2023 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு விமான சேவை : ஜப்பானிய நிறுவனம் உறுதி.!

விமான இயந்திரத்தின் உந்து விசைச் சோதைனையை கடந்த ஜீலை மாதத்தில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது இந்நிறுவனம்.

By GizBot Bureau
|

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் விண்வெளி ஆய்வு, செயற்கைக் கோள் ஏவுதல் போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று, 2023 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு வணிகரீதியான விமானத்தை இயக்கும் இலக்குடன் திட்டம் தீட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

2023 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு விமான சேவை : ஜப்பானிய நிறுவனம் உறுதி

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விண்வெளி சுற்றுலா நிறுவனமான பி.டி.ஏரோ ஸ்பேஸ் (P.D. Aerospace) நிறுவனம்தான் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஆள் இல்லாத விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ள இந்நிறுவனம், அதனுடைய வெற்றி தோல்வியைப் பொறுத்து 2023 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு வணிகரீதியான விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளது. மத்திய ஜப்பானில் உள்ள நாகோயா பகுதியில் இருந்து செயல்படும் இந்நிறுவனம் தன்னுடைய திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து இதுவரை 4.78 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது. இந்திய மதிப்பில் ஏறக்குறைய 32 கோடி ரூபாய். ஜப்பானின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான, ஆல் நிப்பான் ஏர்வேஸ் (All Nippon Airways (ANA) ) நிறுவனமும் இத்திட்டத்திற்காக முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
2023 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு விமான சேவை : ஜப்பானிய நிறுவனம் உறுதி
அமெரிக்காவா? ஜப்பானா? முந்தப்போவது யார் ?
“விண்வெளிக்கு வணிகரீதியான சுற்றுலா செல்வதற்கு ஏற்ற ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில், விண்வெளிக்கான விமானப் போக்குவரத்தை மிக விரைவில் இயக்கி, ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவதில் எங்களுடைய பி.டி.ஏரோஸ்பேஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும் என நம்புகிறோம்.” என்கிறார் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, ஷ்யூஜி ஓகாவா (Shuji Ogawa).
2023 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு விமான சேவை : ஜப்பானிய நிறுவனம் உறுதி

100 கி.மீட்டர் உயரத்தில் விண்வெளியில் பறக்கும்
இந்த விமானத்தின் இன்ஜின், ஏர் கிராஃப்ட் மற்றும் ராக்கெட் ஆகிய இரண்டுக்கும் ஏற்ற வகையில் இயங்கக் கூடிய தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்படும். ஜப்பானிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் முதல் பயணிகள் விமானமாக இருக்கக் கூடிய இந்த ஏர்கிராஃப்ட், பூமியிலிருந்து 100 கி்மீட்டர் உயத்திற்கு விண்வெளியில் பயணித்து மீண்டும் வளி மண்டலத்திற்குள் நுழையும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
2023 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு விமான சேவை : ஜப்பானிய நிறுவனம் உறுதி

விமானம் மற்றும் ராக்கெட் இரண்டுக்கும் ஏற்ற இன்ஜின்
விமான இயந்திரத்தின் உந்து விசைச் சோதைனையை கடந்த ஜீலை மாதத்தில் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது இந்நிறுவனம். இந்த இயந்திரம் ஏர்கிராஃப்ட் மற்றும் ராக்கெட் ஆகிய இரண்டையும் இயக்குவதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. இதனை மேலும் செம்மைப் படுத்தும் நோக்கில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2023 ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு விமான சேவை : ஜப்பானிய நிறுவனம் உறுதி

2023 ஆம் ஆண்டு விமானம் பறக்கத் தொடங்கும்

இயந்திரத்தின் சோதனை மற்றும் விமானத்தின் வடிவமைப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக முடித்த பிறகு ஆளில்லா விமானத்தை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்யப்படும். இந்தச் சோதனை மூன்று முறை மேற்கொள்ளப்படும். இந்தச் சோதனைகள் 2019 ஆம் ஆண்டுக்குள் வெற்றிகராமக நிறைவு பெற்றால், 2023ஆம் ஆண்டு, விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்வதற்கான முதல் விமானம் ஜப்பான் விமான நிலையத்தில் காத்திருக்கும்.

Best Mobiles in India

English summary
Japanese Firm to Launch Commercial Flights to Space by 2023 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X