Home
News

ஒருவழியாக விண்வெளி பயணம் முடிந்து பூமி திரும்பினார் ஜப்பானிய கோடீஸ்வரர்

ஜப்பானிய கோடீஸ்வரர் யுசாகு அவர்கள் கடந்த 8-ம் தேதி ரஷ்ய விண்கலம் மூலம் விண்வெளி சுற்றுலா சென்றார். குறிப்பாக 12 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த பிறகு அதே விண்கலம் மூலம் கஜகஸ்தான் நாட்டிலுள்ள பைகானூர் விண்வெளி தளத்தில் யுசாகு மேசவா பாதுகாப்பாக தரையிறங்கினார்.

ண்கலத்தில் இருந்து பிரிந்த பாராசூட்

குறிப்பாக விண்கலத்தில் இருந்து பிரிந்த பாராசூட் மூலம் அவர் தரையிறங்கினார். மேலும் 46 வயதான ஜப்பானிய கோடீஸ்வரருடன் அவரது உதவியாளர் யோசா ஹிரானோ என்பவரும் அலெக்சாண்டர் மிசுர்கின் என்ற ரஷ்ய விண்வெளி வீரரும் பூமிக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியாக 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த

வெளிவந்த தகவலின்படி, சரியாக 12 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த செலவில் சென்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
யுசாகு மேசவா. ஆனால் இந்த விண்வெளி பயணத்திற்கு தான் தந்த தொகை மிகவும் அதிகம் என்றும் ஆனால் அதைவெளிப்படையாக கூற முடியாது என்று யுசாகு மேசவா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போதிலும் இந்த பயணத்திற்கு 375

இருந்தபோதிலும் இந்த பயணத்திற்கு 375 கோடி ரூபாய் செலவழித்திருக்க கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்
வெளியாகியுள்ளன. அதேபோல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு பிரத்யேகமாகத்
தயார் செய்யப்பட்ட ரெடிமேட் உணவுகளை உபெர் நிறுவனம் விண்வெளிக்கே சென்று டெலிவரி செய்துள்ளது. இதற்குவேண்டிபணக்காரர் ஆன யுசாகு மேசவா உடன் உபெர் ஈட்ஸ் கூட்டணி சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 யுசாகு மேசவா கொண்டு சென்ற உணவு

மேலும் யுசாகு மேசவா கொண்டு சென்ற உணவு டெலிவரியை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள் வாங்கிக் கொண்டனர். மேலும் உபெர் ஈட்ஸ் சார்பில் உணவு டெலிவரி பார்சலில் இருந்து ஐட்டங்கள் குறித்து பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

த உணவு பார்சலில் ஃபீப் பவுல்,

குறிப்பாக அந்த உணவு பார்சலில் ஃபீப் பவுல், மிசோ, மூங்கில் சிக்கன், பன்றி இறைச்சி போன்ற சில உணவுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வரலாற்று நிகழ்வை பூமியில் வாழும் மக்கள் உடன் கொண்டாட விரும்பி உள்ள உபெர் ஈட்ஸ் SPACEFOOD எனும் கூப்பன் கோட் ஒன்றை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உபெர் எங்கு வேண்டுமானாலும்

அதேபோல் உபெர் எங்கு வேண்டுமானாலும் டெலிவரி செய்யும், இப்போது விண்வெளி உட்பட என்ற விளம்பர பிராச்சாரங்களை உபெர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதேபோல் உபெர் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதியமுயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான்கூறவேண்டும். அதேபோல் நாம் ஆர்டர் செய்த உணவுகளை டோர் டெலிவரி செய்தற்கு பல நிறுவனங்கள் உள்ளன. ஆர்டர்செய்த உணவுகளை டோர் டெலிவரி செய்வதற்கு இந்தியாவில் பல நிறுவனங்கள் இருந்தாலும், இவற்றில் முன்னணியில்இருப்பது UBER EATS ஆகும்.

Best Mobiles in India

English summary
Japanese millionaire returns to Earth after space mission: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X