ஜப்பான் காரன் மூளையே தனி தான்ப்பா.. உலகின் முதல் 6G சோதனை.. 5G வேகத்தை விட 20 மடங்கு ஸ்பீட்.. என்ன வேகம்?
அடுத்த தலைமுறை எதிர்கால நெட்வொர்க் என்று போற்றப்படும் 6ஜி (6G) நெட்வொர்க் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்த நாடாக ஜப்பான் பாராட்டை பெற்றுள்ளது. ஜப்பான் (Japan) தற்போது உலகின் முதல் 6ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
முதலில் 2ஜி (2G) வந்தது, பிறகு 3ஜி (3G) நெட்வொர்க் வந்தது, அதற்கு பின் 4ஜி (4G) வந்தது, அதனை தொடர்ந்து அதிவேகம் கொண்ட சமீபத்திய தலைமுறை நெட்வொர்க்காக 5ஜி (5G) நெட்வொர்க் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகளவில் 5ஜி நெட்வொர்க் சேவை மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவை பற்றி பேசுகையில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளன.

உலகத்தின் முதல் 6ஜி ஸ்பீட் சோதனை வெற்றி.. அசத்திய ஜப்பான் (World's first 6G speed trial success):
வருகின்றன 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவை முழுமையாக 5ஜி நெட்வொர்க் (5G network) சேவையின் கீழ் கொண்டுவர ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோ (Jio) நிறுவனங்கள் முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், ஜப்பான் நாடு தற்போது எல்லா உலக நாடுகளையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் சமீபத்தில் ஜப்பான் நாடு மேற்கொண்ட 6ஜி சோதனையாகும்.
ஆம், ஜப்பானில் உள்ள டோகோமோ (Docomo), என்டிடி கார்ப்பரேஷன் (NDT Corporation), என்இசி கார்ப்பரேஷன் (NEC Corporation), புஜிட்சு (Fujitsu) போன்ற டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஒரு கூட்டு முயற்சியாக ஒரு ப்ரோட்டோடைப் 6ஜி சாதனத்தை உருவாக்கி, அதை வைத்து ஜப்பான் நாட்டில் இண்டோர் (Indoor) மற்றும் அவுட்டோர் (Outdoor) 6ஜி சேவையின் வேகத்தை சோதனை செய்துள்ளனர்.
ப்ரோட்டோடைப் சாதனத்தை வைத்து சோதனை செய்யப்பட்ட இந்த சோதனையின் மூலம் அடுத்த தலைமுறை எதிர்கால நெட்வொர்க் ஆன 6ஜி நெட்வொர்க்கின் வேகம் எவ்வளவு இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. தற்போதைய சூப்பர் ஸ்பீட் நெட்வொர்க்கான 5ஜி சேவையை விட இந்த துவக்க நிலை 6ஜி நெட்வொர்க் 20 மடங்கு அதிக வேகம் கொண்டதாக இருக்கிறது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

6G ஸ்பீட் வேகம் எவ்வளவு தெரியுமா? 5ஜி-யை தூக்கி சாப்பிட ப்ரோட்டோடைப் டெஸ்டிங்:
6ஜி நெட்வொர்க்கின் ப்ரோட்டோடைப் வேகம் நொடிக்கு 100 ஜிகாக்பிட்ஸ் (Gbps) ஆக பதிவாகியுள்ளது. இதன் பொருள், 1 நொடிக்கு 100 ஜிபி என்ற வேகத்தில் இயங்கியுள்ளது. இது இண்டோரில் பதிவு செய்யப்பட்ட நெட்வொர்க் வேகமாக பதிவாகியுள்ளது. அதேபோல், இந்த ப்ரோட்டோடைப் சாதனத்தை வைத்து 300 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட் உடனும் 6ஜி நெட்வொர்க் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
தற்போது சூப்பர் ஸ்பீட் நெட்வொர்க் என்று அழைக்கப்படும் 5ஜி நெட்வொர்க் சேவையை விட, இந்த புதிய 6ஜி நெட்வொர்க் சேவையானது சுமார் 20 மடங்கு அதிக வேகத்தை கொண்டிருப்பதாக முதற்கட்ட சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன. முக்கிய குறிப்பு, ஜப்பான் நடத்திய சோதனை வெறும் ப்ரோட்டோடைப் சாதனத்தை வைத்து நடத்தப்பட்டது என்பதனால், இதன் அசல் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று ஜப்பான் கூறியுள்ளது.
விரைவில் 6ஜி சேவையை முழு வேகத்தில் இயக்க கூடிய ஹார்டுவேர் சாதனங்களை உருவாக்கி, ஜப்பான் மீண்டும் அடுத்தகட்ட 6ஜி சோதனையை மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. கட்டாயம் 6ஜி நெட்வொர்க்கின் வேகம் 1,000,000 Mbps அல்லது 1Tbps வேகம் வரை அடையும் என்று நம்பப்படுகிறது. உலகின் அதிக வேகம் கொண்ட நெட்வொர்க்காக 6ஜி உருமாறப்போகிறது என்பதே உண்மை. இந்தியாவில் 2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications