ட்விட்டரில் கணக்கு தொடங்கிய Jesus Christ: உறுதி செய்த ப்ளூ டிக், குவியும் ஃபாலோவர்கள்! என்ன நடக்குது?

|

இந்த தகவல் படிப்பதற்கு மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகவலைதளங்களில் இதுபோன்ற ஆசாமிகள் உலா வருவது வழக்கம். இங்கு ப்ளூடிக் வழங்கப்பட்டிருக்கிறது எனவே யாரும் தவறாக சித்தரித்துவிடக் கூடாது என்பதால் இந்த தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. கணக்கின் பெயர் எப்படி மாற்றப்பட்டது, அதற்கு எப்படி ப்ளூடிக் வழங்கப்பட்டது என்பது குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

சரிபார்க்கப்பட்ட இயேசு கிறிஸ்து கணக்கு

சரிபார்க்கப்பட்ட இயேசு கிறிஸ்து கணக்கு

இயேசு கிறிஸ்து தற்போது ட்விட்டரில் சரிபார்க்கப்பட்டுள்ளார். ஆம், நீங்கள் தற்போது படித்தது சரிதான். இயேசு கிறிஸ்து என்ற பெயரில் உள்ள போலி பக்கம் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து குழப்பத்திற்கும் காரணம் ப்ளூடிக் சந்தா சேவையே என கூறப்படுகிறது. மஸ்க் ட்விட்டரை வாங்கிய உடன் ப்ளூடிக் சந்தா சேவைக்கு $8 கட்டணம் விதித்தார்.

2006 முதல் இயேசு கிறிஸ்து ட்விட்டர் கணக்கு

2006 முதல் இயேசு கிறிஸ்து ட்விட்டர் கணக்கு

சந்தா சேவையில் ட்வீட்டை திருத்தும் திறன் மற்றும் மதிப்புமிக்க ப்ளூடிக் சரிபார்ப்பு குறி போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து என்ற பெயரில் உள்ள போலி கணக்கு 2006 முதல் ட்விட்டரில் இருக்கிறது. இதன் பயோவில் "Carpenter, Healer and God" என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பயோ ஆனது இயேசு கிறிஸ்துவின் விக்கபீடியா பக்கத்திற்கான இணைப்பையும் கொண்டிருக்கிறது. இந்த கணக்கு 7 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்டுள்ளது.

யார் கணக்கு இது

யார் கணக்கு இது

இந்த கணக்குக்கு தற்போது ப்ளூடிக் அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிரது. பல பயனர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். "சாண்டா ட்விட்டரில் வருவதற்காக நான் இன்னும் காத்திருக்கிறேன். அவர் உண்மையானவர் என்று எனக்குத் தெரியும்" போன்ற பல்வேறு கருத்துகளை பதிவிடப்பட்டு வருகிறது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் iOS சாதனங்களுக்கு Twitter Blue கிடைக்கிறது. இயேசு கிறிஸ்துவின் போர்வையில் ஏதோ ஒரு பயனர் ஐபோனை பயன்படுத்துகிறார் என்பதை இது குறிக்கிறது.

ப்ளூ சேவை சந்தாக் கட்டணம்

ப்ளூ சேவை சந்தாக் கட்டணம்

விரைவில் மற்ற நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ப்ளூடிக் கட்டணம் ரூ.719 ஆக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான ட்விட்டர் இந்த கட்டண திட்டத்தை உடனடியாக அறிவித்து அதை செயல்படுத்தியும் வருகிறது. எனவே இந்த குழப்பம் ஏற்படலாம். படிப்படியாக இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தும் பட்சத்தில் இந்த அனைத்து குழப்பங்களும் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் இன் ட்விட்டர்

எலான் மஸ்க் இன் ட்விட்டர்

எலான் மஸ்க் ட்விட்டர் வாங்கியதில் இருந்து தினசரி குறைந்தபட்சம் ஒரு செய்தியாவது அதுகுறித்து வந்துவிடுகிறது. பொதுவாக ஒரு நிறுவனத்தை ஒருவர் கைப்பற்றுகிறார் என்றால் பொறுமையாக படிப்படியாக அதில் மாற்றம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு இருப்பவர் எலான் மஸ்க் எனவே அப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ட்விட்டரை வாங்கிய நாள் முதல் தினசரி ஒரு மாற்றங்களை அதில் செய்து வருகிறார் மஸ்க்.

பல முட்டாள்தனமான விஷயங்கள்

பல முட்டாள்தனமான விஷயங்கள்

எலான் மஸ்க் பதிவிட்ட ஒரு பதிவை பார்த்துவிட்டு விஷயத்துக்கு போகலாம். "வரவிருக்கும் மாதங்களில் ட்விட்டர் பல முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும். எங்கள் செயல்பாட்டின் மூலம் செய்யாததையும் மாற்றுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ நபர்களுக்கு மட்டுமே இந்த சேவை

அதிகாரப்பூர்வ நபர்களுக்கு மட்டுமே இந்த சேவை

எலான் மஸ்க் பதிவிட்ட ஒரு பதிவை பார்த்துவிட்டு விஷயத்துக்கு போகலாம். "வரவிருக்கும் மாதங்களில் ட்விட்டர் பல முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும். எங்கள் செயல்பாட்டின் மூலம் செய்யாததையும் மாற்றுவோம்" என குறிப்பிட்டுள்ளார். பல அதிகாரப்பூர்வ கணக்குக்கு இந்த லேபிள் வழங்கப்பட்டு வந்த நிலையில் பலருக்கு இந்த லேபிள் நீக்கப்பட்டும் வருகிறது.

பிரபலங்களில் முக்கியமானவர் யார்?

பிரபலங்களில் முக்கியமானவர் யார்?

அதாவது முன்னதாக பலருக்கு "சரிபார்க்கப்பட்ட கணக்குகள்" என அங்கீகாரம் வழங்கப்பட்டது. அது இனி வழங்கப்படாது. சரி, ப்ளூடிக் கட்டணம் செலுத்த தயார் என்றாலும் முன்னதாக சரிபார்க்கப்பட்ட கணக்குகள் என அங்கீகாரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் லேபிள் வாங்குவதற்குக் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் என்பதில் முக்கியத்துவம் கொடுத்து இந்த ப்ளூடிக்கை வழங்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jesus Christ Twitter Account in Now Verified: What Happens in Twitter?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X