Home
News

எல்லாரும் சூனாபானா ஆகிட முடியுமா? பாவம் ஜப்பான்.. ISRO-வை போல நிலவுக்கு போக பிளான்.. ஆனா கடைசி நேரத்துல?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சந்திரயான் 3-யின் வெற்றியானது, நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியாவிற்கு பெற்று கொடுத்துள்ளது. இருப்பினும் சந்திர கிரகத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா அல்ல!

இந்தியாவிற்கு முன்பாக 3 நாடுகள் சந்திர கிரகத்தில் வெற்றிகரமாக ட்ரையிர்னகி இறங்கி உள்ளன: இப்போது ரஷ்யா (Russia) என்று அழைக்கப்படும் சோவியத் யூனியன் (Soviet Union), அமெரிக்கா (United States) மற்றும் சீனா (China). நான்காவது இடத்தை இந்தியா பிடித்துள்ள நிலையில் ஐந்தாவது இடத்திற்கான போட்டி வலுவடைந்துள்ளது.

பாவம் ஜப்பான்.. ISRO-வை போல நிலவுக்கு போக பிளான்.. ஆனா கடைசி நேரத்துல?

அந்த இடத்தை அடைவதற்கான அத்தனை தகுதிகளும் தனது "கடும் உழைப்பால் முன்னேறிய" ஜப்பானுக்கு இருந்தாலும் கூட, அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சிக்கு (Japan Aerospace Exploration Agency - JAXA) அதிர்ஷடமும், இயற்கையும் கைகொடுப்பது போல் தெரியவில்லை.

ஏனென்றால் நிலவில் தரை இறங்கும் லேண்டர் ஒன்றுடன், விண்ணில் செலுத்தப்பட இருந்த ஜப்பானின் "மூன் ஸ்னைப்பர்" லூனார் மிஷன் ஆனது மோசமான வானிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு மோசமான விஷயம் என்னவென்றால்.. ஜப்பானின் இந்த மிஷன் ஒத்திவைக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்!

மூன் லேண்டருடன் விண்ணில் சீறிப்பாய காத்திருந்த ஜப்பானின் எச்-2ஏ ராக்கெட் ஏவுதல் ஆனது, மேல் வளிமண்டலத்தில் நிலவிய சாதகமற்ற காற்றின் காரணமாக கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது ஜப்பானின் லூனார் லேண்டிங் முயற்சிகள் ஆனது ஒத்திவைப்பில் அல்லது தோல்வியில் முடிவது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு ஓமோடெனாஷி (Omotenashi) என்கிற லூனார் லேண்டர் ஆனது நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 ​​மிஷனின் (NASA Artemis 1 Mission) வழியாக நிலவில் தரையிறக்கும் முயற்சிகள் நடந்தது. ஆனால் அந்த மிஷன் தோல்வியில் முடிந்தது மற்றும் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரலில், ஜப்பானிய ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஐஸ்பேஸ் (ispace), நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவனம் என்கிற பெருமையை அடைவதற்கான தனது லட்சிய முயற்சியில் பெரும் தோல்வியை சந்தித்தது. இந்நிறுவனத்தின் மூன் லேண்டர் ஆனது நிலவின் மேற்பகுதியில் வேகமாக மோதி செயல் இழந்தது.

"மூன் ஸ்னைப்பர்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் ஜாக்ஸா நிலவில் ஒரு குறிப்பிட்ட இலக்கிலிருந்து 100 மீட்டர் (330 அடி) தொலைவில் தரையிறங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது வழக்கமான பல கிலோமீட்டர் வரம்பை விட மிகக் குறைவு.

சந்திரனை நோக்கிய பயணத்தில் ஜப்பானுக்கு இயற்கை மட்டுமே இடையூறாக உள்ளதென்று நினைக்க வேண்டாம். தனது மூன் மிஷனுக்காக பயன்படுத்தப்படும் ராக்கெட்டுகளிலும் கூட ஜப்பான் சிக்கல்களை எதிர்கொண்டது. கடந்த மார்ச்சில் ஜப்பானின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் எச்3 ராக்கெட்டின் இரண்டாம் கட்ட இயந்திரம் செயலிழந்ததால், லிப்ட்ஆஃப் செய்யப்பட்ட பிறகு தோல்வியில் முடிந்தது.

இப்படியாக ஜப்பான், தொடர்ச்சியான முறையில் நிலவை நோக்கிய தனது லட்சிய பயணத்தில் தோல்வி அடைந்துகொண்டே வருகிறது. மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள "மூன் ஸ்னைப்பர்" ஆனது மறுபடியும் எப்போது விண்ணில் செலுத்தப்படும் என்கிற தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்த ஏவுதல் தேதியானது (Next Launch Date) இன்னும் தீர்க்கமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஜப்பானின் எச்2-ஏ ராக்கெட் ஆனது நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் (European Space Agency) இணைந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி செயற்கைக்கோள் (Research satellite) ஒன்றையும் சுமந்து செல்ல உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Japan Lunar Landing Dream Delayed Once Again Moon Sniper Launch Postponed Due To Poor Weather
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X