ஒரு லிமிட் இல்லையா?- வாழைப்பழம் உரிக்க ரோபோவுக்கு தீவிர பயிற்சி கொடுத்த ஜப்பான்: காரணமே வேற!

|

ரோபோக்கள் வளர்ச்சியும் பங்கெடுப்பும் பிரதான வகையில் முன்னேறிக் கொண்டு வருகிறது. உலோக பாகங்களை நகர்த்துவதில் இருந்து காபி வழங்குவது வரை அனைத்து பயன்பாடுகளிலும் ரோபோ பங்காற்றத் தொடங்கி விட்டது. ஏலியன்கள் இருக்கிறதா இல்லையா, திரைப்படங்களில் ஏலியன்கள் குறித்து காட்டப்படும் காட்சிகள் நிகழுமா என்ற கேள்வி மிகப்பெரிய கேள்விக்குறியே., ஆனால் ரோபோக்கள் குறித்து திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகள் நடப்பதற்கு ஏணைய சாத்தியக்கூறுகள் இருக்கிறது. காரணம் ரோபாடிக்ஸ் துறையில் மனிதர்களின் கண்டுபிடிப்பும் பங்காற்றலும் பெருமளவு முன்னேறி வருகிறது.

நுட்பமான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டம்

நுட்பமான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டம்

அதன்படி தற்போது இயந்திரங்களை மிகவும் நுட்பமான செயல்பாடுகளை மேற்கொள்ளும் எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் வாழைப்பழம் உரிக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜப்பானில் உள்ள தொழிற்சாலைத் தளங்களில் பல எளிமையான பணிகளை ரோபோக்கள் கையாண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாழைப்பழத்தை அதன் உள்ளே இருக்கும் பழத்தை நசுக்காமல் உரிக்கக்கூடிய நுட்பமான பணியை செய்யும் திறன் உடனான ரோபோவை ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதுகுறித்து டோக்கியோ பல்கலைக்கழம் ஆராயாச்சியாளர்கள் வெளியிட்ட வீடியோவில் ரோபோ மூன்று நிமிடங்கள் இரண்டு கைகளாலும் வாழைப்பழத்தை எடுத்து உரிக்கிறது.

ரோபோக்களை பணியில் சேர்க்க திட்டம்

ரோபோக்களை பணியில் சேர்க்க திட்டம்

ஜப்பானில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஜப்பானில் ரோபோக்களை உருவாக்கி அதை மனிதர்களுக்கு இணையான பணிகளை செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் ஹீகோல் கிம், யோசியூகி ஒஹ்முரா, யாசூவா குனியோஷி ஆகியோர் ஆழமான பயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அதில் ரோபோவிற்கு நுட்பமான முறையில் நசுங்காமல் வாழைப்பழத்தை எப்படி உரிப்பது என பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

சுமார் 13 மணி நேரம் பயிற்சி

சுமார் 13 மணி நேரம் பயிற்சி

வாழைப்பழத்தை நசுங்காமல் உரிப்பதற்கான பயிற்சி சுமார் 13 மணி நேரம் வரை வழங்கப்பட்டதாக அதன் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். வாழைப்பழத்தை ரோபோக்கள் சரியாக உரிக்கும் விகிதம் குறித்து பார்க்கையில், அது 57% ஆகவே இருந்தது. 13 மணி நேரங்கள் பயிற்சி வழங்கியும் ரோபோக்களால் 100% வரை முழுமையாக சரியாக வாழைப்பழத்தை உரிக்க முடியவில்லை. ஆராய்ச்சியாளர்கள் செய்த பரிசோதனையில் முழு அளவிலான வெற்றியை எட்டமுடியவில்லை என்றாலும் போதிய பயிற்சி வழங்குவதன் மூலம் வெற்றி அடைய வைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது வெற்றி அடையும் பட்சத்தில் ரோபோக்களும் நுட்பமான துல்லியமான வேலைகளை மனிதர்கள் போல் கையாள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மனிதர்களை போல பணிகளை செய்ய வைக்க திட்டம்

கூடுதலான சோதனைகளை மேற்கொள்வதன் மூலம் ரோபோக்களை எளிய முறையில் மனிதர்களை போல பணிகளை செய்ய வைக்க முடியும் என ஆராய்ச்சியாளரில் ஒருவரான குனியோஷி தெரிவித்துள்ளார். சிறந்த பயிற்சி அளிக்கப்பட்ட ரோபோக்கள் மூலம் ஜப்பானில் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைகளை போக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் செய்த பரிசோதனையில் முழு அளவிலான வெற்றியை எட்டமுடியவில்லை என்றாலும் போதிய பயிற்சி வழங்குவதன் மூலம் வெற்றி அடைய வைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள்

அதேபோல் சுவிட்சர்லாந்தில் மீட்பு, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள பன்முகத்தன்மை கொண்ட அதிநவீன ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மனிதர்களைப் போலவே இரு கால்களிலும் இயங்கக் கூடிய வகையிலும், பின்பு சட்டென நான்கு கால்களில் சக்கரங்கள் பொருத்தப்பட்டு ஊர்ந்து செல்லும் வகையில் இந்த புதுவகை ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடிய வகையில் இந்த அதிநவீன ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த அதிநவீன ரோபோ 100 கிலோ வரை எடையை கையாளும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும்

எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும்

குறிப்பாக மனிதனுக்கு தேவையான பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிற்ற மின்னணு கருவி தான் ரோபோ. குறிப்பாக மனிதனால் உருவாக்கப்படும் இந்த ரோபோ எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன் முடிவு செய்கிறான். இப்போது பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளில் கூட ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள். இனி வரும் காலங்களில் தற்போதைய தொழில்நுட்பங்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரோபோக்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source Images: futuretimelinedotnet

Best Mobiles in India

English summary
Japanese trains Robots to peel bananas Without Squashing: Do you know the Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X