ஜப்பான் செல்லும் இந்தியர்களுக்கு இனி சிரமம் இருக்காது.. வருகிறது புதிய சேவை.. இதோ முழு விவரம்..
இந்தியாவில் யுபிஐ (UPI) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. எனவே தான் அதிக மக்கள் யுபிஐ சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
ஜப்பானில் யுபிஐ சேவை
இந்நிலையில் ஜப்பானுக்கு செல்லும் இந்தியச் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்நாட்டில் யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜப்பானைச் சேர்ந்த ஐடி நிறுவனமான என்.டி.டி டேட்டா, நம் நாட்டின் தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்துடன் இணைந்து இந்த சேவையைச் சோதனை அடிப்படையில் துவங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த திட்டம் மட்டும் நடைமுறைக்கு வந்தால், இந்தியச் சுற்றுலா பயணியர் யுபிஐ செயலி வழியாக ஜப்பான் வர்த்தகர்களின் கியூ. ஆர் (QR) குறியீட்டை பயன்படுத்தி எளிதாகப் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎப்ஓ யுபிஐ சேவை
மேலும் சமீபத்தில் இபிஎப்ஓ (EPFO) என்கிற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (Employees Provident Fund Organisation) யுபிஐ சேவை குறித்து ஒரு முக்கிய தகவல்க வெளியானது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.
இப்போது பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டும் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதில் உள்ள ஆவணங்கள் மற்றும் காரணங்கள் போன்ற அனைத்தையும் சரிபார்த்து உங்களுக்குப் பணம் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவினை எடுப்பார்கள்.
இனிமேல் அந்த கவலை இருக்காது. அதாவது விரைவில் பிஎப் பணத்தை யுபிஐ வழியாக எடுத்துக் கொள்ளக் கூடிய வசதி கொண்டுவரப்பட உள்ளதாக இபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது. எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, வரும் ஏப்ரல் மாதத்தில் பிஎப் சந்தாதாரர்கள் தங்களது பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ பேமென்ட் கேட்வே வழியாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎப் கணக்கில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தை மட்டுமே நம்முடைய வங்கி கணக்கு வாயிலாக நேரடியாக யுபிஐ மூலம் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஓரு ஊழியரின் பிஎப் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது அதில் எவ்வளவு பணம் எடுக்க முடியும் போன்ற அனைத்து விவரங்கள் தெரிவிக்கப்படும்.

இந்த வசதி நடைமுறைக்கு வந்துவிட்டால் கிட்டத்தட்ட 8 கோடி பேர் இதன் மூலம் பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. பிஎப் பணத்திற்கு நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலைமை இனி இருக்காது. அதாவது பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை விரைவாக வங்கிக்கணக்கின் யுபிஐ-க்கு மாற்றம் செய்து அதை உடனே எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
குறிப்பாக யுபிஐ மூலம் பிஎப் பணம் எடுக்கும் வசதி அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த ஆண்டு பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த அமைப்பு கொண்டுவரும் ஒவ்வொரு வசதிகளும் பிஎப் சந்தாதாரர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








