Home
News

வேலையை ராஜினாமா செய்தால் 4 லட்சம் தர்றோம்.. Amazon ஊழியர்களுக்கு கிடைத்த அடேங்கப்பா டீல்!

இது எல்லாவற்றை விடவும் மேலாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் கூட 9,000 அமேசான் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், ஒரு காலத்தில் ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) தலைமையின் கீழ் இருக்கும் போது, இதே அமேசான் நிறுவனமானது வேலையிலிருந்து வெளியேறும் (Resign) ஊழியர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வழங்கியது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மணிகண்ட்ரோல் (Moneycontrol) அறிக்கையொன்றின்படி, அமேசானின் இணை நிறுவனர் (Co-founder) ஆன ஜெஃப் பெசோஸ் , கடந்த 2014 இல் ஒரு திட்டத்தை தொடங்கினார். அதன் கீழ் அமேசானில் இருந்து வெளியேற விரும்புபவர்களுக்கு 5,000 அமெரிக்க டாலர்கள் (அதாவது இந்திய ருபாய் மதிப்பின்படி சுமார் ரூ. 4.1 லட்சம்) வரை பணம் கிடைக்கும் என்கிற விருப்பம் அளிக்கப்பட்டது.

ராஜினாமா செய்தால் 4 லட்சம் தர்றோம்.. Amazon டீல்!

இதற்கு பின்னால் உள்ள காரணம் என்னவென்றால், உண்மையில் எத்தனை ஊழியர்கள் அமேசான் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்ய விரும்புகிறார்கள் மற்றும் எத்தனை பேர் கூடுதல் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேற விரும்புகிறார்கள் என்பதை ஜெஃப் பெசோஸ் சரிபார்க்க விரும்பினார்.

பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், ஜெஃப் பெசோஸ், "வருடத்திற்கு ஒருமுறை, எங்களுடைய அசோசியேட் (Associate) வெளியேறுவதற்கு நாங்கள் பணம் தருகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். அதே கடிதத்தில், "இந்த சலுகை வழங்கப்பட்ட முதல் ஆண்டு, கொடுக்கப்படும் தொகை $2,000 ஆகும். பிறகு அது $5,000-ஐ எட்டும் வரை ஆண்டுக்கு ஆயிரம் டாலர்கள் அதிகரிக்கும்."

ராஜினாமா செய்தால் 4 லட்சம் தர்றோம்.. Amazon டீல்!

"இந்த சலுகையின் தலைப்பு 'தயவுசெய்து இந்த சலுகையை எடுத்துக்கொள்ளாதீர்கள்' என்பதாகும். அவர்கள் சலுகையை ஏற்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்; அவர்கள் தொடர்ந்து இங்கே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீண்ட காலமாக, ஒரு ஊழியர் அவர்கள் இருக்க விரும்பாத இடத்தில் இருப்பது பணியாளருக்கோ நிறுவனத்திற்கோ ஆரோக்கியமானதல்ல," என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெஃப் பெசோஸின் இந்த சலுகைக்கு நேர்மாறாக, சமீபத்தில் ஒரு அமேசான் ஊழியர், இடமாற்றத்தை (Transfer) தேர்வு செய்து தனது வேலையை தக்க வைத்து கொள்வதற்கு பதிலாக, தனது வேலையை துறந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. நியூயார்க்கில் (New York) வேலை செய்த இவரை சியாட்டிலுலில் (Seattle) இருந்து பணிபுரியுமாறு கேட்டு கொள்ளப்பட்டதாம்.

ராஜினாமா செய்தால் 4 லட்சம் தர்றோம்.. Amazon டீல்!

இருப்பினும், அவரும் அவரது மனைவியும் நியூயார்க்கில் தங்களது "கனவுச் சொத்தை" (Dream Property) ஏற்கனவே வாங்கிவிட்டனர். ஆகையால் அமேசான் வேலையை தக்கவைத்துக்கொள்ள வேறு இடத்திற்கு நகரத்தை அவர்கள் விரும்பவில்லை. முதலில் அவருடைய வேலை "எங்கு வேண்டுமானாலும் இருந்தபடி வேலை செய்யும்படியே வடிவமைக்கப்பட்டு (Remote Role) இருந்ததாம்.

பின்னர் அமேசான் நிறுவனத்திடம் தனது நிலைப்பாட்டை விளக்க முயற்சித்தும், "இடமாற்றம் என்றால் என்ன?" என்கிற கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத காரணத்தினாலும் இறுதியில் அவர் தனது வேலையை விட்டுவிட்டாராம். தற்போது அவர் மற்றொரு முன்னாள் அமேசான் ஊழியருடன் ஒரு ஸ்டார்ட்அப்பில் (Startup) வேலை செய்து வருகிறாராம்.

மேலும் அவர் தனது புதிய ஸ்டார்ட் அப் வேலையானது, தனது முந்தைய அமேசான் வேலையின் அதே அடிப்படை சம்பளத்தை (Base salary) வழங்குகிறது, ஆனால் அவை அமேசானின் ஸ்டாக் விருப்பங்கள் உடன் (Amazon stock Options) பொருந்தவில்லை என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்த அமேசான் செய்தித் தொடர்பாளர் பிராட் கிளாசர் (Amazon spokesperson Brad Glasser), "குறிப்பிட்ட பணியாளர் சொன்ன கதையை எங்களால் சரிபார்க்க முடியவில்லை"அமேசான் போன்ற ஒரு பெரிய நிறுவனத்தை ஒற்றைக் கதையால் வகைப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jeff Bezos Offer 4 Lakhs To Amazon Employees To Leave Jobs Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X