அச்சுறுத்தும் வடகொரியா, சீனா: 100 போர் விமானம் வாங்கும் ஜப்பான்.!

இந்த இரண்டு நாடுகளின் மறைமுக அச்சுறுத்தலை கண்டு, அமெரிக்காவிடம் இருந்து 100 பேர் விமானங்களை வாங்க ஜப்பான் அரசு வாங்க திட்டமிட்டுள்ளது.மேலும், 42 எப் 35 ரக போர் விமானங்களை வாங்கவும் முனைப்பு காட்டி வ

|

சீனா ராணுவ படை பலத்தில் பெரும் சிம்ம சொப்பனமாக திகழ்கின்றது. அஞ்சாத நெஞ்சன் வடகொரிய அதிபர் ஆகியோரின் செயல்பாடுகளும் பெரும் தடால் அடியாக இருக்கின்றது.

அமெரிக்காவின் தடை உத்தரவுக்கும் ஒரு போதும் அடிபணியாத வகையில் இருக்கும் வடகொரியாவும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகின்றது.

அச்சுறுத்தும் வடகொரியா, சீனா: 100 போர் விமானம் வாங்கும் ஜப்பான்.!

இந்த இரண்டு நாடுகளின் மறைமுக அச்சுறுத்தலை கண்டு, அமெரிக்காவிடம் இருந்து 100 பேர் விமானங்களை வாங்க ஜப்பான் அரசு வாங்க திட்டமிட்டுள்ளது.

மேலும், 42 எப் 35 ரக போர் விமானங்களை வாங்கவும் முனைப்பு காட்டி வருகின்றது ஜப்பான்.

வடகொரியா:

வடகொரியா:

வட கொரியாவின் அதிபர் கிம்ஜாம் உம். சர்வதேச நாடுகளையும் தம் நாட்டில் வைத்துள்ள அணு ஆயுத்தாலும் அதிர விட்டு வருகின்றார். மேலும் அவ்வபோது நடத்தப்படும் அணு ஆயுத சோதனைகளும் அமெரிக்காவும் பெரும் தலைவலியாக இருக்கின்றது.

மூன்றாம் உலக போருக்கு வித்து:

மூன்றாம் உலக போருக்கு வித்து:

ஹைட்ரஜன் குண்டு மூலமாக, மூன்றாம் உலகப்போருக்கு வித்திட்டு, இப்போது உலகின் கவனத்தை ஈர்த்திருக்கும் கிம் ஜாங் உன், அவரது தந்தை கிம் ஜாங் இல் மறைவிற்கு பிறகு அரியணை ஏறினார். தந்தையை போலவே கிம் ஜாங் உன்னும் சொகுசு வாழ்க்கைக்கு பெயர் பெற்றவராக இருக்கின்றார்.

 ஆடிப்போன அமெரிக்கா, ஜப்பான்:

ஆடிப்போன அமெரிக்கா, ஜப்பான்:

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

பொருளாதார தடை:

பொருளாதார தடை:

அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளையும் நடத்தி வருகின்றது. மேலும் பல நாடுகளுக்கு தங்களிடம் இருக்கின்ற. கண்டம் விட்டு கண்டம் பாயும் சூப்பர் சோனிக் ஏவுகணைகளையும் வடகொரியா மறைமுகமாக கள்ளச்சந்தையிலும் விற்பனை செய்து வருகின்றது.

இதையடுத்து, அமெரிக்கா பொருளாதார தடையை வடகொரியா மீது விதித்தது. ஆனால் இன்று வரை நீக்கவில்லை.

பியாங்ஜின் ஒப்பந்தம்:

பியாங்ஜின் ஒப்பந்தம்:

பியாங்ஜின் எனவே அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரிய தற்சமயம் எச்சரித்துள்ளது.

 தொடர்ந்து அணு ஆயுத சோதனை:

தொடர்ந்து அணு ஆயுத சோதனை:

பிறகு வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை தனது பகுதிக்கு அருகே நடத்தி வருவதால், ஜப்பான் கதிலங்கியுள்ளது. அமெரிக்காவும் ஆடிபோயியுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து ஜப்பானுக்கு வடகொரியா அச்சுறுத்தலாகவே இருக்கின்றது.

சீனா அணு ஆயுத பலம்:

சீனா அணு ஆயுத பலம்:

அணு ஆயுதங்கள் முதல் நவீன போர் கப்பல்கள், ஹெலிகாப்படர்கள், நீர்மூழ்கி கப்பல் என்று அனைத்தையும் தன் வசம் வைத்துள்ளது சீனா. மேலும் ராணுவத்தில் அதிக ஆட்களையும் நியமித்துள்ளது.

அதில் தொழில் நுட்பங்களையும் முப்படைகளிலும் சீனா பயன்படுத்தி வருகின்றது. மேலும், பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன.

ஜப்பான் அருகே சீனா:

ஜப்பான் அருகே சீனா:

ஜப்பான் கடல் பகுதியில் சீனா போர் கப்பல்கள் ஊடுறுவி வருகின்றது. கப்பல் மற்றும் கடல் சார்ந்த வணிகத்திலும் ஈடுபட்டு வருகின்றது. மேலும் விமானம் தாங்கிய கப்பல்கைளையும் ஜப்பான் கடல் பகுதிக்கு அருகே சென்று நிறுத்தியும் வருகின்றது.

மேலும் வர்த்தகத்திலும் மறைமுகமாகவும் சீனா ஜப்பானுக்கு மிரட்டல் விடும் பாணியில் இருக்கின்றது. இதனால் மிரண்டு போயுள்ளது ஜப்பான்.

எப் 35 ரக விமானம் வாங்கிறது:

எப் 35 ரக விமானம் வாங்கிறது:

சீன ராணுவத்தின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் மறைமுக அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், ஏற்கெனவே அமெரிக்காவிடம் இருந்து நாற்பத்தி இரண்டு எப்.35 ரக போர் விமானங்களை வாங்க ஜப்பான் முடிவு செய்தது.

 100 போர் விமானம் வாங்கும் ஜப்பான்:

100 போர் விமானம் வாங்கும் ஜப்பான்:

இதையடுத்து, அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக 100 போர் விமானங்களை வாங்க, ஜப்பான் அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆழ்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம்:

ஆழ்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம்:

ஆழ்கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. மற்ற நாடுகளில் அருகே தனது போர்கப்பலையும் நிறுத்தி அச்சுறுத்தி வருகின்றது. போர் செய்யும் பணியில் நீர் மூழ்கி கப்பலையும் இந்திய எல்லை பகுதியின் அருகே கொண்டு வருகின்றது. இதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

சீனாவுக்கு ஒத்துழைப்பு பாகிஸ்தான்:

சீனாவுக்கு ஒத்துழைப்பு பாகிஸ்தான்:

சீனாவில் இருந்து பாகிஸ்தான் வரை சாலையும் அமைத்துள்ளது சீனா. அங்கு தனது படைகளையும் அனுப்பி வருகின்றது. மேலும், பாகிஸ்தானுக்கு அணு ஆயுதங்கள், போர் விமானங்கள் போர் கப்பலையும் கொடுத்துள்ளது. ஓரே ரேத்தில் இருந்து பாகிஸ்தான், சீனாவும் தாக்குதல் நடத்தினால், தப்பிப்பது இந்தியாவின் அதிரடியாக திட்டமிட்டுள்ளது.

வானில் வழி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி:

வானில் வழி தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி:

ஒருவேளை பாகிஸ்தானும், சீனாவும் வான்வழியில் தாக்குதல் நடத்தினால், ரஷ்யாவிடம் இருந்து ரூ.36000 கோடியில் வாங்கிய 5 எஸ்-400 ஏவுகணை (நகரும் வாகனத்தில் இருந்து ஏவுக் கூடியது) வாங்கியுள்ளது. இதனால் ஓரே நேரத்தில் 90 இடங்களில் தாக்குதல் நடத்த இயலும். மேலும் வானில் போர் விமானங்கள், டிரோன், ஏவுகணைகளையும் வானிலேயே அழித்து விடும்.

ஆழ்கடல் பகுதியிலும் ஆப்பு:

ஆழ்கடல் பகுதியிலும் ஆப்பு:

நீர்மூழ்கி கப்பல்களில் வந்து தாக்குதல் நடத்தினால், இதற்காக அமெரிக்காவிடம் இருந்து ஏறத்தாழ 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் 24 ரோமியோ ஹெலிகாப்டர்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தியாவிடம் அரிஹந்த்:

இந்தியாவிடம் அரிஹந்த்:

உள்நாட்டு உற்பத்தியில் தயாரிக்கப்பட்டுள்ள ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்க்கி கப்பல், 6 ஆயிரம் டன் எடை கொண்டது. யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு இயங்க கூடியது. ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முறையாக இயக்கப்படுகின்றது. இது எதிரி நாட்டு நீர்மூழ்க்கி கப்பலையும் தாக்கி அழித்து விடும்.

Best Mobiles in India

English summary
Japan may buy additional 100 F3 fighters Nikkei: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X