கார்டு தேவையில்லை: கைரேகையை வைத்து பணம் தரும் ஏடிஎம்!

Posted By: Staff
கார்டு தேவையில்லை: கைரேகையை வைத்து பணம் தரும் ஏடிஎம்!

இந்த பாம் ஸ்கேனிங் இயந்திரம் சரியாக இயங்குகிறதா என்று கில்லட் நிறுவனம் சோதனை நடத்தி வருகிறது. சிக்காகோவில் உள்ள அக்குவாரியம் மற்றும் நியூ யார்க்கில் உள்ள சவுத் ஸ்ட்ரீட் சீப்போர்ட் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இது போன்று உள்கை பதித்து பணம் எடுக்கும் வசதி கொண்ட ஏடிஎம், பணம் எடுக்கும் வேலையை இன்னும் எளிதாக்கும். இதனால் ஏடிஎம் கார்டு பயன்படுத்த வேண்டிய அவசியமோ, எங்கு சென்றாலும் கார்டை பத்திரப்படுத்தி வைத்து கொள்ள வேண்டிய அவசிமோ இல்லை.

பையோமெட்டரிக் தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்கேனிங் ஏடிஎம் பெரியவர்களையும், சிறியவர்களையும் சரியாக கண்டறியும் அளவுக்கு பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் இதை குழந்தைகள் பயன்படுத்த முடியாது.

கடந்த ஆன்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பில் அனைவரிடமும் இருந்த ஏடிஎம் கார்டுகள் தொலைந்து போய்விட்டது. இதனால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க முடியாமல் போனது.

ஆனால் இது போன்று உள்ளங்கை பதித்து பணம் எடுக்கும் முறை வந்துவிட்டால் நிச்சயம் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் கவலை இல்லை.

உள்ளங்கை பதி்த்து எளிதாக பணம் எடுக்கலாம். இந்த ஸ்கேனிங் ஏடிஎம் இயந்திரம் வெற்றிகரமாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டால் நிச்சயம் மக்களுக்கு சிறந்த நன்மைகள் உண்டு தான்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot