Home
News

விண்வெளிக்கு எலிவேட்டர் சர்வீஸ்: சோதனை முயற்சில் இறங்கியது ஜப்பான்.!

அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று நிறுவனம் அடுத்த வருடத்தில் இருந்து பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது.

By Sharath

அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூ ஆர்ஜின் என்று நிறுவனம் அடுத்த வருடத்தில் இருந்து பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறது. ஆனால் இதற்குப் பல கோடி செலவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

விண்வெளிக்கு எலிவேட்டர் சர்வீஸ்: சோதனை முயற்சில் இறங்கியது ஜப்பான்.!

பூமியில் இருந்து, பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு வெளியே சென்று மீண்டும் பாதுகாப்பாக திரும்ப மொத்தம் 2 கோடி ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று இந்த நிறுவனம் கூறியிருந்தது. பல நாடுகள் விண்வெளிக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஜப்பான் மட்டும் அதிவேகமாகச் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது.

ஜப்பான்: ஸ்பேஸ் எலிவேட்டர்

ஜப்பான்: ஸ்பேஸ் எலிவேட்டர்

ஜப்பான், ராக்கெட் இல்லாமல் விண்வெளிக்கு மனிதர்களை எடுத்துசெல்லும் எலிவேட்டரை ஒன்றை விரைவில் சோதனை செய்யப்போகிறது. ஜப்பான் அடிப்படையிலான குழு, சர்வதேச விண்வெளி நிலையம் அருகே ஸ்பேஸ் எலிவேட்டரை ப்ரோடோடைப் முன்மாதிரியைச் சோதனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அறிவியல் புனைகதை நாவல்களில் கூறப்படுவது போன்று பூமியையும் சிறுகோள்களையும் பல ஆயிரம் கிலோமீட்டர் கேபிள் மூலம் இனைக்க முடியாது என்றாலும், குறைந்தபட்ச அடிப்படை சிந்தனை இது போலத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஐ.எஸ்.எஸ்

ஐ.எஸ்.எஸ்

உள்ளூர் செய்தித்தாள் படி, ஷிஸுக பல்கலைக்கழகத்தின் பீஜிங் ஆஃப் இன்ஜினியரிங் நிறுவனம் உருவாக்கிய இரண்டு சிறிய கனரக செயற்கைக்கோள்களை ஐ.எஸ்.எஸ்-லிருந்து அனுப்பப் படவுள்ளது. இரண்டு கனரக செயற்கைக்கோள்களும் கேபிள் மூலம் சுமார் 10m நீளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு செயற்கைக்கோளும் சக்திவாய்ந்த ஒரு மோட்டார் மூலம் இயக்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு செயற்கைக்கோளிலும் கேமராக்கள் இணைக்கப்பட்டு, செயற்கைக்கோளின் முன்னேற்றப் பதிவு மற்றும் விண்வெளியில் சோதனை முயற்சியைக் கண்காணிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

1895 இல் ஸ்பேஸ் எலிவேட்டர்

1895 இல் ஸ்பேஸ் எலிவேட்டர்

முதலில் ஸ்பேஸ் எலிவேட்டர்க்கான உதயம் 1895 இல் ரஷ்ய விஞ்ஞானி கொன்ஸ்டன்டின் டீசியல்கோவ்ஸ்க்கி என்பவர் மூலம் உருவானது. அதுவும் அவருக்கு இந்தச் சிந்தனை பாரிஸ் இல் இருக்கும் ஈபிள் டவர் பார்த்தபின் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

100 ஆயிரம் கிலோமீட்டர் கேபிள்

100 ஆயிரம் கிலோமீட்டர் கேபிள்

ஸ்பேஸ் எலிவேட்டர் பூமியிலிருந்து விண்வெளில் உள்ள சிறு கோள் அல்லது ஸ்பேஸ் ஸ்டேஷன்னுடன் இணைக்கப்பட்டுப் பயன்படுத்தும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் எலிவேட்டர் பயன்படுத்துவதற்கு 100 ஆயிரம் கிலோமீட்டர் அளவில் சூப்பர் வலிமை கொண்ட உலோகத்தினால் ஆனா கேபிள்கள் இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை என்பதே உண்மை.

பிரேத்தியேக சொந்த ஈர்ப்பு தொழில்நுட்பம்

பிரேத்தியேக சொந்த ஈர்ப்பு தொழில்நுட்பம்

ஸ்பேஸ் எலிவேட்டர், மனிதர்கள் மற்றும் சரக்குகளை பாதுகாப்பாகக் குறைந்த செலவில் விண்ணுக்கு அடுத்துச்செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். ஜப்பான் சோதனை முறைப் படி ஸ்பேஸ் எலிவேட்டர் விண்வெளியில் பயணிக்க ஏற்றவாறு அதற்கென்று தனி பிரேத்தியேக சொந்த ஈர்ப்பு நிலை வழங்கப்பட்டிருக்கிறது, இத்துடன் இத்தகைய தொழில்நுட்பம் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேஸ் எலிவேட்டர் சோதனை

ஸ்பேஸ் எலிவேட்டர் சோதனை

செப்டம்பர் 11 ம் தேதி ஜப்பானின் தானெக்ஷிமா விண்வெளி மையத்தில் இருந்து ISS க்கு இந்த ஸ்பேஸ் எலிவேட்டர் சோதனை நடத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனை முயற்சி வெற்றி அடைந்தாலும் இன்னும் ஏகப்பட்ட தடைகள் இருக்கிறது, முக்கியமாக மிகப்பெரிய சவாலானது இயந்திர அழுத்தத்தைச் சமாளிக்கக்கூடிய திறன் கொண்ட ஒரு பொருளை உருவாக்குவைத்து தான் என்பதே உண்மை.

Best Mobiles in India

English summary
Japan Is Testing An Elevator That Could One Day Take Humans Into Space Without A Rocket : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X