ஜெயா சிகிச்சை சிசிடிவி காட்சி குறித்து அப்போலோ பிரமாண பத்திரம் தாக்கல்.!
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வரை யாரிடமும் அப்போலோ மருத்துவமனை வெளியிடவில்லை. மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிசிச்சை பலனின்றி இறந்தார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வரை யாரிடமும் அப்போலோ மருத்துவமனை வெளியிடவில்லை. மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
இதுகுறித்து சிகிச்சையின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை இல்லாதது தொடர்பாக அப்போலே மருத்துவமனை விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

உத்தரவு:
ஜெலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது பதிவான சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க ஆறுமுகசாமி ஆணையம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

அப்போலோ பதில்:
சிசிடிவி காட்சிகள் 30 முதல் 45 நாட்கள் வரை மட்டுமே சேமித்து வைக்கும் திறன் உள்ளதாக புதிய காட்சிகள் பதிவாகும் போது பழைய பதிவுகள் அழிந்துவிடும் என்றும் அப்போலோவின் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு:
இதுகுறித்து விரிவான பிரமாணப்பத்திரம் தாக்க செய்ய அப்போலோ தலைமை நிர்வாக அதிகாரி சுப்பயை விஸ்வநாதனிடம் உத்தரவிட்டப்பட்டது.

கேமரா அனைத்து வைப்பு:
ஜெயலிதா சிகிச்சையின் போது, சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் வைக்கப்பட்டதா, அனைத்து வைக்க உத்தரவிட்டது யார் என விளக்கமாக தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

பிரமாணப்பத்திரம் தாக்கல்:
சிசிடிவி கேமரா காட்சிகள் குறித்து அப்போலலோ மருத்துவமனை நிர்வாகம் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் ஜெயலலிதா உடல்நலம் குறித்து மருத்துவமனையில் இருந்து ஆளுநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டதா? ஆளுநர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், குடியரசுத் தலைவருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.


Click it and Unblock the Notifications