Jio-வின் 2 நாள் ரீசார்ஜ்.. அம்பானியின் பெஸ்ட் கஸ்டமர் பர்ஸ்ட் பிளான்.. விலை மற்றும் நன்மைகள்!
முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது மிகவும் மலிவான மற்றும் நெகிழ்வான டெலிகாம் ஆப்ரேட்டராக தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டே வருகிறது. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ஜியோவின் இந்த 2 நாள் ரீசார்ஜ் தான்.
இது இந்தியாவிலேயே மிகவும் மலிவான விலைக்கு மிகவும் குறுகிய செல்லுபடியாகும் திட்டங்களில் ஒன்று மட்டுமல்ல.. இதை ஒரு பெஸ்ட் கஸ்டமர் பர்ஸ்ட் பிளான் (Customer First Plan) என்றும் கூறலாம். அதாவது எதைவிடவும் வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு பிளான் என்று கூறலாம். அது ரூ.29 ரீசார்ஜ் ஆகும்.

இந்த திட்டமானது 2 நாள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 2 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்கும். இருப்பினும் 2ஜிபி என்கிற டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இது 64கேபிபிஎஸ் (64Kbps) என்கிற இண்டர்னெட் ஸ்பீடில் தொடர்ந்து அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும். இந்த ஸ்பீட் வாட்ஸ்அப், யுபிஐ போன்ற மிதமான சேவைகளை பயன்படுத்த போதுமானதாக இருக்கும்.
ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் இது புதிதாக சேர்க்கப்படவில்லை என்றாலும் கூட, இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் காரணமாக நாளுக்கு நாள் கவனத்தை ஈர்க்கிறது. அவசரகால பயன்பாடு, பயணம் அல்லது மெயின் ரீசார்ஜ்களை டாப் அப் செய்தல் என.. குறுகிய கால இண்டர்நெட் அணுகலுக்கான வளர்ந்து வரும் தேவையை மலிவான விலையில் பூர்த்தி செய்கிறது
மேலும் இந்த திட்டம், தனித்துவமான பயனர் பிரிவின் கீழ் உள்ள லைட் டேட்டா கன்ஸ்யூமர், சாதாரண பயனர்கள், மாணவர்கள் மற்றும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள பயனர்களை ஈர்க்கிறது. பலருக்கும், இந்த திட்டம் ஒரு பேக்கப் டூலாகவும் செயல்படுகிறது. அதாவது பில்லிங் சுழற்சியின் கடைசி நாட்களில், தற்காலிக சிம்மிற்கு டேட்டா நன்மை தேவைப்படும் போது அல்லது பிராட்பேண்ட் நிறுவலுக்காக காத்திருக்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரூ.29 திட்டமானது "ஒரே மாதிரியான திட்டங்கள் அனைவருக்கும் பொருந்தும்" என்கிற கோட்பாடு இனியும் வேலை செய்யாது என்கிற ஜியோவின் புரிதலை பிரதிபலிக்கிறது. இது போன்ற ஸ்மார்ட் ஆன, மிகவும் மலிவான பேக்குகளை வழங்குவது வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையை விட்டு வெளியேறுவதையும் தடுக்கிறது.
ஜியோ வழங்கும் மற்றொரு சுவாரசியமான சலுகையை பொறுத்தவரை, ஜியோவின் கிளவுட் பிசி சேவை ஆக ஜியோபிசி (JioPC) அறிமுகம் செய்யப்பட்டது அல்லவா? அது அறிமுக சலுகையின் கீழ் எந்த ஆக்டிவேஷன் கட்டணமும் இல்லாமல் அணுக கிடைக்கிறது மற்றும் வரம்பற்ற பயன்பாட்டையும் வழங்குகிறது.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, முதலில்ஒரு ஜியோபிசி அக்கவுண்ட்டை (JioPC Account) பதிவு செய்ய வேண்டும். மேலும் ஜியோபிசி சேவையை பயன்படுத்த ஒரு வாடிக்கையாளருக்கு ஜியோ பைபர் (Jio Fiber) அல்லது ஜியோ ஏர்பைபர் (Jio Air Fiber) இணைப்பு மற்றும் ஜியோ செட்-டாப் பாக்ஸ் (Jio Set Top Box) தேவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
உங்கள் டிவியில் உள்ள எஸ்டிபி ஆப்ஸ் மெனுவிலிருந்து (STB Apps Menu) ஜியோபிசி ஆப்பிற்கு சென்று. யூஎஸ்பி (USB) அல்லது ப்ளூடூத் (Bluetooth) வழியாக கீபோர்ட் (Keyboard) மற்றும் மவுஸை (Mouse) கனெக்ட் செய்து எஸ்டிபி உடன் இணைப்பதன் மூலம் ஜியோபிசி வழியாக உங்கள் டிவியை பெர்சனல் கம்பியூட்டர் ஆக மாற்ற முடியும்.
அறியாதோர்களுக்கு ஜியோபிசி என்பது ஒரு கிளவுட் அடிப்படையிலான விர்ச்சுவல் டெஸ்க்டாப் சேவை ஆகும். இது ஜியோ செட்-டாப் பாக்ஸை (Jio STB ) பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள டிவியை ஒரு பெர்சனல் கம்பியூர்ட்டர் ஆக மாற்ற அனுமதிக்கிறது. இது மாணவர்கள் மற்றும் மலிவு விலையில் பெர்சனல் கம்பியூட்டர் இல்லாத மற்றும் எசன்ஷியல் கம்பியூட்டிங்கை தேடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications








