அம்பானியை கூட மன்னிச்சுடலாம் ஆனால் இந்த சுல்தானை?!

அவ்வளவு ஏன்? சில நேரம் நாம் கூட எந்த யோசனையும் இல்லாமல் செலவு செய்வோம்.

|

பணத்தை வைத்துக்கொண்டு மகிழ்ச்சியை வாங்க முடியாது என்று சிலர் சொல்வார்கள், அது உண்மையல்ல என்று மறுக்க முடியாது தான். அதேபோல எக்கச்சக்கமான பணத்தை வைத்து இருப்பவர்களால், தாங்கள் நினைக்கும் எதை (பொருட்கள், வசதிகள்) வேண்டுமானாலும் வாங்க முடியும் என்கிற ஒரு விசித்திரமான இன்பத்தை கைவசம் வைத்துக்கொண்டே இருப்பார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

jef bejos

அவ்வளவு ஏன்? சில நேரம் நாம் கூட எந்த யோசனையும் இல்லாமல் செலவு செய்வோம். அது நமது குடும்பத்தின் சந்தோஷத்திற்காக இருக்கலாம் அல்லது தனிப்பட்ட திருப்திக்காக இருக்கலாம். அது எதுவாகினும் அது நமக்கு இன்பம் தரும் என்பது மட்டும் நிச்சயம்.

பில்லியனர்கள்

பில்லியனர்கள்

ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கும். நம்மில் பெரும்பாலோனார்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை அவ்வளவு சிக்கீரமாக வெளியே எடுத்துவிட மாட்டோம். நூறுமுறை அல்ல, ஒருமுறையாவது யோசிக்காமல் செலவு செய்ய மாட்டோம். ஆனால் எல்லோருக்கும் அபப்டியானதொரு சூழ்நிலை அமைவதில்லை. மாபெரும் வெற்றிகளை சந்தித்த சில பில்லியனர்கள் அப்படியான சூழ்நிலைக்குள் சிக்குவதே கிடையாது.

வங்கிக் கணக்குகளில் இருக்கும் எக்கச்சக்கமான பணத்தை எந்தவொரு தேவையற்ற அல்லது முட்டாள்தனமான வழிகளிலும் அவர்களால் செலவழிக்க முடிகிறது. அப்படியாக உலகின் சில பில்லியனர்கள் தேவையில்லாமல் செய்த மாபெரும் செலவுகளை தான் இங்கே தொகுத்துளோம். இந்த பட்டியலில் அம்பானியின், எலான் மஸ்க்கும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

ஜெஃப் பெஸோஸ்

ஜெஃப் பெஸோஸ்

சமீபத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஜெஃப் பெஸோஸ் தனது சீட்டல் அலுவலகத்திற்கு குண்டு துளைக்காத பேனல்களை வாங்குவதற்காக 1.25 கோடி ரூபாய் செலவிட்டார். ஒன்றரை அங்குலம் கொண்ட அந்த பேனல்களால் இராணுவ தாக்குதல்களை கூட தாக்குப்பிடிக்க முடியும் என்பதால் அது தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெசோஸின் பாதுகாப்பிற்காக அமேசான் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 11 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கிறது என்று கூறப்படுகிறது.


இது எப்படி தேவையில்லாத செலவாகும், இது உயிர் சம்பந்தப்பட்ட செலவாகும், மிகவும் நியாமான செலவு தான் என்று கேட்க வேண்டாம். நாம் இன்னும் கட்டுரைக்குள்ளேயே செல்லவில்லை. முதலில் நியாமான செலவை பற்றி கூறினால் தான் ஏனைய செலவீனங்கள் அநியாயங்கள் புரியும்.

1. பில் கேட்ஸ்

1. பில் கேட்ஸ்

பில் கேட்ஸ், லியோனார்டோ டா வின்சியின் ஒரு பெரிய ஆர்வலர் ஆவார். அதனால் தான் என்னவோ அவர் ஓல்ட் மேன் பத்திரிகை மீது சுமார் 30 மில்லியன் டாலர்கள் செலவு செய்தாரோ என்னவோ. 1994 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனர் கேட்ஸ், கோடெக்ஸ் லெய்செஸ்டரின் உரிமையைப் பெற 30.8 மில்லியன் டாலர்களை செலவிட்டார். அது 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டா வின்சியினால் தொகுக்கப்பட்ட 72-பக்கங்கள் கொண்ட புத்தகம் ஆகும். அதில் அவரின் கைப்பட வரையப்பட்ட படங்கள், ஓவியங்கள் மற்றும் எதிர்கால கண்டுபிடிப்பிற்காக முதன்மை வரைபடங்கள், எழுத்துக்கள் மற்றும் கருத்துக்கள் அடங்கியுள்ளது.

2. முகேஷ் அம்பானி

2. முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் தொழில்துறை லெஜெண்ட் ஆன முகேஷ் அம்பானி, நம்மால் எண்ண முடியாத எ;அளவிலான பணத்தை கொண்டுள்ளார். அவரின் நிகர மதிப்பு சுமார் 5,530 கோடி டாலர்கள் ஆகும். அந்த அளவிலான பணம் கால் முளைத்து எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? - அவரின் வீடு போன்று இருக்கும். ஏனெனில் அவர் கட்டியுள்ள வீட்டின் மதிப்பு 1 பில்லியன் டாலர்கள் ஆகும். சுமார் 400,000 சதுர அடி நீளும் அந்த வீட்டில் மொத்தம் 27 மாடிகள் உள்ளன. அந்த வீட்டில் ஹெலிபாட், ஆறு நிலை நிலத்தடி பார்க்கிங். பால்ரூம், ஒரு 50-இருக்கை தியேட்டர் மற்றும் லாபியில் மட்டுமே ஒன்பது லிஃப்டுகள் உள்ளன. இந்த வீட்டை பராமரிக்க மட்டுமே 600 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளாராம்.

3. ஜோக்கலின் வைன்டன்ஸ்டெய்ன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

3. ஜோக்கலின் வைன்டன்ஸ்டெய்ன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

சுவிஸ் நாட்டை சேர்ந்த ஜோக்கலினுக்கு ஜீவனாம்சமாக 2.5 பில்லியன் டாலர்கள் கிடைத்தது. அதன் பின்னர் அவரின் வாழ்க்கையே மாறியது. தனது 70களின் பிற்பகுதியில் இருக்கும் வால்டன்ஸ்டெய்ன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் மீது ஆகப்பெரும் பேரார்வத்தை கொண்டுள்ளார். கூடவே மில்லியன் கணக்கான பணத்தையும் செலவழித்து வருகிறார். ஒரு மிரர் அறிக்கையின்படி, வைலென்ஸ்டெய்ன் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே சுமார் 27 கோடியை செலவிட்டுள்ளார்.

4. எலான் மஸ்க்

4. எலான் மஸ்க்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் ஆன எலான் மஸ்க் அவரது விசித்திரத்தன்மைக்கு நன்கு அறியப்பட்டவர். கடந்த 2013 இல், எலான் மஸ்க், பிரபல ஜேம்ஸ் பாண்ட் கார் ஆன லோட்டஸ் எஸ்பிரிட் நீர்மூழ்கி காரை வாங்கினார். குப்பை கிடங்கில் (சேமிப்பு கொட்டகையில்) இருந்த அந்த காரின் விலை என்ன தெரியுமா - கிட்டத்தட்ட 1 மில்லியன் டாலர்கள்!

5. ஹஸனல் பொல்கியா

5. ஹஸனல் பொல்கியா

புருனேயின் புகழ் பெற்ற சுல்தானாக அறியப்பட்ட போல்கியா, உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த "ஹேர்கட்டை" செய்து உள்ளார். லண்டனுக்கு பறந்து சென்ற இவர் அங்கே முடிவெட்டிக்கொண்டு அதற்கு 19,000 அமெரிக்க டாலர்களை செலுத்தினார் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jeff Bezos Spent Rs 1.25 Cr On Bulletproof Panels But These 5 Billionaires Bought Weirder Things: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X