கொரோனா எதிரோலி: டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருப்பவர்களுக்கு 2,000 இலவச ஐபோன்.!

|

ஜப்பான் துறைமுகத்திற்கு வந்த டயமண்ட் பிரின்சஸ் எனும் கப்பலில் இருக்கும் 3,700பேரில் 285 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த கப்பல் துறைமுகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 2,000 இலவச ஐபோன் யூனிட்

2,000 இலவச ஐபோன் யூனிட்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பாதிக்கப்பட்ட கப்பல் பயணத்தில் ஜப்பானிய அரசாங்கம் கிட்டத்தட்ட 2,000 இலவச ஐபோன் யூனிட்களை பயணிகளுக்கு விநியோகித்ததாக கூறப்படுகிறது.

 மருந்து கோரிக்கை

மருந்து கோரிக்கை

குறிப்பாக இலவச ஐபோன்களை விநியோகிப்பதன் நோக்கம் என்னவென்றால், சிக்கித் தவிக்கும் பயணிகளை மருத்துநிபுணர்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிப்பது, சந்திப்பை பதிவு செய்வது, மருந்து கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது மற்றும் உளவியலாளர்களுடன் ஏற்படும் அதிர்ச்சியைப் பற்றி விவாதிப்பது போன்ற செயல்களுக்காக
கொடுக்கப்பட்டுள்ளது.

மாகோடகர (Macotakara)

மாகோடகர (Macotakara)

மாகோடகர ((Macotakara) அறிக்கையின்படி, ஜப்பானின் சுகாதாரஇ தொழிலாளர் மற்றும் பணி அமைச்சகம், தனியார் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு 2,000 ஐபோன்களை வழங்கியுள்ளது.

மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை.! ஏன்? எதற்கு?மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்ட உங்கள் PAN கார்டு-க்கு நாங்கள் பொறுப்பில்லை.! ஏன்? எதற்கு?

லைன் செயலி

லைன் செயலி

மேலும் கொடுக்கப்பட்டுள்ள ஐபோன்கள் முன்பே நிறுவப்பட்ட லைன் செயலியுடன் வந்துள்ளன. இது ஜப்பானில் மருத்துவ நிபுணர்களுடன் பயணிகளுக்கான இணைப்பு சேனலாக செயல்படும் ஒவ்வொரு கேபின், கப்பலின் பணியாளர்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும், குறைந்தபட்சம் ஒரு ஐபோனையாவது இணைக்கப்படுவதற்கும்,லைன் செயலியின் மூலம் புதுப்பிக்கப்படுவதற்கும் அரசாங்க அமைப்பு உறுதி செய்துள்ளது.

 டயமண்ட் பிரின்சஸ்

இந்த டயமண்ட் பிரின்சஸ் பயணக் கப்பலின் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஐபோன்களை வழங்குவதற்காககாரணம், ஜப்பானுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் கொண்ட போன்களால் லைன் செயலியைப் பதிவிறக்க முடியாமல் போகலாம் என்று 9to5 கூறுகிறது.

ஒரு தகவல் கையேடு

ஒரு தகவல் கையேடு

ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் தங்கள் நிலையைச் சுற்றியுள்ள அனைத்து செய்தி புதுப்பிப்புகளையும் பெறுவதோடு மட்டுமல்லாமல், ஐபோன்களில் லைன் செயலியை எளிதில் கண்டுபிடித்து உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் தொடர்பில் இருப்பதற்குப் பயன்படுத்த, குழுவினருக்கும், பயணிகளுக்கும் ஒரு தகவல் கையேடு வழங்கப்பட்டது.

டிவிட்டர் பக்கத்தில்

கப்பலில் இருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஸ்மித் என்ற பயணி, நான் ஒரே வாகனத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்ய விரும்பவில்லை, எனவே வரும் 19-ம் தேதிக்கு பின் நான் அமெரிக்க செல்வேன் என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!2 ஆண்டு உத்தரவாதத்துடன் பட்ஜெட் விலையில் இரண்டு அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம்.!

 அந்த சொகுசு கப்பலில் மட்டுமே

அந்த சொகுசு கப்பலில் மட்டுமே

சீனாவுக்கு வெளியே இந்த அளவு எண்ணிக்கையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ஒரே இடத்தில் இருப்பது அந்த சொகுசு கப்பலில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Japanese Govt provides 2000 iPhones to Diamond Princess Passengers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X