ஜியோ போஸ்ட்பெயிட்ரூ.199-ஐ நம்பி ரீசார்ஜ் செய்யலாமா.? வேண்டாமா.? ஒரு ஒப்பீடு.!
வெறும் ரூ.199/- மதிப்பிலான ஜியோ போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
மாஸ்டர் பிளான் என்று சொல்வார்களே.. அது இதுதான் போலும். டெலிகாம் துறையில், இதுவரை இல்லாத அளவிலான குறைந்த விலை திட்டங்களை அறிமுகம் செய்து, ஏர்டெல், வோடாபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை வெளிப்படுத்தி, அந்நிறுவனங்கள் மீதான வெறுப்பையும், கோபத்தையும் கிளப்பி விட்டு, அவர்களையும் ஜியோ பாணியிலான ரீசார்ஜ் திட்டங்களை அறிவிக்க வைத்த ரிலையன்ஸ் ஜியோ, நேற்று மாலை, இந்தியா டெலிகாம் துறைக்குள், இன்னொரு இடியை இறக்கியது.!
வெறும் ரூ.199/- மதிப்பிலான ஜியோ போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல், வோடாபோன் போன்ற இதர நிறுவனங்கள் என்னென்ன விலைகளின் கீழ் போஸ்ட்பெயிட் திட்டங்களை வழங்குகிறது என்பதை நன்றாக புரிந்துகொண்டு, அதன் பாதி விலைக்கு ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தை அறிவித்துள்ள ஜியோவின் வியாபார தந்திரத்தை என்னவென்று கூறுவது.!

இந்த 4 திட்டங்களின் எது பெஸ்ட்.?
சரி, பாதி விலைக்கு கொடுத்தால் போதுமா.? நன்மைகள் எப்படி.? ஜியோவின் ரூ.199, ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399, வோடபோனின் ரூ.399, ஐடியா செல்லுலாரின் ரூ.389/- போன்ற அடிப்படை போஸ்ட்பெயிட் திட்டங்களின் நன்மைகள் என்ன.? இந்த 4 திட்டங்களின் எது பெஸ்ட்.? என்பதை பற்றி விரிவாக ஆராய்வோம் வாருங்கள்.

ஏர்டெல் போஸ்ட்பெயிட் ரூ.399-ன் நன்மைகள் :
பில்லிங் சுழற்சிக்கு (1 மாதம்) கிடைக்கும் டேட்டா : 20 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
டேட்டா ரோல் ஓவர் அம்சம் : உண்டு (200ஜிபி வரை என்கிற வரம்பின் கீழ் )
இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் : உண்டு.
இலவச தேசிய ரோமிங் அழைப்புகள் : உண்டு.
டெக்ஸ்ட் மெசேஜ்கள் : நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள்
கட்டண ஐஸ்டி அழைப்புகள் : தனிப்பட்ட முறையில் ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

வோடாபோன் போஸ்ட்பெயிட் ரூ.399-ன் நன்மைகள் :
பில்லிங் சுழற்சிக்கு (1 மாதம்) கிடைக்கும் டேட்டா : 20 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
டேட்டா ரோல் ஓவர் அம்சம் : உண்டு (200ஜிபி வரை என்கிற வரம்பின் கீழ் )
இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் : உண்டு.
இலவச தேசிய ரோமிங் அழைப்புகள் : உண்டு.
டெக்ஸ்ட் மெசேஜ்கள் : கிடையாது.
இதர நன்மைகள் : வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்கான வோடபோன் பிளே ஆப், கட்டணத்தின் கீழான நெட்ஃபிக்ஸ் சந்தா.

ஐடியா போஸ்ட்பெயிட் ரூ.389-ன் நன்மைகள் :
பில்லிங் சுழற்சிக்கு (1 மாதம்) கிடைக்கும் டேட்டா : 20 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
டேட்டா ரோல் ஓவர் அம்சம் : உண்டு (200ஜிபி வரை என்கிற வரம்பின் கீழ் )
இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் : உண்டு.
இலவச தேசிய ரோமிங் அழைப்புகள் : உண்டு.
டெக்ஸ்ட் மெசேஜ்கள் : நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள்
இதர நன்மைகள் : 12 மாதங்களுக்கு ஐடியா மூவீஸ், ம்யூசிக் மற்றும் கேம்ஸ்களுக்கான இலவச சந்தா.

ஜியோ போஸ்ட்பெயிட் ரூ.199-ன் நன்மைகள் :
பில்லிங் சுழற்சிக்கு (1 மாதம்) கிடைக்கும் டேட்டா : 25 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா
டேட்டா ரோல் ஓவர் அம்சம் : கிடையாது.
இலவச உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் : உண்டு.
இலவச தேசிய ரோமிங் அழைப்புகள் : உண்டு.
டெக்ஸ்ட் மெசேஜ்கள் : கிடையாது.
கட்டண ஐஸ்டி அழைப்புகள் : உண்டு (நிமிடத்திற்கு 50 பைசா முதல் ரூ.6/- வரை)
வைப்பு நிதி எவ்வளவு : கிடையாது.
இதர நன்மைகள் : ஜியோ ம்யூசிக், ஜியோ டிவி, ஜியோ மூவிஸ் போன்ற ஜியோ சேவைகளுக்கான இலவச அணுகல்.

Click it and Unblock the Notifications