பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..

|

அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள், ரோபோட்கள் என்று நாம் தினசரி செய்யும் வேலைகளை எல்லாம் இன்னும் சுலபமாக மாற்றக் கூடிய வகையில் உலக நாடுகள் மிக வேகமாக எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. சமீப காலங்களில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், ஜப்பானிய பொறியாளர் ஒருவரை இப்போது சிலந்தி போல நடக்கும் ஒரு நடமாடும் நைட் லேம்பை உருவாக்கியுள்ளார். இவருடைய கண்டுபிடிப்பு இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

ஜப்பானிய ஐடி பொறியாளர் உருவாக்கிய சிலந்தியைப் போன்ற ரோபோ

ஜப்பானிய ஐடி பொறியாளர் உருவாக்கிய சிலந்தியைப் போன்ற ரோபோ

ஜப்பானிய ஐடி பொறியாளர் ஒருவர் சிலந்தியைப் போன்ற ஒரு நடமாடும் நைட் லேம் சாதனத்தை உருவாக்கியுள்ளார். இந்த சிலந்தி போன்ற இரவு விளக்கு தன்னிச்சையாகச் செயல்படும் படி அவர் உருவாக்கியுள்ளார் என்பது குறிபிடித்தக்கது. நீங்கள் செல்லும் வழியில் உங்களுடனே சேர்ந்து, அதுவும் ஊர்ந்து செல்லும் படி இதை உருவாக்கியுள்ளார். இரவில் விளக்கை ஆன் செய்து பாத்ரூம் செல்ல முடியாத முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக இந்த சாதனம் பயணப்படும் என்கிறார் இந்த கண்டுபிடிப்பாளர்.

ஸ்பைடர் நைட் லேம்ப்

ஸ்பைடர் நைட் லேம்ப்

குறிப்பாக, இவர் இந்த சாதனத்தை அவரின் குழந்தைகளுக்காக உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் விளக்கை அணைத்து வைத்தால், இது உங்களுடன் ஒரு துணையாக வரும் என்கிறார் இதன் கண்டுபிடிப்பாளர். இந்த ஸ்பைடர் நைட் லேம்ப் தன்னிச்சையாக வீட்டிற்குள் குழந்தைகளுடன் நடமாடும் ஒரு வீடியோ பதிவையும் அவர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த வீடியோ பதிவைப் பார்த்த இணையவாசிகள் இது பயமுறுத்தும் வகையில் இருக்கிறது என்று கமெண்ட் செய்துள்ளனர்.

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

உடல் நடுங்க வைக்கும் ஸ்கேரி ஸ்பைடரா? இந்த நைட் லேம்ப்

உடல் நடுங்க வைக்கும் ஸ்கேரி ஸ்பைடரா? இந்த நைட் லேம்ப்

இது வசதிக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த சிலந்தி நைட் லேம்ப் விளக்கை இருளில் பார்ப்பது, உண்மையில் சிலருக்கு உடல் நடுங்க வைக்கும் ஸ்கேரி ஸ்பைடராக காட்சியளிக்கும் என்கின்றனர் நெட்டிசன்ஸ்கள். நள்ளிரவில் கழிப்பறைக்குச் செல்லும் போது, ​​இந்த விளக்குகள் உங்களுக்கு முன் நடந்து வழிகாட்டுவதுடன், உங்களுக்குத் தேவையான வெளிச்சத்தையும் வழங்குகிறது. அதேபோல், இது உங்களுடன் நடமாடும் ஒரு உயிரினம் போல் உங்களைச் சுற்றி வருவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

ரோபோ ஸ்பைடர் விளக்கில் என்ன இருக்கிறது?

ரோபோ ஸ்பைடர் விளக்கில் என்ன இருக்கிறது?

இந்த சிலந்தி விளக்கு ஜப்பானிய பொறியாளரால் ஒரு பகுதி திட்டமாகச் செய்யப்பட்டது. இந்த விளக்கு இரவில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவில் கழிவறைக்குச் செல்ல விரும்பும்போது, ​​​​எல்லா விளக்குகளையும் அணைக்கிறோம் என்பதே அதன் பின்னால் உள்ள எண்ணம். அதற்குப் பதிலாக, ஒருவர் இந்த சிலந்தி விளக்கைப் பயன்படுத்தி, அதைப் பின்பற்றலாம். இது உங்கள் வீட்டிற்குள் இருக்கும் இடங்களைச் சென்றடையும் படி ப்ரோக்ராமிங் செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

நெட்டிசன்ஸ்களை நடுங்க வைத்த வைரல் ஆகும் வீடியோ..

விளக்கின் கீழ் வைக்கப்பட்டுள்ள சிலந்தி கால்கள் கொண்ட ஸ்டாண்ட் ரோபோட்டிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இந்த நபர் தனது இரண்டு குழந்தைகளுக்காக மட்டுமே இது போன்ற ஒரு நடமாடும் விளக்கைத் தயார் செய்ததாகக் கூறுகிறார். இந்த வீடியோவைக் கொண்ட ட்வீட் பிளாட்பாரத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் மூன்று நாட்களில் 2.28 லட்சத்திற்கும் அதிகமான லைக் உள்ளன.

அதனுடன் இருட்டில் நடப்பது பயமாக இருக்குமா?

அதனுடன் இருட்டில் நடப்பது பயமாக இருக்குமா?

இந்த நடமாடும் விளக்கைக் கண்டுபிடித்த ஜப்பானிய பொறியாளரிடம் பேசுகையில், இது உங்களுக்கு ஒருவருடன் இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது என்று கூறினார். இருப்பினும், அவரது 23 வினாடி டெமோ வீடியோவைப் பார்த்த பிறகு, மக்கள் அதை ஏற்கவில்லை. அதனுடன் இருட்டில் நடப்பது பயமாக இருக்கும் என்கிறார்கள். அதே நேரத்தில், கண்டுபிடிப்பாளர்கள் இந்த கண்டுபிடிப்பால் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நடமாடும் ஸ்பைடர் நைட் லேம்ப் பற்றி உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

Best Mobiles in India

English summary
Japanese Engineer Created Creepy Night Lamp Crawls Like a Spider Scares Netizens : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X