இப்படி ஒரு டிரஸ் நம்ம ஊர்ல இல்லையே.! வயிறு எரியும் உலக மக்கள்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
நம்முடைய தினசரி வேலைகளுக்கும், தேவைக்கும் ஏற்ப புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதே மனிதனின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் பல வெரைட்டியான உணவுகளில்லிருந்து, இன்று நம்முடன் பயணிக்கும் பல தொழில்நுட்ப சாதனங்கள் வரை எல்லாமே எதோ ஒரு தேவையினால் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
அப்படி மனிதர்களுக்கு தேவையான பல புதிய சாதனங்களை மற்றும் கண்டுபிடிப்புகளை இந்த உலகம் அவ்வப்போது கண்டு வியந்து வருகிறது. அந்த வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் எதிர்காலத்தில் வாழும் ஒரு நாடக ஜப்பான் திகழ்கிறது. இத்தகைய நாடு மீண்டும் ஒரு முறை புதிய கண்டுபிடிப்பு தான் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜப்பானில் கொளுத்தும் வெயிலை எதிர்த்துப் போராடும் நோக்கில் யூனிஃபார்ம் ஆடைகளில் ஒரு புதிய டிரெண்டை அமைத்திருக்கிறார் ஒருவர். தனித்தன்மை வாய்ந்த ஒரு பேட்டரி ஃபேன்-ஐ சட்டையுடன் பொருத்தி (cooling fan shirt), வெயில் காலத்தில் ஆடைக்குள் வேர்க்கும் வேர்வையை குறைக்க புதிய முயற்சியை அவர் எடுத்திருக்கிறார்.
@Rainmaker1973 என்ற பயனரால் ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இது 6 மில்லியன் பார்வைகளை குவித்துள்ளது. இவர் உருவாக்கிய இந்த புதுமையான சட்டையின் வடிவமைப்பு வெளிப்புறக் காற்றை இழுக்கும் ஒரு எலக்ட்ரிக் பேன் உடன் வருகிறது. ஆடைக்குள் உருவாகும் வெப்பத்தையும், வியர்வையையும் இந்த பேன் காற்று ஆவியாக்குகிறது.
உடலில் உருவாகும் உஷ்ண வெப்பத்தையும், வியர்வையையும் இந்த பேன் (Fan) காற்று சட்டை கைகள் வழியாக ஆவியாக வெளியிடப்படுகிறது. இந்த சட்டையில் உள்ள இந்த ஒற்றை பேன், சட்டையை அணிந்தவரின் உடலுக்கு குளிர்ச்சி விளைவை அளிக்கிறது. இதேபோல், காற்று சுழற்சியுடன் உருவாக்கப்பட்ட ஆடை மருத்துவமனை கவுனுடன் சில வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.

இது அறுவை சிகிச்சையின் போது மருத்துவருக்கு மிகவும் தேவையான வசதியைக் கொடுத்து இதுபோன்ற பேன் ஆடை பயனுள்ளதாய் அமைந்துள்ளது. இது அறுவை சிகிச்சையின் போது மிகவும் தேவையான வசதியைக் கொடுத்தது என்று அந்த ஆடையை பயன்படுத்திய மருத்துவர் (Medical) தெரிவித்திருந்தார். இதற்கு அடுத்தபடியாக, இப்போது இதுபோன்ற ஆடையை ஒரு அதிகாரி பயன்படுத்தியிருக்கும் செய்தி வைரல் ஆகியுள்ளது.
இந்த நபர் பயன்படுத்திய புதிய பேன் உடன் இருக்கும் சட்டையை டிவிட்டர் பயனர்கள் பார்த்துவிட்டு கமெண்ட் செய்துள்ளனர். அதில் ஒரு பயனர், "ஓ ஆஹா! பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இத்தகைய கண்டுபிடிப்பு இல்லாமல் போயிற்றே" என்று கமெண்ட் செய்திருக்கிறார்.
மற்றொரு டிவிட்டர் பயனர் "எப்படியோ எனக்கு இது ஆச்சரியமாக இல்லை.. காரனம், ஜப்பானியர்கள் எப்போதும் எதிர்காலத்தில் வாழ்கிறார்கள்." என்று கமெண்ட் செய்திருக்கிறார். மற்றொரு பயனர், இதுபோன்ற ஆடையை இந்தியர்களும் கட்டாயம் உருவாக்க வேண்டும் என்று கமெண்ட் செய்திருக்கிறார். டிரஸ்ஸிற்குள் ஏசி வைப்பது, போன்ற காட்சிகளை சிவாஜி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் செய்து காண்பித்துவிட்டார் என்று மற்றொரு நபர் கமெண்ட் செய்துள்ளார்.
எது எப்படியாக இருந்தாலும், இந்த வினோதமான ஐடியாவை பலர் வியந்து பார்த்து பாராட்டினாலும், இன்னும் சிலர் இதை வேடிக்கையாகவே பார்க்கிறார்கள். இருப்பினும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மக்களும் வினோதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது போன்ற வினோதமான பல ஐடியாக்களை உலகளவில் மக்கள் தொடர்நது ட்ரை செய்து தான் வருகிறார்கள் என்பதே உண்மையாகும்.
இருப்பினும், இப்படி தனித்த ஆடைகளை தயாரித்து அணிவதற்கு பதிலாக, மக்கள் கொஞ்சம் இயற்கை மீதும், நம்மை சுற்றி இருக்கும் சுற்றுப்புறத்தின் மீதும் அக்கறை கொண்டால், எதிர்காலத்தில் உருவாகும் மோசமான வானிலைகளை நாம் மாற்ற முடியும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும். சரி, இதேபோல் வினோதமான ஐடியா உங்களிடம் இருந்தால் கீழே கமெண்டில் பதிவிடுங்கள். இந்த ஆடை பற்றிய உங்களின் கருத்தையும் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








