Jio இறக்கிய மினிமம் ரூ.199 ரீசார்ஜ்.. அடிச்சு புடிச்சு ரீசார்ஜ் பண்ணும் கஸ்டமர்கள்.. வாய்ஸ், 1.5 ஜிபி டேட்டா!
ஜியோ 4ஜி திட்டங்கள் ஆரம்பித்த புதிதில் தினசரிக்கு 1 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இந்த திட்டங்கள் திடீரென்று நீக்கப்பட்டன. இதனால், தினசரி டேட்டாவில் மினிமம் 1.5 ஜிபியில் இருந்தே திட்டங்கள் தொடங்கின. இதில் ரூ.199 திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.
ஏனென்றால், தினசரி டேட்டாவுடன் மினிமம் விலையில் ரீசார்ஜ் செய்ய வேண்டுமானால், ரூ.199 திட்டம் மட்டுமே ஆப்ஷனில் இருக்கிறது. இதற்கு மேல் ரூ.239 விலை கொண்ட திட்டத்துக்கே செல்ல வேண்டும். ஆகவே, மினிமம் விலைக்கு கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதற்கான விவரங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

ஜியோ ரூ.199 திட்ட விவரங்கள் (Jio Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டாவை தினமும் பெற்று கொள்ளலாம். ஆனால், இதில் 18 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே, வேலிடிட்டி நாட்கள் முழுவதும் 27 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும். 1.5 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா கிடைக்கும்.
இந்த போஸ்ட் டேட்டா அன்லிமிடெட் சலுகையில் கிடைக்கும். ஆனால், வேகம் பத்தாது. வழக்கமாக கிடைக்கும் டேட்டா வவுச்சர்களுக்கு கஸ்டமர்கள் செல்லலாம். அதே போல அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை இந்த திட்டம் கொடுக்காது. மற்ற சலுகைகள் வழக்கமாக கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை போலவே இருக்கின்றன.
ஆகவே, 18 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) இந்த திட்டத்துக்கு கிடைக்கும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். ஜியோ டிவி (Jio TV), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) டேட்டா சலுகைகளையும் கொடுத்துள்ளது.
இந்த வேலிடிட்டி போதாது என்றால், 22 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஜியோ ரூ.239 திட்டத்துக்கு ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் சென்று கொள்ளலாம். இதிலும் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதாவது, இதிலும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஒருவேளை 28 நாட்களுக்கு வேலிடிட்டி வேண்டும். இதுபோன்ற அதற்கும் குறைவாக இருக்கக் கூடாது என்றால், கண்ணை மூடிக்கொண்டு ஜியோ ரூ.299 திட்டத்துக்கு சென்றுவிடுங்கள். இதுவும் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்படும் திட்டமாக இருக்கிறது.
ஜியோ ரூ.299 திட்ட விவரங்கள் (Jio Rs 299 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, மொத்த வேலிடிட்டியில் 42 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி இருக்கலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்காது. இருப்பினும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை 28 நாட்கள் முழுவதும் கொடுக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கொடுத்து உள்ளது. ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆப்களையும் இந்த 1.5 ஜிபி டேட்டா திட்டம் கொடுத்துள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசரி டேட்டாவுடன் கிடைக்கும் மலிவு விலை திட்டமாக இது இருக்கிறது.


Click it and Unblock the Notifications