Home
News

Jio SIM காட்டில் மழை.. அடுத்த 200 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2.5 ஜிபி டேட்டா!

ஜியோ கஸ்டமர்கள் வருடாந்திர திட்டங்களுக்கு செல்லாமல், பாதி வருடத்துக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யும்படி ஒரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இது 6 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்கும். வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், ஓடிடி சந்தாவையும் பெறலாம்.

டெலிகாம் நிறுவனங்களின் வருடாந்திர திட்டங்களில் 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். 6 மாத திட்டங்கள் என்றால், 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், ஜியோ (Jio) நிறுவனம், 180 நாட்களுக்கு மேல் 20 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும்படி ஜியோ ரூ.2025 திட்டத்தை (Jio Rs 2025 Plan) களமிறக்கி இருக்கிறது.

Jio SIM காட்டில் மழை.. அடுத்த 200 நாட்களுக்கு இதுதான் ரீசார்ஜ்!

ஜியோ ரூ.2025 திட்ட விவரங்கள் (Jio Rs 2025 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது மாதங்களுக்கு மேல் 20 நாட்கள் கிடைப்பதாகும். இந்த நாட்கள் முழுவதுமே அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். தினசரி டேட்டாவும் அதிகமாக இருக்கிறது.

ஆகவே, 4ஜி கஸ்டமர்களாக இருந்தாலும், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 200 நாட்களை வேலிடிட்டியாக கொடுப்பதால், மொத்தமாக 500 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்க முடியும். இதுபோக 2.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தலாம்.

இப்படி டேட்டா சலுகைகள் ப்ரீபெய்ட் கஸ்டமர்களை ஜியோ நிறுவனம் மிரள வைத்திருக்கிறது. மேலும், 200 நாட்கள் முழுவதும் வழக்கம்போல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.

இதை நாளொன்றுக்கு செய்து கொள்ளலாம். இந்த முக்கிய சலுகைகள் போக ஓடிடி சந்தா மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் சந்தாவை இந்த ஜியோ ரூ.2025 திட்டம் கொடுத்து இருக்கிறது. இதில் ஜியோஹாட்ஸ்டாப் மொபைல்+ ஹாலிவுட் (JioHotstar Mobile+ Hollywood) சந்தா கிடைக்கும். இதை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.

50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கொடுக்கும்படி ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) அக்சஸ் கிடைக்கிறது. இதை ஜியோ மொபைல் நம்பரை வைத்து மட்டுமே பெற்று கொள்ள முடியும். இந்த கிளவுட் ஸ்டோரேஜ் ஜியோ நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், இதே திட்டத்தில் கூகுள் நிறுவனத்திடம் இருந்தும் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

ஜியோ அன்லிமிடெட் 5ஜி திட்டங்களில் (Jio Unlimited 5G Plans) ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. இதில் 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் நானோ பனானா உள்ளிட்ட பிரீமியம் அணுகல்கள் கிடைக்கும். இந்த அணுகல்களை 18 மாதங்களுக்கு பெற்று கொள்ளலாம். இந்த சந்தாவை ஜியோ ரூ.2025 திட்டமும் கொடுத்து இருக்கிறது.

இதில் 18 மாதங்களுக்கு சந்தா வருவதால், 200 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த திட்டத்தை 48 மணி நேரத்துக்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதுவும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டமாக இருக்க வேண்டும் ரூ.349 விலை கொண்ட திட்டம் அல்லது அதற்கு மேல் விலை கொண்ட திட்டமாக இருக்க வேண்டும். இதை செய்து 18 மாதங்கள் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Jio 200 Days Validity Plan With 500GB Data Unlimited Voice Calls JioHotstar Mobile Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X