிறது. இந்த திட்டம் தினமும் 2GB டேட்டா நன்மையை (Jio 2GB data per day) வழங்குகிறது. இதன் மூலம் இந்த திட்டம் அதன் ஒட்டுமொத்த செல்லுபடியாகும் காலத்திற்கு 144GB டேட்டா நன்மையை வழங்குகிறது.

இத்துடன், IPL ரசிகர்களுக்காக Jio நிறுவனம் தற்போது வழங்கும் 20GB இலவச எக்ஸ்ட்ரா டேட்டா (Jio extra free data plans) நன்மையையும் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம் இந்த திட்டம் உங்களுக்கு 164GB ஹை ஸ்பீட் டேட்டா (high speed data) நன்மையை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளையும் வாரி வழங்குகிறது. கூடுதல் நன்மைகளாக இதில் OTT நன்மை மற்றும் ஜியோ இலவச நன்மைகளும் கிடைக்கப் பெறுகின்றன.

2. ஜியோ ரூ. 899 திட்டம் (Jio Rs 899 Plan):
ஜியோ வழங்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 90 days validity plan) உடன் வருகிறது. இந்த திட்டம் ரூ. 899 விலையில் அட்டகாசமான நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை அதன் பயனருக்கு வழங்குகிறது. இந்த திட்டம் அதன் செல்லுபடியாகும் ஒட்டுமொத்த காலத்தில் 180GB டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் தற்போது ஜியோ இலவசமாக வழங்கும் 20GB ஹை ஸ்பீட் டேட்டாவும் கிடைக்கிறது.

இத்துடன் சேர்த்து இந்த திட்டம் மொத்தமாக 200GB டேட்டாவை (Jio 200GB data benefit plan) வழங்குகிறது. ஜியோ நிறுவனம் இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) OTT நன்மையையும் 90 நாட்களுக்கு கிடைக்கும்படி, இத்துடன் சேர்த்து வழங்குகிறது. இது தவிர இந்த இரண்டு திட்டங்களும் ஜியோ இலவச நன்மைகளையும் பெறுகிறது.

ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற இலவச நன்மைகளையும் இலவசமாக வழங்குகிறது. IPL போட்டிகளை தடையின்றி கண்டு மகிழ, ஜியோ வழங்கும் இந்த எக்ஸ்ட்ரா இலவச டேட்டா நன்மை கிடைக்கும் திட்டங்களை பயன்படுத்த தவறாதீர்கள் மக்களே.

Best Mobiles in India

English summary
Jio 20GB Extra Free High Speed Data With Jio Rs 749 and Jio Rs 899 Plan Check All Benefit Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X