உலகின் முதல் பறக்கும் கார் ரெடி! சோதனை வீடியோவை வெளியிட்ட ஜப்பான்!

|

டொயோட்டா நிறுவனத்தின் ஆதரவுடன் ஸ்கைட்ரைவ் நிறுவனம் கூட்டு சேர்ந்து உருவாகியுள்ள உலகின் முதல் பறக்கும் கார் இது. நேற்று ஜப்பானில் இந்த பறக்கும் வாகனத்தின் முதல் சோதனையோட்டம் பாதுகாப்பான முறையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பறக்கும் கார் எப்பொழுது பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.

பறக்கும் வாகனம்

பறக்கும் வாகனம்

உலகம் முழுவதும் பல நிறுவனங்கள் பறக்கும் வாகனம் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இது வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பறக்கும் கார் தயாரிப்பில் வெற்றிபெற முயன்று வருகிறது. அந்த வரிசையில் உலகின் முதல் பறக்கும் காரை மனிதன் மூலம் இயக்கி டொயோட்டா நிறுவனம் தனது வெற்றியை உலகிற்கு உறக்கச் சொல்லியுள்ளது. இந்த நிகழ்வு உலகளாவிய உந்துதலில் ஒரு பெரிய படியைக் குறிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்கைட்ரைவின் எஸ்டி-03 பறக்கும் வாகனம்

ஸ்கைட்ரைவின் எஸ்டி-03 பறக்கும் வாகனம்

டெமோவின் ஒரு பகுதியாக, ஸ்கைட்ரைவின் எஸ்டி-03 பறக்கும் வாகனம் 2.5 ஏக்கர் கொண்ட டொயோட்டா டெஸ்ட் ஃபீல்டில் பாதுகாப்பி வலைகள் பொருத்தப்பட்ட போர்ட் தளத்தில் பறந்தது, இது ஜப்பானில் மிகப்பெரிய டெஸ்டிங் ஃபீல்டு என்பது குறிப்பிடத்தக்கது. சோதனைக் களத்தில் பறக்கும் கரை ஒரு பைலட் இயக்கினார். பறக்கும் காரின் ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யக் கணினி மற்றும் உதவி ஊழியர்கள் விமானத்தின் செயல்திறனையும் கண்காணித்தனர்.

13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?

செங்குத்து டேக்-ஆஃப்

செங்குத்து டேக்-ஆஃப்

எஸ்டி -03 பறக்கும் கார் இரண்டு கார்களின் இடத்தை எடுத்துக்கொள்கிறது, இது செங்குத்து டேக்-ஆஃப் மற்றும் தரையிறங்கும் திறன்களைக் கொண்ட உலகின் மிகச்சிறிய மின்சார பறக்கும் வாகனமாகத் திகழ்கிறது. தேவையான திசையில் பறக்க, வாகனம் எதிர் திசைகளில் வேலை செய்ய நான்கு ஜோடி ரோட்டர்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரோட்டரும் அதன் சொந்த மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.

நான்கு நிமிட சோதனை வீடியோ

இந்த சோதனை நான்கு நிமிடங்களுக்கு மட்டுமே நடைபெற்றது. பொது பயன்பாட்டிற்குப் பாதுகாப்பான ஒரு வாகனமாக இதை மாற்ற, நிறுவனம் ஒரு திறந்த பகுதியில் மற்றும் அதிக காலத்திற்கு அதிக மனிதர்களைக் கொண்ட சோதனை விமானங்களை நடத்த வேண்டும். திறந்த சோதனைகளை நடத்துவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெறுவதாக ஸ்கைட்ரைவ் நம்புகிறது.

WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

அடுத்த இலக்கு இரண்டு இருக்கைகள் கொண்ட பறக்கும் கார்

அடுத்த இலக்கு இரண்டு இருக்கைகள் கொண்ட பறக்கும் கார்

2023 க்குள் வணிகரீதியான இரண்டு இருக்கைகள் கொண்ட பறக்கும் காரைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. அரசாங்க ஒப்புதல்களுடன் பறக்கும் வாகனம் கூடுதல் பாதுகாப்புடன் தயாரானதும், இந்த வாகனம் பறக்கும் டாக்ஸி சேவையை இயக்க பயன்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இரண்டு இருக்கைகொண்ட வாகனத்தையும் பெரிய வடிவத்தில் உருவாக்க நிறுவனம் தயாராகிவருகிறது என்று தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Japan's 'flying car' successfully completes first public flight : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X