உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

|

இப்போது உங்களுக்குக் கிடைக்கும் இணைய வேகம் மிக விரைவில் 100,000 மடங்கு அதிக வேகமாக மாறப்போகிறது என்ற நற்செய்தியை நாங்கள் உங்களிடம் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையை, சொல்லப் போனால், எது 100,000 மடங்கு அதிக வேகமா? என்று யோசித்து, நீங்கள் ராக்கெட் வேகத்தில் பயணிப்பது போன்ற காட்சி உங்கள் கண்களுக்குள் வந்து சென்றிருக்கும் என்று நம்புகிறோம். உலகத்தின் அதிவேக இன்டர்நெட் சேவைக்கான நம்ப முடியாத புதிய வேகத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

100,000 மடங்கு வேகமாக இயங்கும் இணைய வேகம்

100,000 மடங்கு வேகமாக இயங்கும் இணைய வேகம்

ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு நம்மை மிக வேகமான இணையத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வரப் போகிறது என்ற செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. இந்த புதிய சாதனையின் மூலம், ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இணையத்தின் தற்போதைய வேகத்தை விட சுமார் 100,000 மடங்கு வேகமாக இயங்கும் இணைய வேகத்தை நோக்கி நகர்ந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இது யாராலும் நம்ப முடியாத ஒரு அசுர வேகமாகும்.

புதிய சாதனையுடன் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்

புதிய சாதனையுடன் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்

தரவு பரிமாற்ற வேகத்திற்கான புதிய சாதனையுடன், ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் இணைய வேகத்தை 100,000 மடங்கு வேகமாக இருக்கும் உலகத்திற்கு நம்மை ஒரு படி நெருக்கமாகக் கொண்டு சென்றுள்ளனர். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் டெக்னாலஜியின் (NICT) மற்றும் நெட்வொர்க் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மல்டி-கோர் ஃபைபரில் (MCF) உடன் சேர்ந்து வினாடிக்கு 1.02 பெட்டாபிட் இணைய வேகத்தை அடைந்ததாகக் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..

பெட்டாபிட் வேகம் எப்போது நம் வீட்டு ரவுட்டர்களில் கிடைக்கும்?

பெட்டாபிட் வேகம் எப்போது நம் வீட்டு ரவுட்டர்களில் கிடைக்கும்?

பெட்டாபிட் வேகம் எப்போது நம் வீட்டு ரவுட்டர்களில் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னதாக, நாம் முதலில் பெட்டாபிட் (Petabit) என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். Petabit என்பது தரவு அலகின் படி, 1,000,000 ஜிகாபைட் அல்லது 1,000,000 ஜிபிக்கு சமம் ஆகும். இவ்வளவு அதிவேகமான இணையச் சேவையை நாம் பயன்படுத்தி என்ன செய்யப் போகிறோம் என்பது தான் அடுத்த கேள்வி. குறிப்பாக, வினாடிக்கு 1 பெட்டாபிட் இணைய வேகத்தில் உலகம் என்ன செய்ய முடியும் என்றால்,

பெட்டாபிட் இணைய வேகம் எதற்காகப் பயன்படுத்தப்படும்?

பெட்டாபிட் இணைய வேகம் எதற்காகப் பயன்படுத்தப்படும்?

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் 8K ஒளிபரப்பை சுமார் 10 மில்லியனுக்கும் அதிகமான சேனல்களில் ஒரே வினாடியில் இயக்கலாம். தற்போது நேரலை வீடியோ ஒளிபரப்புகளைச் சிக்கலாக்கும் அனைத்து பின்னடைவுகள் மற்றும் ஸ்னாக்களிலிருந்து எதிர்கால தலைமுறை எந்தவித சிக்கலும் இல்லாமல் சுலபமாக விடுபடலாம். தெரியாதவர்களுக்கு, 1.02 PB என்பது ஒவ்வொரு வினாடிக்கும் சுமார் 51.499 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கிறது. விரைவில், ஒவ்வொரு நொடிக்கும் 127,500 ஜிபி டேட்டா அனுப்பப்படும்.

நான்கு ஏலியன் நாகரிகங்களால் பூமிக்கு 'தீங்கா'? பூமி தாக்கப்படுமா? ஷாக் கொடுத்த ஆய்வின் ரகசியம்..நான்கு ஏலியன் நாகரிகங்களால் பூமிக்கு 'தீங்கா'? பூமி தாக்கப்படுமா? ஷாக் கொடுத்த ஆய்வின் ரகசியம்..

பெட்டாபிட் இணையச் சேவையில் உள்ள சிறப்பம்சம் என்ன தெரியுமா?

பெட்டாபிட் இணையச் சேவையில் உள்ள சிறப்பம்சம் என்ன தெரியுமா?

இந்த சாதனையின் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பத்தை நாம் உடனடியாக நடைமுறையில் பயன்படுத்த முடியும். PB வேகத்தில் தரவை அனுப்ப, நமக்கு நிலையான ஆப்டிக் ஃபைபர் கேபிள் மட்டுமே தேவை, இது இப்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஹா, அப்படியானால், இனி இணைய வேகத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை, இனி நம்முடைய வீட்டில் இந்த வேகத்தைப் பெற்றுவிடலாம் என்று தவறாக எண்ணிவிடாதீர்கள்.

நமது வீட்டு ரவுட்டர்களில் பெட்டாபிட் இணையத் திறன் கிடைக்குமா?

நமது வீட்டு ரவுட்டர்களில் பெட்டாபிட் இணையத் திறன் கிடைக்குமா?

உண்மையைச் சொல்லப் போனால், நமது வீட்டு ரவுட்டர்களில் பெட்டாபிட் இணையத் திறன் அடுத்த சில தசாப்தங்களில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றாலும், 10 ஜிபிபிஎஸ் இணைய வேகம் என்பது எதிர்காலத்தில் நிச்சயமாக உண்மையாகிவிடும். இது நாம் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 2022 இல், இந்த பத்தாண்டு முடிவதற்குள் 10 ஜிபிபிஎஸ் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என்று ஒரு கண்டுபிடிப்பு ஆய்வகம் கூறியது கவனிக்கத்தக்கது.

வீட்டைவிட்டு வெளியே வராமல் இலவசமாக EB பில் செலுத்துவது எப்படி?வீட்டைவிட்டு வெளியே வராமல் இலவசமாக EB பில் செலுத்துவது எப்படி?

நடைமுறைக்கு சாத்தியமான 10 ஜிபிபிஎஸ் வேகம்

நடைமுறைக்கு சாத்தியமான 10 ஜிபிபிஎஸ் வேகம்

காம்காஸ்ட் ஒரு சோதனையின் போது 10 ஜிபிபிஎஸ் வரை வேகத்தை எட்டியது என்று கேபிள் லேப்ஸ் பிப்ரவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது. ஆராய்ச்சியாளர்கள் அடிப்படையில் தற்போதுள்ள ஃபைபர் சொத்துக்களை ஒரு வினாடிக்கு அதிக எண்ணிக்கையிலான பிட்களை கொண்டு செல்ல இது உதவுகிறது. இது வரும்கால தலைமுறையை எதிர்காலம் நோக்கி மிக வேகமாக நகர்த்தும் என்று நம்பப்படுகிறது. இந்த பெட்டாபிட் வேக இணையச் சேவை பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
Japan New Petabit Record Brings World Closer To 100000 Times Faster Internet Speed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X