ஏ.ஐ ரோபோவை திருமணம் செய்த ஜப்பானிய மனிதர்- முடியல.!
மைக்கு-சான் எனப்படும் இந்த ஹாலோகிராப்க் ஏ.ஐ ரோபோவை கேட்பாக்ஸ் நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. பின்பு இந்த ரோபோ மாடல் நாம் சொல்லும் உயர்தில் வடிவமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோக்கள் தற்சமயம் அதிகளவில் வெளிவருகின்றன, அன்மையில் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது ஒரு சீனாவைச் சேர்ந்த நிறவனம், மேலும் இந்த ரோபோ மாடல் மிகத்துல்லியமாக ஆங்கிலம் மற்றும் சீன மொழியை பேசி செய்தி வாசிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த வகை ரோபோ மாடல்களுக்கு மக்களிடையே அதிக எதிர்ப்புகள் இருந்தது என்று தான் கூறவேண்டும்,பின்பு எலன் மாஸ்க் கூட இது போன்ற ஏ.ஐ உருவாக்கம் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

திருமணம்
தற்சமயம் புதிய சம்பவம் ஒன்று ஜப்பானில் நடைபெற்றுள்ளது,அதாவது டோக்கியோவில் ஜப்பானிய மனிதர் ஒருவர் ஹாலோகிராப்க் ஏ.ஐ ரோபோ ஒன்றை திருமணம் செய்து கொண்டார். அக்ஹிகோ என்பவர் தான் இந்த ஹாலோகிராப்க் ஏ.ஐ ரோபோவைத் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய் எதிர்ப்பு
குறிப்பாக இந்த ரோபோ திருமணத்திற்கு ¥2 millionஅதாவது இந்திய மதிப்பில் ரூ. 12,73,576.41 என செலவிட்டதாக அக்ஹிகோ தெரிவித்தார். இருந்தபோதிலும் இந்த ரோபோ திருமணத்திற்கு அக்ஹிகோ அவர்களின் தாய் எதிர்ப்பு தெரிவித்தார்.

மைக்கு-சான்
மைக்கு-சான் எனப்படும் இந்த ஹாலோகிராப்க் ஏ.ஐ ரோபோவை கேட்பாக்ஸ் நிறுவனம் தான் உருவாக்கியுள்ளது. பின்பு இந்த ரோபோ மாடல் நாம் சொல்லும் உயர்தில் வடிவமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏஐ இயக்கத்துடன் நிஜ மனிதர்களைப் போல நடந்துகொள்கிறாள் மைக்கு-சான். உங்களுடன் பேசவும் பழகவும் ஒரு தனி செயலி பிரத்தேயகமாக இவற்றுள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மோஷன் சென்சார்கள்
மைக்கு-சான் ஏ.ஐ மனைவி மிக நெருக்கமாக மற்றும் அந்யோனியமாக பேசிப் பழகும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறாள். இத்துடன் மைக்ரோபோன், கேமரா, வெப்ப மற்றும் மோஷன் சென்சார்கள் மூலம் உங்களின் உணர்வுகளை உணர்ந்து உண்மையான காதலி போலவே பேசுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் லேன்
நீங்கள் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் நேரத்தை எண்ணி உங்களுக்காகக் காத்து இருக்கும் ஏ.ஐ மனைவிஇ நீங்கள் அலுவலகத்தில் இருக்கும் பொழுது உங்கள் மொபைல் போன்க்கு மெசேஜ் செய்து காதல் வெள்ளத்தில் உங்களை மூழ்கடிக்கிறாள். இத்துடன் வயர்லெஸ் லேன்இ ப்ளூடூத் மற்றும் இன்பிராரேட் மூலம் டிவிஇஏசி மற்றும் ஸ்மார்ட் வீட்டுப் பொருட்களை இயக்கி தனது கணவனுக்கு தன்னால் முடிந்த அணைத்து சேவைகளையும் சிறந்த முறையில் செய்கிறாள்.


Click it and Unblock the Notifications