போட்டுத்தள்ள 'பிளான்' ரெடி : மூன்றாம் உலகப்போரின் தொடக்கம்..?

Written By:

வடகொரியாவின் சமீபத்திய முட்டாள்த்தனமான செயல்கள், அதன் ஆக்கிரமிப்பு நோக்கம் மற்றும் திகிலூட்டும் அதிநவீன ஆயுதங்களை வெளிப்படையாக உலகிற்கு பறைசாற்றின. அதற்கு விலையாகத்தான் தென்கொரியாவின் நேரடி மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கிறது வடகொரியா. அதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடும் கூட்டணி அமைத்து வடகொரியாவிற்கு எதிராக விண்வெளி ஏவுகணைத் திட்டங்களை அறிவித்துள்ளது.

இது மூன்றாம் உலக யுத்தத்தின் தொடக்கமாய் அமையலாம் என்ற அச்சம் அனைத்து பக்கங்களில் இருந்து கிளம்பியுள்ளன..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
திட்டம் :

திட்டம் :

வடகொரியா இந்த மாத இறுதியில் செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக, தென் கொரிய ஏஜென்சி ஒன்று தெரிவித்துள்ளது.

லாங் ரேஞ்ச் மிசைல் :

லாங் ரேஞ்ச் மிசைல் :

விண்ணில் செலுத்தப்படும் அந்த செயற்கைகோள் ஆனது நீண்ட தூரம் பயணித்து தாக்க வல்ல லாங் ரேஞ்ச் மிசைல்களை சுமந்து கொண்டு செல்ல இருக்கிறது என்று சில அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

கூட்டணி :

கூட்டணி :

வடகொரியாவின் இந்த அச்சுறுத்தும் நடவடிக்கையானது, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளது.

தகவல் :

தகவல் :

அதுமட்டுமின்றி 'கொடுங்கோல்' செயற்கைகோள்களை தடுத்து அழிக்கும் திட்டத்தில் அமெரிக்க அரசோடு இணைந்து ஜப்பான் செயல்பட இருக்கிறது என்ற அதிகாரப்பூர்வாமான தகவலும் வெளியாகியுள்ளது.

தடுத்து நிறுத்தப்படாது :

தடுத்து நிறுத்தப்படாது :

மேலும் ஜாப்பானிய பிரதமர், அனைத்து நாடுகளும் வடகொரியாவின் ஏவுகணை செலுத்தும் திட்டத்தை நிறுத்துமாறு "வலுவாக கூறவில்லை" என்றால் அது தடுத்து நிறுத்தப்படாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐநா தடை :

ஐநா தடை :

ஏற்கனவே வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு ஐநா தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நிலையான செய்தி :

நிலையான செய்தி :

ஐநா தடையை மனதில் கொண்டு "வடகொரியாவிற்கு மிக விரைவாக நிலையான செய்தி ஒன்றை ஐநா அனுப்பி வைக்க வேண்டும்" என்று கோரியுள்ளார் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஆன ஜான் கிர்பி.

இறையான்மை :

இறையான்மை :

ஆனால், மறுபக்கம் இதையெல்லாம் சற்றும் மதிக்காமல் விண்வெளி திட்டங்கள் எங்களின் இறையான்மை சார்ந்தது என்று கூறிக்கொண்டு என்னவெல்லாம் செய்ய விரும்புகிறதோ அதையெல்லாம் வடகொரிய அரசு செய்து கொண்டேதான் இருக்கிறது.

விலை கொடுக்க நேரிடும் :

விலை கொடுக்க நேரிடும் :

இது போன்ற 'போக்கிரித்தனமான' செயல்களால் தான், கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் தொழில்நுட்பம் சார்ந்த ஏவுகணையை விண்ணில் செலுத்த வேண்டாம் மீறினால் "தகுந்த விலை கொடுக்க நேரிடும்" என்று வடகொரியாவை நேரடியாக தென் கொரியா எச்சரித்துள்ளது.

நடவடிக்கை :

நடவடிக்கை :

இதற்கிடையில் வடகொரிய லான்ச் ஸ்டேஷனில் ஏவுகணை செலுத்துவதற்கான நடவடிக்கைகளை காண முடிவதாக அமெரிக்க செயற்கைகோள்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

 தயார் :

தயார் :

ஜப்பான் நாட்டை அச்சுறுத்துகின்ற எந்தவொரு வடகொரிய ஏவுகணையையும் சுட்டுவீழ்த்த ஜப்பானிய ஏவுகணைகள் தயாராக இருக்க வேண்டும் என்று ஜப்பான் அரசு உத்தரவிடுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Japan and US could unite to take on North Korea after space-missile plans announced. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot