இன்று 100 கிமீ உயரம் பறந்து விண்வெளிக்கு செல்லும் பெசோஸ்: பறப்பதற்கு முன்னாடி சொன்ன வார்த்தை இருக்கே., அடடா!

|

ஜெஃப் பெசோஸ் மற்று் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயதான வாலி ஃபங்க் மற்றும் 18 வயதான இளைஞரான ஆலிவர் டையமென் ஆகியோர் விண்ணுக்கு பறக்க இருக்கின்றனர். ரிச்சர்ட் பிரான்சன் தனது நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் மூலம் விண்ணுக்கு பறந்த ஒன்பது நாட்களில் ஜெஃப் பெசோஸ் விண்ணுக்கு பறக்க இருக்கிறார். இது போட்டியல்ல எனவும் குறிப்பிட்டார்.

விண்ணுக்கு பறக்கும் பெசோஸ்

விண்ணுக்கு பறக்கும் பெசோஸ்

பிரிட்டிஷ் வணிகர் ரிச்சர்ட் பிரான்சன் நியூ மெக்சிகோவில் இருந்து விண்ணுக்கு பறந்த சில நாட்களுக்கு பிறகு, பெசோஸ் விண்ணுக்கு பறக்க இருக்கிறார் எனவே தான் பதட்டமாக இல்லை என பெசோஸ் குறிப்பிட்டுள்ளார். ஜெஃப் பெசோஸ் மேற்கு டெக்சாஸில் உள்ள ஒரு பாலைவன தளத்தில் இருந்து விண்ணுக்கு பறக்க இருக்கிறார். தனது நிறுவனமான ப்ளூ ஆர்ஜினின் புதிய ஷெப்பர்ட் மூலம் பறக்க இருக்கிறார்.

பதட்டம் இல்லை ஆர்வம்தான் இருக்கிறது

பதட்டம் இல்லை ஆர்வம்தான் இருக்கிறது

இதுகுறித்து ஜெஃப் பெசோஸ் கூறிய கருத்துகளை பார்க்கலாம்., நான் பதட்டமாக இருக்கிறேனா என மக்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நான் உண்மையில் பதட்டமாக இல்லை, உற்சாகமாகதான் இருக்கிறேன். எனக்கு ஆர்வமாக இருக்கிறது. தாங்கள் என்ன கற்றுக் கொள்ளப்போகிறோம் என்பதை அறிய விரும்புகிறேன் என குறிப்பிட்டார்.

வாகனம் தயாராக உள்ளது

வாகனம் தயாராக உள்ளது

நாங்கள் பயிற்சியளத்து வருகிறோம், எங்கள் வாகனம் தயாராக உள்ளது. குழுவினர் தயாராக உள்ளோம். இந்த ஆச்சரியமாக உள்ளது என்பது குறித்து நாங்கள் உணர்கிறோம் எனவும் கூறினார். புதிய ஷெப்பர்ட் வாகனமானது 60 அடி உயரம் மற்றும் முழு தன்னாட்சி மறுபயன்பாட்டுக்குரிய ராக்கெட் மற்றும் கேப்ஸ்யூல் காம்போ ஆகும்.

நிதானமாக ஜன்னலுக்கு வெளியே பாருங்கள்

நிதானமாக ஜன்னலுக்கு வெளியே பாருங்கள்

சற்று உட்கார்ந்து நிதானமாக ஜன்னலுக்கு வெளியே பாருங்கள், உங்கள் பார்வையை உள்வாங்கிக் கொள்ளுங்கள் என பெசோஸ் கூறினார். விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் ஜன்னலைவிட ப்ளூ ஆர்ஜின் வாகனத்தின் ஜன்னல் மிகப் பெரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரிச்சர்ட் பிரான்சன் பயணத்தின் சில நாட்களுக்கு பிறகு பெசோஸ் பயணிப்பதால் இது போட்டி என்று கருத வேண்டாம் எனவும் பெசோஸ் குறிப்பிட்டார். பட்டியலில் நான் 570 ஆவது அல்லது ஏதோவென்றாக இருக்கப் போகிறேன் என நினைக்கிறேன். எனவே இது போட்டியல்ல. இது விண்வெளிக்கு ஒரு சாலையை உருவாக்குவது (விண்வெளி பயண சுற்றுலா). இதன்மூலம் எதிர்கால தலைமுறையினர் தாங்கள் நம்ப முடியாத விஷயங்களை செய்ய முடியும் என குறிப்பிட்டார்.

பயிற்சி திட்டத்தில் பாதுகாப்பு விளக்கங்கள்

பயிற்சி திட்டத்தில் பாதுகாப்பு விளக்கங்கள்

பெசோஸ் மற்றும் அவரது குழுவினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை 14 மணிநேர நிகழ்ச்சியை தொடங்கினர். ப்ளூ ஆர்ஜின் கூற்றுப்படி, அதன் பயிற்சி திட்டத்தில் பாதுகாப்பு விளக்கங்கள், விண்வெளி பயணத்தின் உருவகப்படுத்துதல், ராக்கெட் பற்றிய ஆய்வு மற்றும் அதன் செயல்பாடுகள் பூமியின் ஈர்ப்பு விசை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. விர்ஜின் கேலக்டிக் விமானத்தை போலவே புதிய ஷெப்பர்டும் பூமியை சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நுழையாது, ஆனால் கேப்ஸ்யூல் பாராசூட் மூலமாக திரும்புவதற்கு முன்பு 62 மைல் (100 கிலோ மீட்டர்) உயரத்தில் குழுவினரை அழைத்து செல்லும். ஆனால் விர்ஜின் கேலக்டிக் விமானம் பூமியில் இருந்து 53 கிமீ தூரத்தையே எட்டியது.

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள்

கர்மன் கோட்டிற்கு மேலே நான்கு நிமிடங்கள் செலவழிக்க இருக்கின்றனர். கர்மன் கோடு என்பது பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை குறிக்கிறது. ஐந்து வயது முதல் விண்வெளிக்கு பயணிக்க கனவு கண்டேன். விண்வெளியில் இருந்து பூமியை பார்க்க வேறுவிதமான உருவத்தை கொடுக்கிறது. நான் இதில் பறக்க விரும்புகிறேன். காரணம் இது வாழ்நாள் முழுவதும் செய்ய விரும்பிய ஒரு விஷயம் ஆகும் என ஜெஃப் பெசோஸ் குறிப்பிட்டார்.

விண்வெளி வீராங்கனை பயிற்சியை முடித்தவர்

விண்வெளி வீராங்கனை பயிற்சியை முடித்தவர்

இவர்களுடன் பயணிக்கும் 82 வயதான பெண் பைலட் விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். இவர் 1961 முதல் 1963 ஆம் ஆண்டு வரை நாசாவில் விண்வெளி வீராங்கனை பயிற்சியை முடித்தவர். இவரது பாலினம் காரணமாக விண்வெளி வீரர் ஆக மறுத்துவிட்டார். அமெரிக்க ராணுவத் தளத்திலும், தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்திற்கும் ஏர் பாதுகாப்பு இன்ஸ்பெக்டராக இருந்தார். முதல் பெண் பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையையும் பெற்றார். இவர்களுடன் தற்போது 18 வயதான ஆலிவர் இணைந்துள்ளார்.

விமானத்தில் பறக்க ஏணையோர் ஆர்வம்

விமானத்தில் பறக்க ஏணையோர் ஆர்வம்

ப்ளு ஆர்ஜின் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் நகரில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

நிறுவனத்தின் அடுத்த விமானம் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் தொடக்கத்தில் பயணிக்கும் என ப்ளூ ஆர்ஜின் தலைமை நிர்வாக அதிகாரி பாப் ஸ்மித் கூறினார். அதேபோல் எதிர்காலத்தில் பறக்கும் விமானத்தில் பறக்க ஏணையோர் ஆர்வத்துடன் பணம் செலுத்த தயாராக இருப்பதாக ஸ்மித் கூறினார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jeff Bezos Travelling to Space Trip Today: What He Said Before Fly

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X