நல்ல மனசு அது இதுதான்.! கொரோனாவால வேலை போச்சா.! நாங்க வேலை தாரோம்.! அமேசான் அசத்தல்..!

|

உலகிலேயே இன்று பெரும் அச்சுறுத்தலில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் வேலையை காட்டி வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அமேசான் நிறுவனர்

அமேசான் நிறுவனர்

இந்நிலையில் கொரோனா வைரஸால் வேலை இழந்தவர்களுக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

 கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஆன்லைன் ஷாப்பிங் என்றாலே அனைவருக்கும் முதல் விருப்பம் அமேசான் தான். உலகின் ஆன்லைன் ஷாப்பிங் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப் பெரோஸ் அவர்கள், கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்கு தங்கள் நிறுவனத்தின் பங்களிப்பு குறித்தும் தெரிவித்துள்ளார்.

இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!

பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது

பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது

அவர் தெரிவித்தது என்வென்றால், உலகப் பொருளாதாரம் இந்த கொரோனா நோய் தொற்றால் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது,இதனால் உலகின் எல்லா தொழல்துறைகளும் முடங்கிக் கிடக்கின்றன. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால் உற்பத்தி அளவு குறைவாகவே உள்ளது.

நிறுவனங்களைத் தான் நம்பி இருக்கின்றனர்

குறிப்பாக நோய்தொற்று காரணமாக மக்கள் வெளியில் வருவதற்கு பயந்து வீட்டுக்குள் இருக்கின்றனர், அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு மக்கள் எங்களை போன்ற ஆன்லைன் நிறுவனங்களைத் தான் நம்பி இருக்கின்றனர். எங்களுக்கும் அந்த பொறுப்பும், பயமும் இருக்கிறது.

போக்குவரத்து

ஆனால் எந்த ஒரு பொருளும் அதே நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அதே நாட்டில் விற்கப்படுவதில்லை, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு அங்கிருந்து மற்ற நாhடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இப்போது பெரும்பாலான நாடுகளில் போக்குவரத்து அதிகமாக முடக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

உலகம் முழுவதும் பலருக்கு வேலைவாய்ப்பு

இந்த இக்காட்டான சூழலில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய எங்கள் ஊழியர்கள் தவறியதில்லை,எங்கள்நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற நிறைய ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். மேலும் பெரும்பாலான துறைகள் முடங்கியுள்ளதால் உலகம் முழுவதும் பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போயுள்ளது.

Jio-வின் புதிய Wrok from Home திட்டத்தின் கீழ் கிடைக்கும் 120 ஜிபி டேட்டா நன்மை!Jio-வின் புதிய Wrok from Home திட்டத்தின் கீழ் கிடைக்கும் 120 ஜிபி டேட்டா நன்மை!

எங்களுடன் இணைந்து பணியாற்றலாம்

எனவே மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர சில நாட்கள் ஆகலாம்,அதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்கள்தாராளமாக எங்களுடன் இணைந்து பணியாற்றலாம், நாங்கள் நல்ல சம்பளம் தர தயாராக இருக்கிறோம்.

நிறுவனர் ஜெப் பெசோஸ்

குறிப்பாக நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை தற்காலிகமாக எங்களுடன் சேர்ந்து உதவலாம் என அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Jeff Bezos invites you to apply jobs in amazon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X