குறைந்த விலையில் வெண்டிலேட்டர் - மின்சாரம் இல்லாமல் கூட இயக்கலாம்!

|

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) ஹைதராபாத்-இன்குபேடெட் ஸ்டார்ட்அப் ஏரோபயோசிஸ் இன்னோவேஷன் ஜீவன் லைட் வேண்டப்படும் குறைந்த விலையிலான, சிறிய, அவசரக்கால பயன்பாட்டு வென்டிலேட்டரை உருவாக்கியுள்ளது. அதே போல் இது இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மூலம் இயக்கப்பட்டிருக்கிறது மற்றும் தொலைப்பேசி பயன்பாட்டின் மூலமும் இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீவன் லைட் குறைவான விலை வென்டிலேட்டர்

ஜீவன் லைட் குறைவான விலை வென்டிலேட்டர்

இந்த வென்டிலேட்டரின் தேவையான செயல்பாட்டுடன் கூடிய மினிமல் வியப்பில் ப்ரொடக்ட் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் இல்லாமல் கூட இந்த ஜீவன் லைட் வெண்டிலேட்டர் தடையில்லாமல் செயல்படும்படி வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏரோபயோசிஸ் இன்னோவேஷன் ஜீவன் லைட்டை ரூ.1 லட்சம் விலையில் கொடுக்கிறது. இது சந்தையில் இருக்கும் தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது கணிசமாகக் குறைவான விலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் பயன்பாட்டின் மூலம் இயங்கும் வெண்டிலேட்டர்

மொபைல் பயன்பாட்டின் மூலம் இயங்கும் வெண்டிலேட்டர்

வென்டிலேட்டரின் செயல்பாட்டு அம்சங்களைத் தடையின்றி கட்டுப்படுத்தவும், செலவைக் குறைக்கவும், சாதனத்திற்குத் தொலைநிலை மின்னணு அணுகலை எளிதாக்கவும், ஏரோபயோசிஸ் பிரத்தியேகமா ஒரு மொபைல் பயன்பாட்டை ஜீவன் லைட் சாதனத்திற்காக உருவாக்கியுள்ளது. ஏரோபயோசிஸ் இன்னோவேஷன் ஒரு தொழில்துறை கூட்டாளருடனான ஒத்துழைப்பு மூலம் ஒரு நாளைக்குக் குறைந்தது 50 முதல் 70 யூனிட்டுகளை உற்பத்தி செய்யா முடியும் என்று கூறியுள்ளது.

கோவிட்-19 தொற்று இருப்பவர்களுக்கு பெரிதும் உதவும்

கோவிட்-19 தொற்று இருப்பவர்களுக்கு பெரிதும் உதவும்

வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு, குறிப்பாக இதய நோய்கள் அல்லது டைப்-2 நீரிழிவு போன்ற தீவிர ‘நிலைமைகள்' உள்ளவர்களுக்கு, கோவிட்-19 தொற்று இருந்தால் வென்டிலேட்டர் உதவி வழங்கப்படாவிட்டால் அது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். COVID-19 ஆல் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் வயதான நோயாளிகளுக்கு அவசரக்கால வாழ்க்கை உதவிக்கு வென்டிலேட்டர்கள் மிகவும் அவசியம்.

மின்சாரம் இல்லாமல் கூட தடையின்றி செயல்படும்

மின்சாரம் இல்லாமல் கூட தடையின்றி செயல்படும்

IoT- மூலம் இயங்கும் தனிப்பட்ட கண்காணிப்பு பாதுகாப்பை வழங்குவதன் மூலம் ஏரோபயோசிஸ் ஒரு படி மேலே சென்றுள்ளது. இந்த சாதனம் குழந்தைகள் முதல் வயதானோர் வரை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தப்படலாம் மற்றும் ரிச்சார்ஜபிள் லித்தியம் அயன் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளதால், மின்சாரம் இல்லாமல் கூட ஐந்து மணி நேரம் தடையின்றி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Jeevan Lite The New Low Cost Ventilator With Phone App Invented By IIT Hyderabd : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X