அமேசான் அதிபர் கூறும் வெற்றிக்கான 5 மந்திரங்கள்!

|

இந்த வாரம் லாஸ் வேகாஸில் நடைபெற்ற அமேசானின் ரீ:மார்ஸ் (Re:Mars) மாநாட்டில், அந்நிறுவனத்தின் ஜெஃப் பெஸோஸ் விண்வெளி, எதிர்காலம் மற்றும் எப்படி அமேசான் இவற்றில் செயல்படுகிறது என்பது பற்றி உரையாற்றினார். மேலும் தொழில்முனைவோர்களுக்கு சில வணிக ஆலோசனைகளை அம்மேடையிலேயே வழங்கினார்.

உலகின் மிகப்பெரிய பணக்கார மனிதரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய 5 சிறு விசயங்கள் இதோ..

1) எல்லாமே

1) எல்லாமே "வியாபாரம்" இல்லை

எல்லாவற்றையும் வெறுமனே பணத்துக்காக மட்டுமே என செய்யவேண்டும் என தொழில்முனைவோர்களுக்கு அறிவுறுத்துகிறார் பீசோஸ். "போரார்வம் கொண்டவர்களுக்கு எதிராக நீங்கள் போட்டியிடுவீர்கள்," என்று அவர் அக்கூட்டத்தில் கூறினார். "நீங்கள் ஒரு கொள்கையுடன் பணியாற்றுபவராக இருக்கவேண்டும். கூலிப்படையாக அல்ல. ஆனால் முரண்பாடாக கொள்கையுடையவர்களே அதிக பணம் சம்பாதிப்பார்கள்" என்கிறார்.

2) ரிஸ்க் எடுங்க

2) ரிஸ்க் எடுங்க

"உங்களிடம் ஆபத்தே இல்லாத வியாபார யோசனை இருந்தால், அது ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக்கலாம். சரியாக வராது என்று தோன்றும் ஒரு யோசனை உங்களிடம் இருந்தால், அது பல வழிகளில் ஒரு பரிசோதனையாக இருக்கும். எல்லா நேரத்திலும் நாம் ரிஸ்க் எடுக்கிறோம் மற்றும் தோல்வியை பற்றி பேசுகிறோம்." உதாரணமாக அமேசான் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அந்நிறுவனத்தை ஆரம்பித்தபோது, அவர்கள் வெறும் 100பேரை வைத்துக்கொண்டு ​​ புத்தகங்களை விற்பனை செய்துகொண்டிருந்தனர். இன்று அமேசான் பீஸோசை உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக்கியுள்ளது.

3) தோல்வி இறுதியானது இல்லை

3) தோல்வி இறுதியானது இல்லை

ஆனால் நாம் எடுக்கும் ரிஸ்க் நமக்கு கைகொடுக்காத போது, அந்த தோல்வி தான் உலகில் இறுதியானது இல்லை என்று தெரிந்து கொள்ள கொண்டும் என்று விரும்புகிறார் பீசோஸ். "வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு நமக்கு பெரிய தோல்விகளைத் தேவைப்படுகிறது. தோல்விகள் இல்லையெனில் நாம் போதுமான அளவிற்கு நகரவில்லை என பொருள். நீங்கள் உண்மையில் கடினமாக வாழ்வில் முன்னேற நினைத்தால் நிச்சயம் தோல்வியடைவீர்கள். ஆனால் அது பரவாயில்லை."

நீங்கள் பேஸ்பாலில் எவ்வளவுதான் பந்தை வேகமாக அடித்தாலும், அதிகபட்சமாக நான்கு ரன்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் பிஷினசில் கடினமாக உழைத்தால், 100 ரன்கள் கூட கிடைக்கும். எனவே நீங்கள் கடினமான உழைக்க வேண்டும். அதே சமயம் நிறைய தோல்வியடையும் போது அதை ஆதரிக்கும் பண்பாடும் வேண்டும். இதை எப்போது நிறுத்த வேண்டும் என்பது எப்போதும் உங்களுக்கு தெரியும். கடைசி சாம்பியன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் போது நீங்கள் கடினமாக உழைப்பதை நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் அந்த கடைசி சாம்பியன் நீங்களாக இருக்கவேண்டும்.

4) எல்லாம் எப்போதும் சரி என எண்ணக்கூடாது

4) எல்லாம் எப்போதும் சரி என எண்ணக்கூடாது

எனக்கு எல்லாம் தெரியும், புதிதாக கற்றுக்கொள்ள எதுவுமே இல்லை என்ற தற்பெருமை எப்போதும் இருக்கக்கூடாது. அதிகமாக சரியாக இருப்பவர்கள், அதிகமாக காதுகொடுத்து கேட்பவர்கள், தங்களது நிலைப்பாட்டை அதிகமாக மாற்றுவார்கள். ஆனால் அவர்கள் புதிய தரவுகள் ஏதும் இன்றி, விசயங்களை மீண்டும் ஆராய்ந்து நிலைப்பாட்டை மாற்றுவார்கள். நீங்கள் அடிக்கடி உங்கள் நிலைப்பாட்டை மாற்றவில்லை எனில், அதிகமாக தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம். அதிகமாக சரியாக இருப்பவர்கள் நிறைய பேர் தங்கள் அடிப்படை சார்புகளை நிரூபிக்க விரும்புவதில்லை.

5) பூமியின் எதிர்காலம் பிரகாசமானது

5) பூமியின் எதிர்காலம் பிரகாசமானது

பீஸோஸ் பேசிய மற்றொரு விஷயம், வருங்காலத்தில் குடியிருப்பு பகுதிகள் வெறும் சமூகங்களாக இல்லாமல் முழு கிரகமாக இருக்கும் என்று நம்புகிறார். "நாம் விண்வெளிக்கு செல்வதற்கான காரணம் பூமியை காப்பாற்றவே" என்று அவர் கூறினார். "நாம் சந்திரனுக்கு தொழில்நிறுவனங்களை மாற்றிவிட்டு பூமியில் குடியிருப்புபகுதியாக வைத்திருக்க வேண்டும். அதாவது பூமியில் குடியிருப்புகள் மட்டும் இலகுரக தொழில்நிறுவனங்கள் மட்டுமே இருக்கவேண்டும்" என்கிறார்.

உண்மையில் மக்கள் நகர்த்த போதுமான நேரம் மற்றும் பணம் கொடுக்கப்பட்டால், அது தொலைதூரமாக இருந்தாலும் வாய்ப்புள்ளது. நமது கிரகத்தின் சூழலை பாதுகாக்க மிகவும் திறமையான வழியாக இது இருக்கும் அதே நேரத்தில் தொழில் முன்னேற்றமும் தொடரும். ஆனால் தொழில்துறையில் முன்னேற்றம் அவசியம் இல்லை என்றும் கூறவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jeff Bezos Reveals The Secret Of His Success: Five Mantras We Can All Learn From Him: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X