Home
News

திடீர் வள்ளல் ஆன அம்பானி! ரூ.900 க்கு 11 மாத வேலிடிட்டி.. எந்தெந்த Jio கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும்?

ஜியோவின் (Jio) இந்த புதிய திட்டத்தை பார்த்து "ஒரே ரீசார்ஜில்.. ஓஹோனு நன்மைகள்!" என்று கண்டிப்பாக கூறலாம். முகேஷ் அம்பானி தலைமையிலான மற்றும் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, அதன் சந்தாதாரர்களுக்காக ஒரு புதிய - நீண்ட கால வேலிடிட்டி ரீசார்ஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

மொத்தம் 11 மாதங்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ.900 க்குள் (மாதந்தோறும் ரூ.81) இருப்பது இன்னும் சிறப்பு! சில வாரங்களுக்கு ஒருமுறை அல்லது சில மாதங்களுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்ய விரும்பாத பயனர்களுக்கு இது மிகவும் வசதியான மற்றும் மலிவான ரீசார்ஜ் விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த திட்டத்தின் விலை என்ன? இது எந்தெந்த ஜியோ கஸ்டர்மார்களுக்கு கிடைக்கும்? 11 மாதங்களுக்கும் என்னென்ன நன்மைகளை வழங்கும்? இதோ விவரங்கள்:

ரூ.900 க்கு 11 மாத வேலிடிட்டி.. எந்தெந்த Jio கஸ்டமர்களுக்கு கிடைக்கும்

என்ன திட்டம்? என்னென்ன நன்மைகள்? நாம் இங்கே பேசுவது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.895 திட்டத்தை பற்றித்தான். நன்மைகளை பொறுத்தவரை இது அனைத்து உள்ளூர் மற்றும் எஸ்டிடி நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங்கை வழங்கும். மேலும் 28 நாட்களுக்கு ஒருமுறை 50 எஸ்எம்எஸ்களையும் வழங்கும்.

டேட்டா நன்மையை பொறுத்தவரை இது 28 நாட்களுக்கு ஒருமுறை 2ஜிபி அதிவேக டேட்டா என செல்லுபடியாகும் முழு காலத்திற்கும் மொத்தம் 24ஜிபி வரை டேட்டாவை வழங்கும். ஒட்டுமொத்தமாக இது வாய்ஸ் கால்கள் மற்றும் "லேசான" வெப் ப்ரவுஸிங் மற்றும் அத்தியாவசிய எஸ்எம்எஸ் போன்ற எளிய செயல்பாடுகளுக்கு தங்கள் ஜியோ நம்பரை பயன்படுத்த விரும்புவோருக்கு வசதியான திட்டமாகும்..

எந்தெந்த ஜியோ கஸ்டர்மார்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும்? ஜியோவின் ரூ.895 திட்டமானது ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் போன் பயனர்களுக்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது, அதாவது இந்த திட்டத்திலிருந்து பயனடைய உங்களிடம் ஜியோ ஃபீச்சர் போன் இருக்க வேண்டும். ஒருவேளை உங்களிடம் தனியாக வாங்கப்பட்ட ஜியோ சிம் கார்டு மற்றும் ஸ்மார்ட்போன் இருந்தால், ரூ.895 திட்டத்திற்கு நீங்கள் தகுதி பெற மாட்டீர்கள்.

சமீபத்தில் ஜியோ அதன் அன்லிமிடெட் ஆபரின் (Reliance Jio Unlimited Offer) கிடைக்கும் தன்மையை நீடித்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்ப்போது இந்த ஆபர் மே 25 ஆம் தேதி வரை கிடைக்கும். இது ரூ.299 மற்றும் அதற்கு மேலான விலையில் உள்ள ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களை செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். மேலும் இந்த திட்டங்கள் டெய்லி 1.5ஜிபி டேட்டா அல்லது அதற்கு மேலான டேட்டாவை வழங்கும்படி இருக்க வேண்டும்.

தகுதியான திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா அணுகல் கிடைக்கிறது. இந்த சலுகை மே 25, 2025 அன்று காலாவதியாகிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் அணுகலின்கீழ, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் வழியாக ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய முடியும், மேலும் அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களையும் பார்க்க முடியும்.

ஜியோ நிறுவனம் இதே சலுகையின் கீழ் ஹோம் வைஃபை சலுகையையும் சேர்த்துள்ளது. இதன்கீழ் - தகுதியான பயனர்களுக்கு 50 நாட்கள் இலவச ஜியோஃபைபர் அல்லது ஜியோ ஏர்ஃபைபர் கனெக்ஷன் கிடைக்கும். 50 நாட்கள் இலவச சலுகை முடிந்ததும் பயனர்கள் ரூ.599 போஸ்ட்பெய்டு திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள்.

ஜியோவின் இந்த சலுகை, இந்நிறுவனம் பயனர்களை அதிக மதிப்புள்ள திட்டங்களுடன் சேர ஊக்குவிக்கவும், புதிய ஜியோஹாட்ஸ்டார் தளத்தை அவர்களை அறிமுகப்படுத்தவும் உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நினைவூட்டும் வண்ணம் ஜியோ ஹாட்ஸ்டார் என்பது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டையும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஒரு ஓடிடி தளம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio 11 Months Validity Plan Under Rs 900 Will Surprise All Jio Phone and Jio Bharat Phone users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X