மனசாட்சி வேண்டாமா: கஸ்டமர் கேருக்கு 24,000 முறை கால் செய்த 71 வயது முதியவர் கைது!

|

தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஜப்பான் குறிப்பிடத்தக்கவை. அங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன்கள் வைத்திருப்பார்கள். அந்த நாட்டில் ஸ்மார்ட் போன்கள் இல்லாதவர்கள் என்றால் அது மிகவும் சொர்ப்பம்.

அகிடோசி ஒகமோடோ என்ற 71 வயது முதியவர்

அகிடோசி ஒகமோடோ என்ற 71 வயது முதியவர்

ஜப்பானின் சைடாமா மாகாணத்தில் கசுகபே நாட்டை சேர்ந்தவர் அகிடோசி ஒகமோடோ என்ற 71 வயது முதியவர். இவர் ஜப்பானிய தொலைத்தொடர்பு நிறுவனமான கே.டி.டி.ஐ-ன் வாடிக்கையாளராக இருந்து வந்துள்ளார்.

8 நாட்களில் 1000 முறை

8 நாட்களில் 1000 முறை

அகிடோஷி ஒகாடாமோ என்ற அந்த முதியவர் எட்டு நாட்களில் மட்டும் கேடிடிஐ என்னும் அந்நிறுவனத்தின் இலவச சேவை எண்ணை ஆயிரம் முறைக்கு மேல் தொடர்பு கொண்டுள்ளார்.

பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா?பட்ஜெட் விலையில் நோக்கியா டிவி அறிமுகம்- எத்தனை அம்சங்கள் தெரியுமா?

எதற்காக கால் பண்ணேன்

எதற்காக கால் பண்ணேன்

ஒகாடாமோ, தான் அந்த நிறுவனத்திடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும், தான் அந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்தார். இவர் தனது தொலைபேசியில் வானொலி ஒலிபரப்புகளை கொண்டுவர இயலவில்லை எனவும் இது நிறுவனத்தின் தவறு என தொடர்ந்து குறை கூறி அந்த நிறுவனத்தின் இலவச தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

ஒருகட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியவில்லை

ஒருகட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியவில்லை

இரண்டரை வருடங்களாக தொடர்ந்து அந்த முதியவர் தங்களை அழைத்ததாக அந்த நிறுவனம் அந்நாட்டு ஊடகத்திடம் தெரிவித்துள்ளது. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் இவரது தொடர் அழைப்புகள் மூலம் மற்ற வாடிக்கையாளர்களுக்கு சேவை விவரங்கள் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றச்சாட்டு

நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றச்சாட்டு

இதனால் கேடிடிஐ என்ற அந்த தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது ஒப்பந்தத்தை மீறியதாக ஒகாடாமோ குற்றஞ்சாட்டியுள்ளார் என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டோக்கியோ மெட்ரோபாலிடன் போலீஸ்

டோக்கியோ மெட்ரோபாலிடன் போலீஸ்

டோக்கியோ மெட்ரோபாலிடன் போலீஸ் கூறுகையில் ஒகாடாமோ அந்த நிறுவனத்தை அழைத்து வாடிக்கையாளர் சேவையின் ஊழியரை தவறாக பேசுவார் அல்லது அந்நிறுவனத்தின் பிரதிநிதி தன்னை சந்தித்து மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறுவார் என தெரிவித்துள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன?ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா: ரூ.500-க்குள் கிடைக்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் என்ன?

அகிடோசி ஒகமோடோ கைது

அகிடோசி ஒகமோடோ கைது

இதையடுத்து வர்த்தக தடை ஏற்படுத்த முயற்சி செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் அகிடோசி ஒகமோடோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். முதலில் தாங்கள் இதுகுறித்து புகார் ஏதும் தெரிவிக்க வேண்டாம் என்று நினைத்ததாகவும் ஆனால் அந்த முதியவர் அடிக்கடி அழைப்பதால் பிற வாடிக்கையாளர்களின் அழைப்பை ஏற்க முடியவில்லை என்றும் கேடிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 ஆண்டுகளில் 24,000 முறை அழைப்பு

2 ஆண்டுகளில் 24,000 முறை அழைப்பு

அகிடோசி இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 24 ஆயிரம் முறை வாடிக்கையாளர் எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முந்தைய ஒரு வாரத்தில் 411 முறை வாடிக்கையாளர் எண்ணுக்கு கால் செய்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: citizentv.co

Best Mobiles in India

English summary
Japanese man 71, arrested for making 24000 complaint calls to customer care

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X