Home
News

JBL செஞ்சுட்டான்யா.. டிஸ்பிளேவுடன் 3 இயர்பட்ஸ்.. 70 மணிநேர பிளேடைம் ஹெட்போன்ஸ்.. விலை என்ன?

ஜேபிஎல் (JBL) நிறுவனம் அதன் ஆடியோ சாதனங்களின் பட்டியலை ஒரே நாளில் மடமடவென அதிகரித்துள்ளது. JBL நிறுவனம் இப்போது 10 வயர்லெஸ் இயர்பட்ஸ் (Wireless Earbuds) மற்றும் ஹெட்போன்ஸ் (Headphones) சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

என்ன தான் நிறுவனம் இந்த ஆண்டு CES 2024 நிகழ்வில் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய தவறவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. காரணம், ஜேபிஎல் (JBL) நிறுவனம் இப்போது 3 புதிய இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் லைவ் பட்ஸ் 3 (Live Buds 3), லைவ் பீம் 3 (Beam 3), மற்றும் ஃபிளெக்ஸ் 3 (Flex 3) போன்ற மாடல்கள் இடம்பெறுகின்றன.

JBL செஞ்சுட்டான்யா.. டிஸ்பிளேவுடன் 3 இயர்பட்ஸ்.. 70 மணிநேர பிளேடைம்..

இதன் சிறப்பு என்னவென்றால், இவை மூன்றும் LED டிஸ்பிளேவை ஆதரிக்கும் சார்ஜிங் கேஸ் உடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS) சாதனங்களை LED டிஸ்பிளேவுடன் வழங்கும் முதல் நிறுவனமாக ஜேபிஎல் உருவாக்கியுள்ளது. இத்துடன், நிறுவனம் 6 ஓவர்-இயர் ஹெட்போன்ஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இதில் Live 770NC, Tune 770NC, Tune 720BT, Live 670NC, Tune 670NC, மற்றும் Tune 520BT போன்ற மாடல்கள் இடம்பெறுகின்றன. இத்துடன் கூடுதலாக, ஜேபிஎல் நிறுவனம் அதன் முதல் ஓபன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதை நிறுவனம் சவுண்ட்கியர் சென்ஸ் (Soundgear Sense) என்ற பெயருடன் வெளியிடுகிறது.

இதுயெல்லாம் ஒருபுறம் இருக்க, JBL வெளியிட்ட 1.45" இன்ச் LED ஸ்க்ரீன் உடன் வெளிவந்துள்ள இயர்பட்ஸ் மாடல்கள் கவனம் ஈர்த்துள்ளது. என்ன தான் நிறுவனம் 3 மாடல்களை அறிமுகம் செய்திருந்தாலும், இதன் விலையில் சிறிய மாற்றங்களை நம்மால் பார்க்க முடிகிறது. லைவ் பட்ஸ் 3 (Live Buds 3): சாதனம் டாட் ஸ்டைல் டிசைன் உடன் 1.45" இன்ச் LED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

JBL செஞ்சுட்டான்யா.. டிஸ்பிளேவுடன் 3 இயர்பட்ஸ்.. 70 மணிநேர பிளேடைம்..

இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ. 16,622 ஆகும். இது 10 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. இது ANC, EQ, IP55 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்புடன் வருகிறது. இதன் அடுத்த மாடலான லைவ் பீம் 3 (Live Beam 3): மாடல் ஏர்பாட்ஸ் போன்ற தோற்றத்தில் LED ஸ்க்ரீனுடன் வருகிறது. இதன் விலையையும் 200 டாலர் மதிப்பை நெருங்குகிறது. இது 12 மணிநேரம் நீடிக்கிறது.

லைவ் ஃபிளெக்ஸ் 3 (Live Flex 3): சாதனம் ஓபன் டைப் ஏர்பாட்ஸ் போன்ற தோற்றத்துடன் 199 டாலர் மதிப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் 12 மணிநேர பிளேபேக் நேரத்தை வழங்குகிறது. அடுத்தபடியாக, நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஹெட்போன்ஸ் மாடல்கள் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.

- லைவ் 770NC (Live 770NC Over-ear): Personi-Fi 2.0 அம்சம், ஸ்பேஷியல் ஆடியோ, அடாப்டிவ் ANC உடன் வருகிறது. இதன் விலை $200 ஆகும்.
- லைவ் 670NC (Live 670NC On-Ear): இதுவொரு ஆன்-இயர் ஸ்டைல் ஹெட்போன் மாடலாகும். விலை $130 மட்டுமே.

- ட்யூன் 770NC (Tune 770NC Over-Ear): ஒரு சார்ஜ்க்கு 70 மணிநேர பிளேடைம், அடாப்டிவ் ANC, ப்யூர் பாஸ் சவுண்ட், விலை $100 மட்டுமே.
- டியூன் 670NC (Tune 670NC On-Ear): 70 மணிநேர பிளே டைம், விலை: $100 மட்டுமே.
- ட்யூன் 720BT (Tune 720BT Over-Ear): 76 மணிநேரம் வரை பிளே டைம், வெறும் $80 மட்டுமே.

- டியூன் 520BT (Tune 520BT On-Ear): 57 மணிநேரம் பிளேடைம், விலை $50 மட்டுமே.
இறுதியாக நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, அதன் முதல் ஓபன்-இயர் ஹெட்போன்ஸ் மாடலான சவுண்ட்கியர் சென்ஸ் (Soundgear Sense): சாதனம் $150 டாலர் விலையில் வருகிறது. இது 6 மணிநேர பிளேடைம் வழங்குகிறது. கேஸ் உடன் 24 மணிநேர பிளே டைம் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JBL Launches TWS Earbuds With 1.45" inch LED Display Charging Case and Headphones With 70Hrs Playback Time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X