பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

|

உயிரினங்களின் ஆதாரமாக கருதப்படும் பொருள் பூமியை தாண்டி பிற பகுதிகளிலும் இருப்பது முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுகோளில் இருந்து எடுத்த வரப்பட்ட மாதரிகளை சோதனை செய்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் அதில் 20 அமினோ அமிலங்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக விண்வெளியில் மிதக்கும் ஒரு சிறுகோளில் அமினோ அமிலங்கள் (வாழ்க்கைக்கான முக்கிய பொருள்) இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். Hayabusa2 மிஷன் மூலமாக ரியுகு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. சிறுகோளில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் 20 அமினோ அமிலங்களை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

ஜப்பானிய விண்வெளி நிறுவனமான JAXA

ஜப்பானிய விண்வெளி நிறுவனமான JAXA

சிறுகோள் ஆனது கார்பன் மற்றும் கரிமப் பொருட்களின் தடயங்களை கொண்டுள்ளதாக அறிவியில் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானிய விண்வெளி நிறுவனமான JAXA., சூரிய குடும்பத்தின் பொருட்கள் எவ்வாறு செயல்படுகிறது, பூமியில் உள்ள வாழ்க்கையுடன் தொடர்புடைய தடயங்கள் ஏதும் விண்வெளியில் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது

உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது

அமினோ அமிலங்கள் என்பது புரதங்களின் மூலக்கூறுகள் ஆகும். இவை புரதங்களை உருவாக்குகின்றன மற்றும் உயிரைக் கட்டமைக்கின்றன. இந்த மூலக்கூறுகள் என்பது உயிரினங்கள் வாழ்வதற்கு மிகவும் அவசியமானதாகும். காரணம் ரத்த அழுத்ததை சீராக்குவது, நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பது, திசுக்களை சரி செய்வது, உடலில் உள்ள நைட்ரோஜன் அளவை சீராக்குவது என பல செயல்பாடுகளுக்கு ஆதாரமாக அமினோ அமிலங்கள் தான் இருக்கிறது.

அரசு பேருந்து: செல்போனில் சத்தமாக பேச பயணியருக்கு தடை? காரணம் என்ன?அரசு பேருந்து: செல்போனில் சத்தமாக பேச பயணியருக்கு தடை? காரணம் என்ன?

பூமியில் விழுந்த ஒரு சிறுகோள்

பூமியில் விழுந்த ஒரு சிறுகோள்

இந்த அமினோ அமிலங்களானது முன்னதாக பூமியில் விழுந்த ஒரு சிறுகோளில் கண்டறியப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் சிறுகோள்கள் அவை பயணக்கும் வேகத்தின் காரணமாக எரிந்துவிடும். இதன் காரணமாக முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளில் அரிதாகவே அமினோ அமிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் தற்போது 20 அமினோ அமிலங்கள் சூரிய குடும்பத்தில் மிதந்துக் கொண்டிருந்த ஒரு சிறுகோளில் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மிகவும் பழமையான பொருள்

மிகவும் பழமையான பொருள்

ரியகு சிறுகோள் ஆனது சூரியக் குடும்பத்தின் மிகவும் பழமையான பொருள் என கூறப்படுகிறது. இது சூரியனை போன்றே ரசாயன கலவையைக் கொண்ட ஒரு கல் (கார்பன் நிறைந்த சிறுகோள்) ஆகும். இந்த சிறுகோளானது கிரமப் பொருட்களால் நிறைந்திருக்கிறது என ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் ஹிசாயோஷி யூரிமோடோ Space.com இடம் தெரிவித்துள்ளார்.

கிரகங்களை விட மிகச் சிறயவை

கிரகங்களை விட மிகச் சிறயவை

சிறுகோள்களும் சூரியனை சுற்றி வரும் ஒரு பொருள். இது கிரகங்களை விட மிகச் சிறயவை, சூரிய மண்டலத்தின் பழமையான பொருட்களில் இதுவும் ஒன்று. இதன்மூலம் பூமி எவ்வாறு உருவானது என்பதை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். Hayabusa2 மிஷன் ஆனது 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஒரே நோக்கம் சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்கள் எவ்வாறு தோன்றியது அதற்கான மூலக்கூறுகள் என்ன என்பதை கண்டறிவதே ஆகும்.

போட்டிக்கு தயாரான மோட்டோ- இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ ஜி82 5ஜி: பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன்!போட்டிக்கு தயாரான மோட்டோ- இந்தியாவில் அறிமுகமானது மோட்டோ ஜி82 5ஜி: பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

கடுமையான பாறை மேற்பரப்பு

கடுமையான பாறை மேற்பரப்பு

Hayabusa2 விண்கலம் ஆனது 2014 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. Ryugu என்ற சிறுகோள் கடுமையான பாறை மேற்பரப்பை கொண்டிருந்த போதிலும் Hayabusa2 விண்கலம் இரண்டு முறை அதில் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது. அதேபோல் கடந்த வருடம் ஜூலை மாதம் ஒரு சிறுகோள் வெடித்து உருவாகிய பள்ளத்துக்குள் பயணித்து அங்கிருந்த மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்தது. சிறுகோளுக்குள் பயணித்து அதன் நிலத்தடி மாதிரிகளை சேகரிக்கப்பட்டது என்பது வரலாற்றில் முதன்முறையாகும். தற்போது இந்த விண்கலமானது 1998KY26 எனப்படும் மற்றொரு தொலைதூர சிறிய சிறுகோளை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

File Images

Best Mobiles in India

English summary
Japanese researchers Discover 20 Amino Acids in Asteroid Sample: Hayabusa2

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X